Category Archives: இறுதி இறை வேதம்

குதர்க்க வாதமுடைய செவிடர்கள்!

“நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கைசெய்வதெல்லாம் வஹீமூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்;எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும்போது, (அவர்கள் நேர்வழியைப் பெறும்) அந்தஅழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள். உம்முடைய இறைவனிடமிருந்துள்ளவேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத்தீண்டுமானாலும், “எங்களுக்குக் கேடு தான்! திட்டமாகநாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்றுஅவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள். இன்னும், கியாம நாளில் மிகத் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on குதர்க்க வாதமுடைய செவிடர்கள்!

இறை சாபத்துக்குள்ளான மன எரிச்சல்!

3:118-120 இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்களை உங்கள் அந்தரங்க நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பலவீனங்களை பயன்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் நழுவவிடுவதில்லை. உங்களைத் துன்புறுத்தக்கூடியது அவர்களுக்கு விருப்பமானதாய் இருக்கிறது. அவர்களுடைய வாய் மூலமாகவே அவர்களுடைய காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது. இன்னும் அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருப்பவை (இவற்றை விட) … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறை சாபத்துக்குள்ளான மன எரிச்சல்!

பிரகாசத்தின்பால் அழைப்பு!

“ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி என நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?” “நீங்கள் என்னையே வணங்க வேண்டும். இதுதான் நேரான வழியென்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?”“(அவ்வாறிருந்தும்) உங்களில் பெருந்தொகையினரை அவன் நிச்சயமாக வழிகெடுத்து விட்டான். இதனை நீங்கள் அறிந்து கொள்ள வில்லையா?”. (36:60-62)“என் அடியார்களிடத்தில் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on பிரகாசத்தின்பால் அழைப்பு!

உலக அலங்காரம்?

(நபியே!) உம் இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை (உள்ளது உள்ளபடி) எடுத்துச் சொல்வீராக! அவனுடைய வசனங்களை மாற்றுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. மேலும், (யாருக்கு வேண்டியாவது அவற்றை நீர் மாற்றினால்) அல்லாஹ்விடமிருந்து தப்பியோடுவதற்கு எந்தப் புகலிடமும் உமக்குக் கிடைக்காது. எவர்கள் தம்முடைய இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைக்கிறார்களோ, அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on உலக அலங்காரம்?

அழிவுக்குள்ளான ஊர்களிலிருந்து நாம் பாடம் பெற்றோமா?

நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு பற்பல உதாரணங்களைக் கூறி விதவிதமாக விளக்கியுள்ளோம். ஆயினும், மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். மனிதர்களிடம் வழிகாட்டுதல் வந்தபோது அதனை ஏற்றுக் கொள்வதிலிருந்தும், தம்முடைய இறைவனிடம் பாவமன்னிப்பு கோருவதிலிருந்தும் அவர்களைத் தடுத்தது எது…? முந்தைய சமூகங்களுக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கும் ஏற்படுவதை அல்லது இறைதண்டனை தங்கள் கண்முன் வருவதை அவர்கள் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அழிவுக்குள்ளான ஊர்களிலிருந்து நாம் பாடம் பெற்றோமா?

அநியாயம் புரியாதீர்

43:36. எவனொருவன் அர் ரஹ்மானின் (அருளாளன் அல்லாஹ்வின்) நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.43:37. இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.43:38. எதுவரை என்றால், … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அநியாயம் புரியாதீர்

நம்பிக்கையுடன் நன்மை செய்வோருக்கான நாளைய கூலி!

52:17. நிச்சயமாக, பயபக்தியுடைவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள். 52:18. அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாக இருப்பார்கள் – அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். 52:19. (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.” 52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நம்பிக்கையுடன் நன்மை செய்வோருக்கான நாளைய கூலி!

விளங்கவும், செயல்படுத்தவும் எளிதான இறைவேதம்!

54:17. நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவுப்படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? 39:27. இன்னும் இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம். 3:138. இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கிறது. 6;90. … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on விளங்கவும், செயல்படுத்தவும் எளிதான இறைவேதம்!

உண்மையான கல்வி ஞானம் எது?

2:204. (நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கின்றான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி (சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாக கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.2:206. “அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on உண்மையான கல்வி ஞானம் எது?

தன்னந்தனியே நிற்கும் நாள்.

19:66. மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மீண்டும் எழுப்பப்படுவேனா?” என்று. 19:67. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்து பார்க்க வேண்டாமா? 19:68. ஆகவே, (நபியே) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தன்னந்தனியே நிற்கும் நாள்.