Tag Archives: இஸ்லாம்
அத்தியாயம்-3 நம்பிக்கையின் செயல் முறைகள்
இந்த அத்தியாயத்தில் நாம் ஏற்றுக் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது என்பதைப் பார்ப்போம். நாம் ஏற்றுக் கொண்ட நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்க இஸ்லாம் சில கடமைகளை விதித்திருக்கின்றது. அவை தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் முதலியவையாகும். இந்தக் கடமைகளை நிறைவேற்றிட வேண்டும் என இறைவன் கட்டளை இட்டிருப்பதற்கான காரணம், மனிதனின் ஆன்மீகத் … Continue reading
அத்தியாயம்-2 உலகம் (பிரபஞ்சம்) இஸ்லாத்தின் கண்ணோட்டம்.
இந்த நூலின் முன்னுரையில், மேலை நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் நிலைமையையும், இஸ்லாத்தின் எதிர்காலத்தையும் சுருக்கமாக விவாதித்தோம். இந்தப் பகுதியில் உலகின் ஏனைய பாகங்களிலுள்ள மனிதர்களின் நிலைமையையும், சாதாரணமாக மனிதர்களின் நிலைமை எத்தன்மையதாக இருக்கின்றது என்பதையும், உலகைப்பற்றி இஸ்லாம் சொல்லும் நியதிகள் என்னவென்றும் பார்ப்போம்.
அத்தியாயம் – 2 மதம் அல்லது மார்க்கம்.
மனித வரலாற்றை சற்று உற்று நோக்குவோமானால், வரலாறு முழுவதும் மதம் என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. அடுத்தவர்களை சுரண்டுவதற்காகவும், பலரை ஏய்திடவுமே மதத்தை சிலர் பயன்படுத்தினர். சிலர் தாங்கள் கொண்டிருந்த மாச்சரியங்களை மறைத்திடவும், தாங்கள் இழைத்த கொடுமைகளை நியாயப்படுத்திடவுமே மதத்தை பயன்படுத்தினர். சிலர் அதிகாரத்தை கைப்பற்றிடவும், பிறர் மீது ஆதிக்கம் செலுத்திடவும், … Continue reading
அத்தியாயம்-2 உயிரும் வாழ்க்கையும்.
நாம் நமக்குள் கொண்டிருக்கும் ‘உயிர்’ இறைவனின் பூரண ஞானத்தின் புனிதமான எடுத்துக்காட்டாகும். இறைவனின் அதிகாரத்தின் – வல்லமையின் இணையற்ற உதாரணமாகும். அவனது படைக்கும் திறனின் பாங்கான மேற்கோளாகும். உயிரை தருபவனும், வாழ்க்கையை உருவாக்குபவனும் அவனே! அவனே படைத்தவன்! இந்த உலகில் நாம் காணும் எதுவும் எதேச்சையாகத் தோன்றியவையல்ல. எவரும் தன்னைத்தானே படைத்துக் கொள்வதில்லை. அல்லது வேறு … Continue reading
அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுபவரே முஸ்லிம்!
10:72. (நபி நூஹ் (அலை) தம் சமுதாயத்தை நோக்கி:) “நீங்கள் என்னைப் புறக்கணித்தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை ஏனென்றால்) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் அல்லாஹ்விடமேயன்றி மற்றெவரிடமுமில்லை. நான் முஸ்லிம்களில் இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள். 2:131,132. தன்னைத் தானே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமுடைய இஸ்லாம் மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் … Continue reading
88. இஸ்லாத்திலிருந்து வெளியேறியோர்
பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6918 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்’ எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் ‘எங்களில் … Continue reading
80. பிரார்த்தனைகள்
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6304 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6305 … Continue reading
[பாகம்-3] முஸ்லிமின் வழிமுறை.
நபித்தோழர்கள், நபியின் குடும்பத்தினர். ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வும் அவன் தூதரும் அவர்களை நேசிப்பதால். அவர்கள் ஏனைய முஃமின்கள், முஸ்லிம்களை விடச் சிறந்தவர்கள் என நம்ப வேண்டும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: “(இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் … Continue reading
கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. சகோதர, சகோதரிகளே! இன்றைய காலகட்டத்திலும் சரி இதற்கு முந்தைய காலக் கட்டங்களிலும் சரி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இருப்பது இஸ்லாம் மட்டுமே! இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் அல்-குர்ஆனின் வசனங்களால் கவரப்பட்டும் அதை அடிபிறழாது பின்பற்றியொழுகிய சத்திய சீலர்களின் நற்பண்புகளைக் கண்டும் எண்ணற்றோர் இஸ்லாத்தைத் … Continue reading
முடுக்கிவிடப்பட வேண்டிய ஏகத்துவப் பிரச்சாரங்கள்!
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். 1980 களுக்கு முன்னர் தமிழகம் – ஓர் பார்வை!: – ஊருக்கு ஒரு தர்ஹா, மாதத்திற்கு ஒரு கந்தூரி விழா, வீட்டுக்கு ஒரு குல அவுலியா, ஒவ்வொரு வீட்டிலும் ‘தமிழகத்தின் தர்ஹாக்களைக் காண வாருங்கள்’ என்ற சங்கை மிக்க பாடல் ஓசைகள், அவுலியாக்களுக்கு கோழி, ஆடு போன்ற குர்பானிகள், … Continue reading