Author Archives: Jafar
மற்றவரின் பாவச் சுமையை நான் சுமப்பேனா?
அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருட்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் – பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே கேட்டை தேடிக் கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பி செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி … Continue reading
அந்த எழுபதினாயிரம் பேர் யார்? கவனியுங்கள்!
131- நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், (பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து … Continue reading
களங்கமில்லா ஈமானுக்கு பரிசு நேர்வழியே!
எவர் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்த வில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியை பெற்றுக் கொண்டவர்கள். (அல்குர்ஆன்: 6:82)
பௌர்ணமி நிலவின் பிரகாசம் வேண்டுமா?
130- நிச்சயமாக என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர், அல்லது ஏழு லட்சம் பேர் (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அறிவிப்பாளர் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களுக்கு இந்த இரண்டில் எது என்று (உறுதியாகத்) தெரியவில்லை-அவர்களின் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு ஒரே சீராக நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாதவரை முதல் நபர் நுழையமாட்டார். (அனைவரும் ஓரணியில் நுழைவர்) … Continue reading
அல்லாஹ் அல்லாதவனை அழைப்பவனுக்கு உதாரணம்
அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: “மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகின்றது. அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்; அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ, அவையாவும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும், ஓர் ஈயைக் கூட சிருஷ்டிக்க முடியாது. (ஈயை சிருஷ்டிப்பதென்ன?) ஓர் ஈ அவர்களுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்ட போதிலும் அதனிடமிருந்து அதனை விடுவிக்கவும் … Continue reading
நமது காரியங்களை ஒப்படைக்க தகுதியான அல்லாஹ்!
நபி மூஸா (அலை) (தம் சமூகத்தவரை நோக்கி) என்னுடைய சமூகத்தவரே! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசித்து உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் வழிப்படுகிறவர்களாக (முஸ்லிமாக) இருந்தால் அவனை முற்றிலும் நம்பி விடுங்கள். அவனிடமே உங்கள் காரியங்களை ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினார்கள்.” (அல்குர்ஆன்: 10:84)
கேள்வி கணக்கின்றி சுவனம் புகும் விசுவாசிகள்
129- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம், பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்தபடி (விசாரணையின்றி சொர்க்கத்துக்குள்) நுழைவார்கள் என்று கூறினார்கள். உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல் அசதீ (ரலி) அவர்கள் தம் மீதிருந்த கோடு போட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து அல்லாஹ்பின் … Continue reading
இரத்த உறவை காய்ந்து போகச் செய்யலாமா?
128- இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர், என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும் தாம் என நபி (ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். ஆயினும் அவர்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போகவிடாமல்) பசுமையாக்குவேன் என்று கூறியதாக அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளது. அதாவது, அவர்களின் … Continue reading
இறைவனிடத்தில் நன்மை பலனுடையது எது?
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்க கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 18:46)
மிக இலேசான நரகவேதனை
127- மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரது மூளை கொதிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-6562: நுஃமான் பின் பஷீர்(ரலி)