1114. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, ‘நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம். மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்) விட்டு விடட்டும்” என்று கூறினார்கள்.
வாதத் திறமையால் வெல்வது பற்றி…
பித்அத்துல் ஹஸனா (அழகான பித்அத்) என்று ஒன்று உண்டா?
கேள்வி எண்: 65. பித்அத் என்றால் என்ன? பித்அத் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் அடங்கிய ஹதீஸ்கள் மூன்றினைக் கூறுக. Continue reading
குற்றமற்றவர் என நிரூபிக்க பிரதிவாதி சத்தியம் செய்தல்.
1113. இரண்டு பெண்கள் ‘ஒரு வீட்டில்’ அல்லது ‘ஓர் அறையில்’ (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருத்தி தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருத்தியின் மீது குற்றம் சாட்டினாள். இந்த வழக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால் பலருடைய உயிர்களும் செல்வங்களும் (வீணாக பலிகொள்ளப்பட்டுப்) போய்விடும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறிவிட்டு, (பிரதிவாதியான) அந்த மற்றொருத்திக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவளுக்கு ‘அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்பவிலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை” எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவளுக்கு மக்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டினார்கள். அவளும் தன் (தோழியின் கையில் ஊசியால் குத்திய) குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), ‘நபி (ஸல்) அவர்கள், ‘பிரதிவாதி (தன் குற்றத்தை மறுத்தால்) சத்தியம் செய்யவேண்டும்’ என்று கூறினார்கள்” எனக் கூறினார்கள்.
விலங்குகளால்,விபத்தில் மரணித்தவருக்கு இழப்பீட்டு தொகையில்லை.
1112. ”விலங்குகளாலோ (கால்நடைகளாலோ) கிணற்றின் மூலமாகவோ அல்லது சுரங்கத்திலோ ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் (அதன் சொந்தரக்காரனிடம்) நஷ்டஈடு கேட்கப்பட மாட்டாது. புதையலில் (ரிகாஸில்) ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தண்டனையும் பரிகாரமும்.
1111. ‘அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை. திருடுவதில்லை. விபச்சாரம் செய்வதில்லை. உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை. நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை. எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகி விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்’ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள். உடனே நாங்களும் அவ்வாறு நடப்போம் என்று அவர்களிடம் உறுதிமொழி எடுத்தோம்” என பத்ருப் போரில் பங்கெடுத்தவரும் அகபா உடன்பாடு நடந்த இரவில் பங்கெடுத்த தலைவர்களில் ஒருவருமான உபாதா இப்னு ஸாமித் (ரலி) அறிவித்தார்.
அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?
கேள்வி எண்: 64. “அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?” என்று கூறுவதன் மூலம் ஆண் பெண் இருபாலரின் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அல்லாஹ்வின் திருமறை வசனம் எது? Continue reading
பத்து சாட்டையடிக்கு மேல் இல்லை.
1110. ”அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படலாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்து பொருட்கள் மீதும் வல்லமையாளன்!
2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனீத்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)” என்று: அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும்படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று; (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. Continue reading
மது அருந்தியவர்க்குரிய தண்டனை.
1108. மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடித்திடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் கொடுத்(திட உத்தரவு பிறப்பித்)தார்கள்.
1109. நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்தால் (அதற்காக) நான் கவலை அடையப் போவதில்லை; குடிகாரரைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரர் இறந்தால் அவருக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்தியவனுக்குத் தண்டனையாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட எதையும்) வழிமுறையாக்கவில்லை.
செய்தவரையே சூழ்ந்து கொள்ளும் தீய சூழ்ச்சி!
கேள்வி எண்: 63. “தீய சூழ்ச்சி அதை செய்தவரையே சூழும்” என்ற பொருளுடைய அல்லாஹ்வின் திருமறை வசனம் எது? Continue reading