Tag Archives: நேர்மை
அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)
3. இஸ்லாமிய வரலாற்றை விமர்சிக்குமுன் அந்த வரலாற்று விற்பன்னர்கள் போரைப்பற்றியும், அமைதியைப் பற்றியும் திருக்குர்ஆன் என்ன சொல்லுகின்றது என்பதை கூர்ந்து, நேர்மையான எண்ணத்தோடு படித்திடுவது நன்மை பல பயக்கும். இஸ்லாம் வெற்றிக்கொண்ட இடங்களிலெல்லாம் மக்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதையும், முஸ்லிம்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பு அவர்கள் இருந்த நிலையையும், இஸ்லாத்தோடு தொடர்பு கொண்ட பின்னர் … Continue reading
அத்தியாயம்-2 இஸ்லாம் தரும் சமத்துவம்.
சமத்துவம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுள் ஒன்றாகும். இஸ்லாம் தரும் சமத்துவத்தைக் குறிப்பிட சமத்துவம் என்ற வார்த்தையைவிட ‘நியாயம், நேர்மை’ என்ற வார்த்தைகளே பொருத்தமானதாக அமையும். It is Not Equality But Equit. இங்கே சமத்துவம் என்பதை ஒரே மாதிரியானது அல்லது ஒன்றைப்போல் மற்றொன்று என்று பொருள் கொண்டுவிடக் கூடாது. இஸ்லாம், இறைவனின் முன் அனைவரும் … Continue reading
அத்தியாயம்-2 இறைத்தூது.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிடுவான் வேண்டி எண்ணற்ற நபிமார்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி – இறைத்தூதர் அனுப்பப்பட்டுள்ளார். இறைவனின் தூதர்கள் அத்தனை பேரும் சீரிய ஒழுக்கங்களின் சிகரங்களாய் திகழ்ந்தனர். அவர்களை இறைவன், தனது வழிகாட்டுதலை மனிதர்களுக்கு வழங்குவதற்காக பயிற்றுவித்தான். அவர்களது நேர்மை, நாணயம், அறிவின் ஆழம் … Continue reading
அத்தியாயம்-2 இறையச்சம்.
நன்மையான செயல் – நல்லன செய்தல், (ஈமான்) நம்பிக்கை, இவைகளின் கீழ் விவாதித்தவை இறையச்சத்திற்கும் பொருந்தும். இறையச்சம் எனப்படுவது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல. அல்லது நமது வசதிக்குத் தக்கப்படி வைத்துக்கொண்டதும் அல்ல. இறையச்சம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இங்கேயும் திருக்குர்ஆனே நமது முதல் ஆதாரமாக பயன்படும். திருக்குர்ஆன் இறையச்சம் மிக்கோரைப்பற்றி குறிப்பிடும்போது: … Continue reading
[பாகம்-19] முஸ்லிமின் வழிமுறை.
காஃபிர்களுடன் நடந்து கொள்ளும் முறை இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர ஏனைய மதங்களும் இஸங்களும் அசத்தியமானவை. அவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் காஃபிர்களாவர். இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம். அதை பின்பற்றக்கூடியவர்கள் முஃமின்கள், முஸ்லிம்களாவர். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன்: 3:19) ‘இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவனிடமிருந்து அது … Continue reading
பிரபஞ்சத்தின் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் தன்மைகள்!
அல்லாஹ் நித்திய ஜீவன் (என்றென்றும் வாழ்பவன்) (2:255) அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (28:88) எவருடைய பார்வையும் அவனை அடையாது; அவனோ யாவற்றையும் பார்க்கின்றான்! அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (42:11) அவன் எவ்வகையிலும் பிறப்பெடுப்பதில்லை. வேறு பொருளுடன் கலந்து விடுவதில்லை; இணைவதில்லை. (5:17)
[பாகம்-5] முஸ்லிமின் வழிமுறை.
அதிகாரம் வகிப்பவர்கள். ஒரு முஸ்லிம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை கடமை என்று கருத வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்) (அல்குர்ஆன்: 4:56) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அதிகாரம் உடையவர்களுக்கு) நீங்கள் செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள். உலர்ந்த திராட்சையைப் போன்ற … Continue reading
[பாகம்-3] முஸ்லிமின் வழிமுறை.
நபித்தோழர்கள், நபியின் குடும்பத்தினர். ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வும் அவன் தூதரும் அவர்களை நேசிப்பதால். அவர்கள் ஏனைய முஃமின்கள், முஸ்லிம்களை விடச் சிறந்தவர்கள் என நம்ப வேண்டும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: “(இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் … Continue reading
ஈடேற்றம் பெற அல்லாஹ்வின் அருள் அவசியம்.
1793. ”இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப் படுவார்)” என்று கூறினார்கள். மக்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)” என்று வினவினார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘(ஆம்) என்னையும் தான். அல்லாஹ் அரவணைத்துக் கொண்டால் தவிர” என்று … Continue reading