தொழக்கூடாத நேரங்கள்..

473. ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

புஹாரி: 581 உமர் (ரலி)


474. ”ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உயரும் மறையும் வரை எந்தத் தொழுகையும் இல்லை”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 586 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


475. ”சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ உங்கள் தொழுகைக்காக நாடாதீர்கள்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 582 இப்னு உமர் (ரலி)

476. சூரியனின் தலைப்பகுதி உதயமாகிவிட்டால் அது முழுமையாக வெளிப்படும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள். சூரியனின் தலைப் பகுதி மறைந்துவிட்டால் அது (முழுமையாக) மறைந்து விடும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3272 இப்னு உமர் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.