Category Archives: இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
அத்தியாயம்-2 உயிரும் வாழ்க்கையும்.
நாம் நமக்குள் கொண்டிருக்கும் ‘உயிர்’ இறைவனின் பூரண ஞானத்தின் புனிதமான எடுத்துக்காட்டாகும். இறைவனின் அதிகாரத்தின் – வல்லமையின் இணையற்ற உதாரணமாகும். அவனது படைக்கும் திறனின் பாங்கான மேற்கோளாகும். உயிரை தருபவனும், வாழ்க்கையை உருவாக்குபவனும் அவனே! அவனே படைத்தவன்! இந்த உலகில் நாம் காணும் எதுவும் எதேச்சையாகத் தோன்றியவையல்ல. எவரும் தன்னைத்தானே படைத்துக் கொள்வதில்லை. அல்லது வேறு … Continue reading
அத்தியாயம்-2 இறைத்தூது.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிடுவான் வேண்டி எண்ணற்ற நபிமார்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி – இறைத்தூதர் அனுப்பப்பட்டுள்ளார். இறைவனின் தூதர்கள் அத்தனை பேரும் சீரிய ஒழுக்கங்களின் சிகரங்களாய் திகழ்ந்தனர். அவர்களை இறைவன், தனது வழிகாட்டுதலை மனிதர்களுக்கு வழங்குவதற்காக பயிற்றுவித்தான். அவர்களது நேர்மை, நாணயம், அறிவின் ஆழம் … Continue reading
அத்தியாயம்-2 இறையச்சம்.
நன்மையான செயல் – நல்லன செய்தல், (ஈமான்) நம்பிக்கை, இவைகளின் கீழ் விவாதித்தவை இறையச்சத்திற்கும் பொருந்தும். இறையச்சம் எனப்படுவது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல. அல்லது நமது வசதிக்குத் தக்கப்படி வைத்துக்கொண்டதும் அல்ல. இறையச்சம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இங்கேயும் திருக்குர்ஆனே நமது முதல் ஆதாரமாக பயன்படும். திருக்குர்ஆன் இறையச்சம் மிக்கோரைப்பற்றி குறிப்பிடும்போது: … Continue reading
அத்தியாயம்-2 நேர்மை (பிர்ரு) நற்செயல்கள்.
எந்தவிதமான பற்றும் பிடிப்பும் இல்லாமல் வைக்கப்படும் நம்பிக்கையை இஸ்லாம் வெறுக்கின்றது. வெற்றுச் சடங்குகளையும் வீண் சம்பிரதாயங்களையும் இஸ்லாம் மறுக்கின்றது. செயலில் வராத நம்பிக்கையை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. (நேர்மை) – நற்செயல்கள் என்றால் என்ன என்பதை திருக்குர்ஆனின் ஒரு வசனம் தெளிவாக விளக்குகின்றது. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் … Continue reading
அத்தியாயம்-2 சில அடிப்படை கோட்பாடுகள்.
நம்பிக்கை: (ஈமான்) இறைவன் ஒருவனே என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்றும் நம்புகின்றவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்று நம்மில் பலர் எண்ணலாம். ஆனால் நம்பிக்கை (ஈமான்) என்பது இத்துணை குறுகியதன்று. அது இதனினும் விசாலமானது. ஈமான் என்பது சில சடங்கு, சம்பிரதாயங்களின் தொகுப்பல்ல. பெயரளவில் வைக்கப்படுகின்ற நம்பிக்கை ஈமானாகி விடாது. ஈமான் … Continue reading
அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-2)
11. இறைவன் தந்திருக்கின்ற வழிகாட்டுதல்களைக் கொண்டு, மனிதன் தன்னுடைய ஈடேற்றத்திற்கு தானே முயற்சிகளை மேற்கொண்டு வழிதேடிக் கொள்ள வேண்டும் என்று ஒரு உண்மையான முஸ்லிம் நம்புகின்றார். ஒருவர் தான் ஈருலக வாழ்விலும் வெற்றி பெறவேண்டும் என்றால் அவர் தனது நம்பிக்கை, செயல், நடைமுறை இவைகள் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு முயற்சிக்க வேண்டும். செயலில் இல்லாத நம்பிக்கை, … Continue reading
அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-1)
உண்மையான முஸ்லிம் ஒருவர் பின்வருவனவற்றை நம்புகிறார். 1. இறைவன் ஒருவனே. அவன் மேலானவன், நிரந்தரமானவன், முடிவற்றவன், வல்லவன், கருணையுள்ளவன், அளவற்ற அன்புடையவன், படைத்தவன், பரிபாலிப்பவன், பாதுகாப்பவன். இவற்றை ஒரு முஸ்லிம் பரிபூரண நம்பிக்கைக் கொள்கிறார். இந்த நம்பிக்கை உறுதிபெற இறைவனையே முழுமையாக நம்பியிருக்க வேண்டும். அவனிடமே தஞ்சம் புக வேண்டும். அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்திட வேண்டும். … Continue reading
அத்தியாயம்-1. இஸ்லாம் என்பதன் பொருள்
இஸ்லாம் என்ற சொல்லானது ‘சில்ம்’ என்ற அரபி வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அதற்குப் பல பொருள்களுண்டு. அவற்றில் சில சாந்தி, பரிசுத்தம், பணிவு, கீழ்படிதல் ஆகியவை ஆகும். மதம் என்ற கண்ணோட்டத்தில் இஸ்லாம் என்ற சொல்லுக்கு இறைவனுடைய ஆணைக்குப் பணிதல் என்றும், அவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிதல் என்றும் பொருள். இஸ்லாம் என்ற சொல்லின் மூலப்பொருளுக்கும், மதம் … Continue reading
அத்தியாயம்-1. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! அல்லாஹ் (இறைவன்)
இறைவனைப் பற்றிய அறிவும், அவன் மீது வைக்கப்படும் நம்பிக்கையுமே இஸ்லாத்தின் அடிப்படைகளாக அமைகின்றன. இஃது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே இதனை தெளிவுபடுத்திட முழுமையானதொரு விவாதம் தேவைப்படுகின்றது. இங்கே சில எளிய எடுத்துக்காட்டுகள் தரப்படுகின்றன. நாம் விவாதத்திற்காக எடுத்துக்கொண்ட பொருள்பற்றி ஏற்கனவே அறிந்தவர்களுக்கு இது மிகவும் சாதாரணமாகத் தோன்றலாம். இவர்களை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். … Continue reading
இஸ்லாம் உங்கள் பார்வைக்கு (ஆசிரிய முன்னுரை)
வெளியீடு: International Islamic Federation Of Student Organizations நூல்: இஸ்லாம் உங்கள் பார்வைக்கு மூல நூல் ஆசிரியர்: ஹமுத அப்த் அல் அத்தி தமிழில்: மு. குலாம் முஹம்மத் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம். முன்னுரை. இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளை ஒரு சாதாரண வாசகர் புரிந்திட உதவுவதே இந்த நூலின் … Continue reading