Author Archives: Jafar
பெருநாள் தினத்தில் வீர விளையாட்டுகள்
512. புஆஸ் (எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூபக்ர் (ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். ‘அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?’ என்று அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி (ஸல்) … Continue reading
முகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்
‘முகத்தில் அடிப்பதையும் முகத்தில் சூடு போடுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்’ என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)
பெருநாள் தொழுகைகளில் மாதவிடாய்ப் பெண்கள்
511. ‘இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்து வருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்’ என்றும் கட்டளையிடப்பட்டோம். நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் … Continue reading
இரு பெருநாள் தொழுகைகள்
505. நான௠நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯à®à®©à¯à®®à¯ ஠ப௠பà®à¯à®°à¯ (ரலி), à®à®®à®°à¯ (ரலி), à®à®¸à¯à®®à®¾à®©à¯ (ரலி) à®à®à®¿à®¯à¯à®°à¯à®à®©à¯à®®à¯ நà¯à®©à¯à®ªà¯à®ªà¯ பà¯à®°à¯à®¨à®¾à®³à¯ தà¯à®´à¯à®à¯à®¯à®¿à®²à¯ பà®à¯à®à¯à®à¯à®¤à¯à®¤à¯à®³à¯à®³à¯à®©à¯. à®à®°à¯ நிà®à®´à¯à®¤à¯à®¤à¯à®µà®¤à®±à¯à®à¯ à®®à¯à®©à¯ தà¯à®´à¯à®à¯ நà®à®¤à¯à®¤à¯à®ªà®µà®°à¯à®à®³à®¾à® ஠வரà¯à®à®³à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®©à®°à¯. ஠தன௠பிறà®à¯ à®à®°à¯ நிà®à®´à¯à®¤à¯à®¤à¯à®µà®¾à®°à¯à®à®³à¯. நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ பà¯à®±à®ªà¯à®ªà®à¯à®à®¾à®°à¯à®à®³à¯. ஠வரà¯à®à®³à¯ à®®à®à¯à®à®³à¯à®¤à¯ தம௠à®à¯à®à®³à®¾à®²à¯ ஠மரà®à¯ à®à¯à®¯à¯à®¤à®¤à¯ à®à®©à¯à®±à¯à®®à¯ நான௠… Continue reading
அல்லாஹ் கூறும் உதாரணங்களில் சில..
ஈயைக் கூட.. மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது, எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும், அவர்களிடமிருந்து (ஒரு ஈ) ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால், அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் … Continue reading
ஜும்ஆ ஸுபுஹ் தொழுகையில் என்ன ஓத வேண்டும்?
504. நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் ஸஜ்தா’வையும் ‘ஹல்அதா அலல் இன்ஸான்’ என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர். புஹாரி: 891 அபூஹூரைரா (ரலி)
அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூலையும் எவ்வாறு நேசிப்பது?
ஒருவன் அல்லாஹ்வை நேசிக்கின்றவனாக ஆவதற்கு, அவனுடைய ரஸூலைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதைப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான். “நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாபங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மன்னிப்போனும் மிக்க இரக்கமுடையோனுமாக இருக்கிறான் என்று (நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறும்” … Continue reading
இமாமின் குத்பா நடந்துகொண்டிருந்தாலும் 2 ரக்அத் தொழுதல்
502. ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது விட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து இரு ரக்அத்துகள் தொழுவீராக!” என்று கூறினார்கள். புஹாரி :930 ஜாபிர் (ரலி) 503. ”உங்களில் ஒருவர் இமாம் உரை நிகழ்த்தும்போது வந்தால் … Continue reading
குர்ஆனிய வசனம் 62:11 இறங்கியதின் பின்னணி
500. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றி, ஒட்டகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்றுவிட்டனர். பன்னிரென்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், ‘அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை … Continue reading
ஜூம்ஆவில் இரு குத்பாக்கள்..
499. நீங்கள் இப்போது செய்து வருவது போன்றே நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் உரை நிகழ்த்திவிட்டுப் பிறகு உட்கார்ந்து, பிறகு எழக்கூடியவர்களாக இருந்தனர். புஹாரி :920- இப்னு உமர் (ரலி)