Tag Archives: வாழ்வு
அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-4
1. முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த உலகத்து மக்களுக்காக ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வந்தார்கள். அதுபோலவே வாழ்ந்து காட்டினார்கள். அவர்கள் மேற்கொண்ட திருமண வாழ்க்கையும் மிகவும் அழகிய முறையில் குடும்ப வாழ்வை படம் பிடித்துக் காட்டுவதாகும். அவர்கள் அன்பு நிறைந்த ஒரு கணவராக இருந்தார்கள். மனையறத்தின் கடமைகளை மாண்புற நிறைவேற்றினார்கள். மன்னிக்கும் மாண்பைக்கொண்டு … Continue reading
அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (1)
முஸ்லிம்களால் மறக்கப்பட்டுவிட்ட – மற்றவர்களால் முற்றிலும் திரித்துக் கூறப்பட்டு வரும் இஸ்லாத்தின் சில பகுதிகள் குறித்து இங்கே விவாதிக்கப் போகின்றோம். இந்தப் பகுதிகள் பற்றிய உண்மையான விளக்கங்களைத் தந்திட எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளில் மன்னிப்புக் கேட்பதைப் போன்றதொரு மனநிலையை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். ஏனெனில் இஸ்லாம் இதை முற்றாக வெறுக்கின்றது. இன்னும் இஸ்லாத்தில் இதற்குத் … Continue reading
அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (1)
மனிதனின் சமுதாய வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை ஆகியவற்றைப் போலவே மனிதனின் அரசியல் வாழ்வையும் இஸ்லாம் சில உயர்ந்த ஒழுக்க, ஆன்மீக அடிப்படைகளின் கீழ் அமைத்துத் தருகின்றது. வாழ்வின் ஏனையத் துறைகளைப்போலவே இதற்கும் தெளிவான இறைக்கட்டளைகள் இருக்கவே செய்கின்றன. இந்த இறைக்கட்டளைகளின் படியே ஒரு முஸ்லிமின் அரசியல் வாழ்க்கை அமைக்கப்பட வேண்டும்.
அத்தியாயம்-4. சமுதாய வாழ்க்கை.
உண்மையான முஸ்லிமின் சமுதாய வாழ்க்கை மிகவும் உயர்ந்த கொள்கைகளின் கீழ் அமைந்ததாகும். வாழ்க்கை இன்பம் நிறைந்ததாகவும், வளம் நிறைந்ததாகவும் இருந்திடும் விதத்தில் ஒரு முஸ்லிமின் தனிவாழ்வும், பொதுவாழ்வும் அமைக்கப்பட்டுள்ளன. வர்க்கப் போராட்டம், இனவேறுபாடுகள், தனிமனிதனின் சமுதாயத்தின்மேல் ஆதிக்கம் செலுத்துவது அல்லது சமுதாயம் தனிமனிதனை ஆதிக்கம் செலுத்துவது இவைகளெல்லாம் இஸ்லாம் வழங்கும் சமுதாய வாழ்வுக்கு அந்நியமானவை.
அத்தியாயம்-4 நித்திய வாழ்க்கையில் இஸ்லாத்தை செயல்படுத்தும் முறை.
இஸ்லாம் ஒரு வெற்றுத் தத்துவமல்ல. தேவைபடும்போது புகழாரங்களைச் சூட்டி அழகு பார்த்துவிட்டுப் புறக்கணித்திடக்கூடிய ஓட்டைச் சித்தாந்தமுமில்லை. ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை இந்த கண்ணோட்டத்தில் அணுகிடுவதுமில்லை. நமது வாழ்க்கையில் நாளும் நடைமுறைப்படுத்தி நன்மையடைந்திட வேண்டிய நிறைவான வாழ்க்கை வழிகாட்டியே இஸ்லாம்.
அத்தியாயம்-2 உயிரும் வாழ்க்கையும்.
நாம் நமக்குள் கொண்டிருக்கும் ‘உயிர்’ இறைவனின் பூரண ஞானத்தின் புனிதமான எடுத்துக்காட்டாகும். இறைவனின் அதிகாரத்தின் – வல்லமையின் இணையற்ற உதாரணமாகும். அவனது படைக்கும் திறனின் பாங்கான மேற்கோளாகும். உயிரை தருபவனும், வாழ்க்கையை உருவாக்குபவனும் அவனே! அவனே படைத்தவன்! இந்த உலகில் நாம் காணும் எதுவும் எதேச்சையாகத் தோன்றியவையல்ல. எவரும் தன்னைத்தானே படைத்துக் கொள்வதில்லை. அல்லது வேறு … Continue reading
அத்தியாயம்-2 இறையச்சம்.
நன்மையான செயல் – நல்லன செய்தல், (ஈமான்) நம்பிக்கை, இவைகளின் கீழ் விவாதித்தவை இறையச்சத்திற்கும் பொருந்தும். இறையச்சம் எனப்படுவது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல. அல்லது நமது வசதிக்குத் தக்கப்படி வைத்துக்கொண்டதும் அல்ல. இறையச்சம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இங்கேயும் திருக்குர்ஆனே நமது முதல் ஆதாரமாக பயன்படும். திருக்குர்ஆன் இறையச்சம் மிக்கோரைப்பற்றி குறிப்பிடும்போது: … Continue reading
அத்தியாயம்-2 சில அடிப்படை கோட்பாடுகள்.
நம்பிக்கை: (ஈமான்) இறைவன் ஒருவனே என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்றும் நம்புகின்றவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்று நம்மில் பலர் எண்ணலாம். ஆனால் நம்பிக்கை (ஈமான்) என்பது இத்துணை குறுகியதன்று. அது இதனினும் விசாலமானது. ஈமான் என்பது சில சடங்கு, சம்பிரதாயங்களின் தொகுப்பல்ல. பெயரளவில் வைக்கப்படுகின்ற நம்பிக்கை ஈமானாகி விடாது. ஈமான் … Continue reading
பிரபஞ்சத்தின் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் தன்மைகள்!
அல்லாஹ் நித்திய ஜீவன் (என்றென்றும் வாழ்பவன்) (2:255) அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (28:88) எவருடைய பார்வையும் அவனை அடையாது; அவனோ யாவற்றையும் பார்க்கின்றான்! அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (42:11) அவன் எவ்வகையிலும் பிறப்பெடுப்பதில்லை. வேறு பொருளுடன் கலந்து விடுவதில்லை; இணைவதில்லை. (5:17)
65 (2). திருக்குர்ஆன் விளக்கவுரை
பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4701 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) … Continue reading