Author Archives: Jafar
இரக்கமும், அன்பும் உள்ள இறைவன்!
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (அல்குர்ஆன்: 22:65)
சிறு குழந்தைகளின் சிறுநீர்……..
163- நபி (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டு வரப்படுவதுண்டு. அப்போது குழந்தைகளுக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் தெளித்தார்கள். (அதிகமாகத் தண்ணீர் ஊற்றி) அதனைக் கழுவவில்லை. … Continue reading
மன்னிக்கும் மாண்புடையோன்!
எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 4:17)
5. முன்னோர்கள் செய்தது மார்க்கமாகி விடாது
ஒரு சிலருக்கு தெளிவு ஏற்பட்டாலும் அவரை ஷைத்தான் இவ்வாறு குழப்புவான். ‘தலைமுறை தலைமுறையாக நமது முன்னோர்களும், தாய், தந்தையரும் நல்லடியார்களிடம் பிரார்த்தித்து வந்திருக்கிறார்களே, அவர்கள் செய்தவை அத்தனையும் தவறானவையா? அவர்கள் எல்லோரும் பாவிகளா? அவர்கள் எல்லோரும் நரகத்திற்குத்தான் செல்வார்களா? என்று ஷைத்தான் சிலரின் உள்ளத்தில் முன்னோர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி, அவர்கள் குர்ஆன் மற்றும் … Continue reading
சிறுநீர் கழித்த இடத்தை கழுவுதல் பற்றி….
162- ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித்தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணிர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (தண்ணிர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது. புகாரி-6025: அனஸ் பின் மாலிக் … Continue reading
வானமும் பூமியும் படைத்தல் வீண் விளையாட்டா?
மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்க வில்லை. வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்து கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம். (அல்குர்ஆன்: 21:16-17)
சிறிய ஷிர்க்கும் அதன் வகைகளும்
இஸ்லாம் அனுமதிக்காத வஸீலாக்கள் அனைத்தும் பெரிய ஷிர்க்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும். இது இபாத(வணக்க)த்தின் அந்தஸ்தை அடையாது. இதனைச் செய்தவனை அது இஸ்லாத்திலிருந்து வெளியேற்றி விடாது. எனினும் இது பெரும்பாவங்களில் அடங்கும். இலேசான முகஸ்துதி:- (நன்மையானவற்றைப்) படைப்புகளுக்காகச் செய்தல், அல்லாஹ்வுக்காக வணக்கத்தைப் புரிந்து அவனுக்காகவே தொழுகின்ற ஒரு முஸ்லிம் தனது வணக்கங்களையும், தொழுகையையும் மனிதர்கள் புகழ வேண்டும் … Continue reading
தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்தல் பற்றி…
161- ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-239: அபூஹூரைரா (ரலி)
உனக்கு நீயே நன்மை செய்து கொள்கிறாய்
“எவன் இறைவனுக்கு நன்றி செலுத்தினானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை. நிச்சயமாக என் இறைவன் எவருடைய தேவையற்றோனும், மிக்க கண்ணியமானவனுமாக இருக்கிறான்”. (அல்குர்ஆன்: 27:40)
மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-3)
தவாஃப் (வலம் வருதல்) மாதவிடாய்ப்பெண் கஃபத்துல்லாவில் பர்லான, நபிலான வலம் வருவது ஹராமாகும். அப்படி வலம் வந்தால் அது கூடாது. ஸபா, மர்வாவிற்கிடையே ஓடுவது, அரபாவிலே தங்குவது, முஸ்தலிபா, மினாவில் இரவு தங்குதல், கல் எரிதல் இவைகளும், இவைகளல்லாத ஹஜ், உம்ராவின் ஏனைய எல்லாச் செயல்களும் அவளுக்கு ஹராமல்ல. இதன் பிரகாரம் ஒருபெண் சுத்தமானவளாக வலம் … Continue reading