Tag Archives: பயம்
அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (2)
செயல்படச் செய்யும் திருமறை. திருக்குர்ஆன் தரும் அறிவின் பிரிதொரு தனித்தன்மை செயல்பட வேண்டும் என்ற உணர்வையும், உந்துதலையும் தருவதாகும். அது செயல்படத் தூண்டும் ஆக்கப்பூர்வமான அறிவாகும். அது மனதில் செயல்பட வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்துவது. திருமறை வசனங்களின் அமைப்பும், அவற்றின் போதனைகளும் எப்படி மனிதர்களை செயல்படும் பேரியக்கங்களாக மாற்றியது என்பதற்கு வரலாறு சான்று பகருகின்றது. … Continue reading
அத்தியாயம்-4. B. மனிதனின் குடும்ப வாழ்க்கை (2)
மனைவியின் உரிமைகள் – கணவனின் கடமைகள் நாம் மேலே சொன்ன ஒழுக்க விதிகள் பெண்களுக்குச் சில உரிமைகளை ஏற்படுத்துகின்றன. அதுபோலவே அவர்களுக்கென சில கடமைகளையும் ஏற்படுத்துகின்றன. திருக்குர்ஆனும், பெருமானார் (ஸல்) அவர்களது வாழ்வின் அழகிய முன்மாதிரியும் கணவன் மனைவியிடம் நீதமுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனப் பணித்திருப்பதால், மனைவியிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டியது … Continue reading
அல்லாஹ் தன் அடியானை எச்சரிக்கும் பல வகையான மன இச்சைகள்!
2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும். அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. 3:14. பெண்கள், ஆண் மக்கள்; … Continue reading
[பாகம்-6] முஸ்லிமின் வழிமுறை.
அல்லாஹ்வுடன்… அல்லாஹ்வுடன் நடந்து கொள்ளவேண்டிய ஒழுங்குகள்: ஒரு முஸ்லிம் தன் தாயின் கருவறையில் இந்திரியத் துளியாக இருந்ததிலிருந்து அல்லாஹ் அவனுக்கு அருளிய அருட்கொடைகளை (இவ்வருட்கொடைகள் நாளை மறுமையில் அவன் இறைவனைச் சந்திக்கும்வரை அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்) எண்ணிப் பார்த்து அதற்காக வல்ல நாயனுக்கு, அவனை தனது நாவால் புகழ்ந்து, துதிபாடி, தன் அவயங்களை அவனுடைய வழிபாட்டில் … Continue reading
19.தஹஜ்ஜுத்
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1120 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் ‘இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் … Continue reading
ஷபாஅத்தின் வகைகள்
ஷபாஅத் என்னும் பரிந்துரைத்தல் இரு வகைப்படும். ஒன்று: முஷ்ரிக்குகளிடையிலும், இவர்களைப் போன்ற அறிவீனமான மக்களிடையிலும் அறியப்பட்டிருந்த ஷபாஅத். இதை இறைவன் அடியோடு ஒழித்துக்கட்டி இல்லாமலாக்கி விட்டான். இரண்டு: அல்லாஹ்வின் அனுமதி பெற்றதன் பின்னர் கோரப்படும் ஷபாஅத். இதை அல்லாஹ் உறுதிப்படுத்தி கூறியிருக்கிறான். இந்த ஷபாஅத் அல்லாஹ்வுடைய அன்பியாக்களுக்கும், ஸாலிஹீன்களுக்கும் வழங்கப்படும். மறுமையில் சிருஷ்டிகள் நபி (ஸல்) … Continue reading
முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு மழைத்தேடிப் பிரார்த்தித்த சம்பவம்
ஷாம் (ஸிரியா, லெபனான்) பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு பிராத்தித்து மழைத் தேடினார்கள். துஆவின் போது: இறைவா! எங்களின் மேன்மைக்குரியவரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம் என்று பிரார்த்தித்து விட்டு, யஸீதே! உங்கள் கையை உயர்த்தி எங்களுக்காகப் பிரார்த்தியும் என்றார்கள். உடனே யஸீதும், அவருடன் … Continue reading
இஸ்லாத்தின் அடிப்படைகள்
தூய இஸ்லாத்திற்கு இரண்டு அடிப்படைகள் உண்டு. ஒன்று: லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தூதராவார்கள்) என்ற திருக்கலிமாவை வாழ்க்கையில் மெய்ப்பித்துச் செயல்படுத்திக் காட்டுதல். அதிலும் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்வுடன் யாரையும் இணையாக்காமல் இருத்தல். அப்படியென்றால் அல்லாஹ்வை நீ நேசிப்பது போல வேறு எந்த சிருஷ்டியையும் நேசிக்கலாகாது. அல்லாஹ்வை … Continue reading
சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிடுதல்
ஒருவன் மற்றவனிடம் ‘சிருஷ்டிகளின் மீது சத்தியமாக என்று கூறி ஆணையிட்டால் இந்த சத்தியம் நிறைவேறாது. சிருஷ்டிகள் என்ற விஷயத்தில் நபிமார்கள், மலக்குகள் அனைத்து படைப்பினங்களும் ஒரே நிலைதான். அல்லாஹ்வுக்கு சில ஹக்குகள் (உரிமைகள்) இருக்கின்றன. அவற்றில் தம் படைப்புகளில் எவரும் பங்காளிகள் அல்ல. நபிமார்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மூமின்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மக்களில் … Continue reading
மேன்மைக்குரிய சிருஷ்டிகள் அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.
மேன்மைக்குரிய மாபெரும் சிருஷ்டிகளில் நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு மட்டும் சத்தியம் செய்யலாம் என்றும், பிரார்த்திக்கலாம் என்றும் அனுமதிக்கின்றோமே தவிர எல்லா மக்களையும், அல்லது எல்லா படைப்புகளையும் கொண்டு அவர்களின் பொருட்டால் பிரார்த்திப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லையே – இது சிருஷ்டிகளில் ஸாலிஹீன்களையும், நபிமார்களையும் கொண்டு பிரார்த்திப்பதை அனுமதித்தவர்களின் வாதமாகும்.