பிரபஞ்சத்தின் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் தன்மைகள்!
- அல்லாஹ் நித்திய ஜீவன் (என்றென்றும் வாழ்பவன்) (2:255)
- அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (28:88)
- எவருடைய பார்வையும் அவனை அடையாது; அவனோ யாவற்றையும் பார்க்கின்றான்!
- அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (42:11)
- அவன் எவ்வகையிலும் பிறப்பெடுப்பதில்லை. வேறு பொருளுடன் கலந்து விடுவதில்லை; இணைவதில்லை. (5:17)
- ஒவ்வொரு பொருளையும் படைத்தவன்; முழு பிரபஞ்சமும் அவனுடைய படைப்பே! (6:101)
- அவன் யாரையும் பெறவில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. (112:3)
- பிரபஞ்சம் முழுவதின் ஆட்சியதிகாரம் நேரடியாக அவனிடத்தே இருக்கிறது. (36:83)
- வானம், பூமி மற்றும் பிரபஞ்சம் முழுவதையும் அவனே நிர்வகிக்கின்றான். (32:5)
- அனைத்துக்கும் உணவளிப்பவன். (37:5)
- வாழ்வையும், மரணத்தையும் படைத்தவன் (67:2)
- அவனே வாழ்வையும் வழங்குகிறான்; மரணத்தையும் அளிக்கின்றான். (53:44)
- அனைத்துக்கும் அமைதியும், புகலிடமும் அளிப்பவன். (59:23)
- மறைந்திருப்பவை, நிகழ்ந்தவை, நிகழக் கூடியவை அனைத்தையும் அறிந்தவன். (2:29,59:22)
- அனைத்தையும் செவிமடுப்பவன். (6:13)
- அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன். (2:20)
- அனைத்தையும் மிகைத்தவன்; அவனது தீர்ப்பை யாரும் எதிர்த்திட முடியாது. (59:23)
- அவன் நுண்ணறிவாளன்; அவனது எந்த படைப்பும் வீணானவை, இலக்கற்றவை அல்ல! (34:1)
- அளவிலாக் கருணையுடையவன்; இணையிலாக் கிருபை உடையவன். (1:2)
- மிகவும் அன்புடையவன். (2:207)
- அவனுடைய கருணையும், கிருபையும் ஒவ்வொரு அணுவையும் சூழ்ந்திருக்கின்றது. (7:156)
- நீதி செலுத்துபவன்; மக்களிடம் முழு நீதியுடன் நடந்து கொள்பவன். (10:4)
- யார் மீதும் அணுவளவும் கொடுமை புரியாதவன். (50:29)
- அவனுடைய கட்டளைகள் அனைத்தும் நீதியின் அடிப்படையிலானவை. (6:115)
- அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவரைப் பழிவாங்குபவன். (3:4)
- மன்னிப்புக் கோருபவருக்கு மன்னிப்பு அளிப்பவன். (85:14)
- பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்பவன். (110:3)
- நன்மைகளைப் பெரிதும் மதிப்பவன். (64:17)
- தான் நாடியதைச் செய்யக் கூடியவன். (55:16)
- தான் விரும்பும் வகையில் செயல்படுபவன். (3:40)
- அவன் நாடுவது உண்டாகும்; அவன் நாட்டமின்றி எதுவும் தாமாகவே நடப்பதில்லை. (76:30)
- தன்னிறைவுடையவன்; யாருடைய தேவையுமற்றவன்; அவனுக்கு தேவையானது எதுவுமில்லை. (35:15)
- தனக்குத்தானே பெருமைக்குரியவன்; மிகவும் சிறப்புடையவன்; கண்ணியமானவன். (11:73)
- எந்த ஒரு குறையையும் விட்டுத் தூய்மையானவன். எல்லா சிறப்பு அம்சங்களும் கொண்டவன். அந்த உன்னத அந்தஸ்தை விட்டுத் தாழ்மையான அல்லது அதற்கு முரணான எந்தத் தன்மையும் அவனிடம் இல்லை. (59:23)
- ஒவ்வொரு தகுதியிலும் இணையற்றவன். அவனுடன் எதையும் ஒப்பிட முடியாது. (42:11)
- வானம், பூமியில் நிகழும் எதுவொன்றையும் வைத்து அவனது எதார்த்த நிலையை யூகிக்க முடியாது. (30:26)
- வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே! (2:163)
- பிரபஞ்சம் முழுவதும் அவனுடைய மகிமையே படிந்திருக்கிறது. (45:37)
- அவனுடைய ஆட்சியதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை. (18:26)
This entry was posted in
இறுதி இறை வேதம் and tagged
அன்பு,
அமைதி,
ஆட்சியதிகாரம்,
ஆற்றல்,
இறுதி இறை வேதம்,
உணவு,
கருணை,
கிருபை,
தகுதி,
நன்மை,
நித்திய ஜீவன்,
நீதி,
நேர்மை,
படைப்பாளன்,
பார்வை,
புகலிடம்,
மகிமை,
மன்னிப்பு,
மரணம்,
வாழ்வு. Bookmark the
permalink.