980. ”விற்பவரும், வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
வியாபாரத்தில் உண்மை பேசுவதின் சிறப்பு.
வாங்குபவர் விற்பவருக்கு முறித்துக் கொள்ளலாம் என்ற உரிமை.
978. ”(எப்போது வேண்டுமானாலும் முறித்துக் கொள்ளலாம் என்று) உரிமை வழங்கப்பட்ட வியாபாரத்தைத் தவிர மற்ற வியாபாரங்களில் விற்பவரும் வாங்குபவரும் பிரியும்வரை ஒவ்வொருவரும் முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
979. ”இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் வியாபாரம் செய்தால் அவ்விருவரும் பிரியாமல் சேர்ந்து இருக்கும்வரை முறித்துக் கொள்ளும் உரிமை படைத்துள்ளார்கள். ஒருவர் மற்றவருக்கு முறித்துக் கொள்ளும் உரிமையை வழங்கி அதை அவர் பயன்படுத்தாமல் இருவரும் ஒப்பந்தம் செய்தால் வியாபாரம் ஏற்பட்டுவிட்டது. இருவரும் ஒப்பந்ததைத் முடித்தபின் வியாபாரத்தை முறிக்காமல் பிரிந்துவிட்டால் அப்போதும் வியாபாரம் ஏற்பட்டுவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உஹது போரில் நபி (ஸல்) அவர்கள் காயமடைந்தபோது…
கேள்வி எண்: 50. உஹது போரில் நபி (ஸல்) அவர்கள் காயமடைந்தபோது நிராகரிப்பாளர்களைப் பற்றிப் பின்வருமாறு தம்முடைய வேதனையை வெளிப்படுத்தினார்கள் ‘தம்முடைய நபியைக் காயப்படுத்திய சமூகம் எப்படி வெற்றியடையும்?’ இதைக் குறித்து இறங்கிய திருமறை வசனம் எது? Continue reading
கைக்கு வந்து சேரும் முன்பு விற்காதே.
975. ”கைக்கு வந்து சேருவதற்கு முன் விற்கக் கூடாது!” என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தது, உணவுப் பொருட்களுக்குத் தான்! (ஆயினும்) எல்லாப் பொருட்களுக்கும் இவ்வாறுதான் என்று கருதுகிறேன்!”
976. ”ஒருவர் உணவுப் பொருளை வாங்கினால் அது (முழுமையாக) அவரின் கைக்கு வந்து சேராமல் அதை அவர் விற்கக் கூடாது!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
977. ”நபித்தோழர்கள் உணவுப் பொருட்களைக் கடை வீதி துவங்கும் இடத்தில் வாங்கி அதே இடத்தில் விற்று வந்தனர்; எனவே, கடைத் தெருவுக்குள் கொண்டு செல்லாமல் வாங்கிய இடத்திலேயே விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!”
சந்தைக்கு வரும் பொருளை இடைமறித்து வாங்காதே.
973. ”(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!” என்பதன் பொருள் என்ன?’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் ‘இடைத் தரகராக ஆகக்கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)’ என பதிலளித்தார்கள்” என்று தாவூஸ் (ரஹ்) கூறினார்.
974. ”கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர் வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!” என்று எங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது!”
சந்தைக்கு வரும் வியாபாரிகளை வழியில் சந்தித்து சரக்கு வாங்காதே.
972. ”மடி கனக்கச் செய்யப்பட்ட ஓர் ஆட்டை யாரேனும் வாங்கி, அதைக் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால் அத்துடன் ஒரு ஸாவு பேரீச்சம் பழம் சேர்த்துக் கொடுக்கட்டும்! மேலும், நபி (ஸல்) அவர்கள் (சந்தைக்கு வரும்) வியாபாரிகளை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்குவதைத் தடுத்தார்கள்!”
பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு நிகரானவனை நீர் அறிவீரா?
2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
6:96. அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் – இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.
19:65. “(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”
13:13. மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸபீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
37:12. (நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
39:67. “அல்லாஹ்வின் மேலான தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. இன்னும் மறுமை நாளில் பூமி முழுவதும் அவனுடைய ஒரு கைப்பிடியிலும், வானங்கள் சுருட்டப்பட்டு அவனுடைய வலக்கரத்திலும் இருக்கும். அவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிக்க மேலானவன். மிகப் பரிசுத்தமானவன்”.
பிறர் வியாபாரப் பேச்சில் திருமணப் பேச்சில் குறுக்கிடாதே.
969. ”ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது!”என நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.
970. ”(சரக்குகளை ஏற்றிக் கொண்டு) வாகனத்தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்காதீர்கள்! ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடாதீர்கள்! வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிடவேண்டும் என்பதற்காகவே விலைகேட்காதீர்கள்! (ஆளமர்த்தி அவ்விதம் விலைகேட்கச் செய்வதும் கூடாது!) கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசிகள் விற்றுக் கொடுக்க வேண்டாம்!” ஆடுகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியை கனக்கச் செய்யாதீர்கள்! இத்தகைய ஆட்டை ஒருவர் வாங்கிப் பால் கறந்து, திருப்தியடைந்தால் வைத்துக் கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால் அந்த ஆட்டை ஒரு ஸாவு பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்து விடலாம்! இவ்விரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் உரிமை வாங்கியவருக்கு உண்டு!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
971. (சந்தைக்கு வருவதற்கு முன்பு மொத்த) வியாபாரிகளை வழியில் எதிர் கொண்டு சரக்குகளை வாங்குவதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். உள்ளூர்வாசி கிராமவாசிக்காக வாங்கித் தருவதையும், ஒரு பெண் தன் சகோதரியை (சக்களத்தியை) தலாக் செய்துவிடும்படி நிபந்தனையிடுவதையும், தன் சகோதரன் விலை பேசும் அதே பொருளை, தானும் விலை பேசுவதையும், வாங்கும் நோக்கமின்றி (ஒரு பொருளுக்கு) அதிக விலை கேட்டு, (வேண்டுமென்றே) விலை ஏற்றி விடுவதையும், (ஆடு மாடுகளின்) மடியை கனக்கச் செய்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
கருப்பையிலிருக்கும் கால்நடையை விற்கத் தடை.
968. ”நபி (ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! ‘இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)’ என்று செய்யப்படும் (ஹபல் இல் ஹபாலா) வியாபாரமே இது!”
முலாமஸா முனாபதா முறை விற்பனைக்குத் தடை.
965. ”நபி (ஸல்) அவர்கள் ‘முனாபதா, முலாமஸா’ ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்!”
966. ”ஈதுல் ஃபித்ரிலும் (நோன்புப் பெருநாளிலும்) ஈதுல் அல்ஹாவிலும் (ஹஜ்ஜுப் பெருநாளிலும்) நோன்பு நோற்பதும் முலாமஸா, முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன!”என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
967. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும், வியாபார முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள். வியாபாரத்தில் ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய முறைகளைத் தடை செய்தார்கள். ‘முலாமஸா’ என்றால், இரவிலோ பகலிலோ (ஒரு பொருளை வாங்கும்) ஒருவர் (விற்கும்) மற்றொருவரின் துணியைத் தம் கரத்தால் தொடுவதாகும். (அவ்வாறு தொட்டுவிட்டாலே வியாபாரம் உறுதியாகி விடும் என்ற நிபந்தனையின் பேரில்) அதைத் தொட்டதோடு முடித்துக்கொண்டு விரித்துப் பார்க்காமலேயே வாங்குவதாகும். ‘முனாபதா’ என்பது, ஒருவர் மற்றொரு வரை நோக்கித் தம் துணியை எறிய அந்த மற்றவர் இவரை நோக்கித் தம் துணியை எறிய (துணியைப் பிரித்துப்) பார்க்காமலும் பரஸ்பர திருப்தி இல்லாமலும் இருவருக்குமிடையிலான வியாபார (ஒப்பந்த)மாக அதுவே ஆகிவிடுவதாகும்.
ஆடை அணியும் முறைகள் இரண்டும் வருமாறு: 1. இஷ்திமாலுஸ் ஸம்மாஉ. அதாவது ஒருவர் ஒரே துணியைத் தம் தோள்களில் ஒன்றில் போட்டுக்கொள்ள அவரின் உடலின் இரண்டு பக்கங்களில் ஒன்று துணியின்றி வெளியே தெரிவதாகும். 2. இஹ்திபா அதாவது ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரிய (அதைத் துணியால் மறைக்காமல்) அமர்ந்திருப்பதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.