தொழுகையில் ஒரு ரக்அத்தில் ஓதும் குர்ஆனிய வசனங்கள்..

470. ஒருவர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து ‘நான் முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதினேன்’ என்றார். (முஃபஸ்ஸல் என்பது ‘காஃப்’ அத்தியாயம் முதல் குர்ஆனின் கடைசி வரை உள்ள அத்தியாயங்களாகும். இவ்வளவு அத்தியாயங்களாகும். இவ்வளவு அத்தியாயங்களையும் ஒரே ரக்அத்தில் ஓதியதாகக் கூறிவிட்டு இது சரியா? என்று அவர் கேள்வி கேட்டார்.) ‘கவிதைகளைப் படிப்பது போல் அவசரம் அவசரமாகப் படித்தீரா? நபி (ஸல்) அவர்கள் ‘முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களில் ஒரே மாதிரியான அளவில் அமைந்த இரண்டிரண்டு அத்தியாயங்களை ஒரே ரக்அத்தில் ஒதியதை நான் அறிந்துள்ளேன்’ என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் சேர்த்து ஓதிய முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களையும் குறிப்பிட்டார்கள்.

புஹாரி: 775 அபூவாயில் (ரலி)

471. (குர்ஆனின் 54 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃபஹ்ல் மின்(ம்) முத்தகிர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள்.

புஹாரி ;4869 இப்னு மஸ்ஊத் (ரலி)


472. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்து அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா (ரலி) தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள். பிறகு, ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்?’ என்று அபுத்தர்தா (ரலி) கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘நாங்கள் அனைவரும் தாம்” என்று பதிலளித்தோம். அபுத்தர்தா (ரலி), ‘(இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா (ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். ‘வல்லைலி இஃதா யஃக்ஷா” எனும் வசனத்தில் இப்னு மஸ்ஊத் (ரலி) எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்கமா (ரஹ்), ‘வஃத்தகரி வல் உன்ஸா’ என்றே ஓதினார்கள்” என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா (ரலி), ‘நான் சாட்சியம் கூறுகிறேன்: நபி (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) ‘வமா கலக்கஃத் தக்கர வல் உன்ஸா’ என்றே நான் ஓதவேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களைப் பின்பற்றமாட்டேன்” என்று கூறினார்கள்.

புஹாரி : 4944 இப்ராஹீம் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.