Category Archives: வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
கப்றுகளில் பள்ளி கட்டலாமா?
கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் … Continue reading
நபியைக் கொண்டு ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் வஸீலா தேடினார்களா?
நபி (ஸல்) அவர்களைக் கொண்டு ஷபாஅத் தேடுதல் அன்னார் வாழ்ந்திருந்த காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களைக் கொண்டு பிரார்த்தித்தலும், சத்தியம் செய்து கேட்டலும் அவர்கள் இறந்ததற்கப்பால் அனுமதிக்கப் படாதது போன்று நபியவர்கள் மறைந்திருக்கும் போதும், அவர்கள் முன்னிலையில் வைத்தும் இப்படிச் செய்யப்பட மாட்டாது. அன்றி இது விஷயத்தில் நபிமார்களைப் போன்றுதான் மற்றவர்களும். இவர்களைக் கொண்டெல்லாம் வஸீலா … Continue reading
முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு மழைத்தேடிப் பிரார்த்தித்த சம்பவம்
ஷாம் (ஸிரியா, லெபனான்) பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு பிராத்தித்து மழைத் தேடினார்கள். துஆவின் போது: இறைவா! எங்களின் மேன்மைக்குரியவரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம் என்று பிரார்த்தித்து விட்டு, யஸீதே! உங்கள் கையை உயர்த்தி எங்களுக்காகப் பிரார்த்தியும் என்றார்கள். உடனே யஸீதும், அவருடன் … Continue reading
ஷபாஅத் விஷயத்தில் ஸுன்னத் ஜமாத்திற்கு மாறுபட்டவர்களின் அபிப்பிராயம்
ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டு அப்பாற்பட்ட முஃதஸிலாக்களும், காரிஜிய்யா வகுப்பாரைச் சேர்ந்த வயீதிய்யாப் பிரிவினரும் மறுமையில் நபிமார்களுக்குரிய ஷபாஅத்தை மூமின்களின் பதவியை உயர்த்துவதற்காக மட்டுமே என்று ஒதுக்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பதவியை உயர்த்தும் விஷயத்தில் மட்டும்தான் மறுமையில் ஷபாஅத் செய்வார்களாம். இப்பிரிவினரில் மற்றும் சிலர் நபிகளின் ஷபாஅத்தை அடியோடு மறுக்கிறார்கள். பெருமானாருக்கு ஷபாஅத்தே … Continue reading
வினாவும் விடையும்
வினா: இஸ்லாமிய மார்க்கத்தின் இமாம்களான அறிஞர்களிடம் கீழ்வரும் மஸ்அலா பற்றி கேட்கப்படுகிறது. அதாவது நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு வஸீலா தேடி அவர்களிடம் ஷபாஅத்தை வேண்டுவதில் அனுமதிக்கப்பட்டதும், அனுமதிக்கப்படாததுமான முறைகளையும், அதன் விதிகளையும் விளக்க வேண்டும்.
தூய இஸ்லாத்தின் இரண்டாவது அடிப்படை
அல்லாஹ் தன் திருத்தூதர் வாயிலாக நமக்கு விதித்தவற்றைக் கொண்டு நாம் அவனை வணங்க வேண்டும். அப்படியானால் வாஜிப் (கடமை), முஸ்தஹப் (ஸுன்னத்) போன்ற விதிகளுக்குட்பட்ட வழிபாடுகளை நாம் புரிய வேண்டும். இந்த அடிப்படையில் நாம் பார்ப்போமானால் சிருஷ்டிகளையும், மய்யித்துகளையும், மறைந்தவர்களையும் அழைத்து பிரார்த்தித்து அவற்றிடம் உதவி தேடினால் (அதை அல்லாஹ், ரஸூல் யாருமே கடமை என்றோ, … Continue reading
இஸ்லாத்தின் அடிப்படைகள்
தூய இஸ்லாத்திற்கு இரண்டு அடிப்படைகள் உண்டு. ஒன்று: லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தூதராவார்கள்) என்ற திருக்கலிமாவை வாழ்க்கையில் மெய்ப்பித்துச் செயல்படுத்திக் காட்டுதல். அதிலும் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்வுடன் யாரையும் இணையாக்காமல் இருத்தல். அப்படியென்றால் அல்லாஹ்வை நீ நேசிப்பது போல வேறு எந்த சிருஷ்டியையும் நேசிக்கலாகாது. அல்லாஹ்வை … Continue reading
நபியின் துஆவைக் கொண்டு வஸீலா தேடுவது எப்படி?
நபிகளின் பிரார்த்தனையாலும், சிபாரிசாலும் வஸீலா தேடுவதற்கு இரு முறைகள் இருக்கின்றன. ஒன்று: நபிகளிடம் சென்று அவர்கள் தமக்காக துஆச் செய்ய வேண்டுமென்றும், ஷபாஅத் செய்ய வேண்டுமென்றும் வேண்டிக் கொள்வது. அப்போது அவர்கள் வேண்டியவனுக்காக துஆவும், ஷபாஅத்தும் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்தபோது நடைபெற்ற வஸீலா தேடுதல் என்பது இதுவேயாகும். மறுமை நாளன்றும் இப்படித்தான் அவர்களிடம் … Continue reading
நபிமார்களின் தன்மைகளுக்கும், அல்லாஹ்வின் தன்மைகளுக்குமிடையில் உள்ள வித்தியாசம்
நபிமார்கள் இறைதூதர்களாவார்கள். அல்லாஹ்வின் ஏவல்கள், விலக்கல்கள், வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், மற்றும் செய்திகள் அனைத்தையும் நம்மீது எத்தி வைக்கும் இடையாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்ற அனைத்தையும் உண்மையென ஏற்று, அவற்றிற்கொப்ப வழிபட்டு செயல்படுதல் நம்மீது கடமையாகும். எந்த விதமான வேற்றுமையும் காட்டாமல் இவ்விதமாக நபிமார்கள் அனைவரைக் கொண்டும் விசுவாசம் கொள்ள வேண்டும். எந்த ஒரு நபியையும் ஒருவன் … Continue reading
ரஸூல்மார்களின் பணிகள் யாவை?
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் போதனைகளை மக்களுக்குச் சேர்த்து வைக்கின்ற ஓர் இடையாளராக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் ஹிதாயத் எனும் நேர்வழியை அடியார்களின் உள்ளத்தில் சேர்த்து வைக்கும் பொறுப்புரிமை அல்லாஹ்வுடையது. அது நபியவர்களுக்கு உரியது அல்ல. அதற்கு சக்தி உடையவன் அல்லாஹ் ஒருவனே. திருத்தூதர்களால் இவ்வாறான வேலைகளைச் செய்ய முடியாது.