செய்தவரையே சூழ்ந்து கொள்ளும் தீய சூழ்ச்சி!

கேள்வி எண்: 63. “தீய சூழ்ச்சி அதை செய்தவரையே சூழும்” என்ற பொருளுடைய அல்லாஹ்வின் திருமறை வசனம் எது?

பதில்: “(அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகள் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால், தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச்சூழ்ச்சி செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது; இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனைப் பெற்ற) வழியைத்தான் இவர்களும் எதிர்பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்” (அல்குர்ஆன்: 35:43)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.