காணாமல் போன பொருட்கள்.

1123. ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொருளைப் பற்றி கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதனுடைய பையையும் (அதன் சுருக்குக்) கயிற்றையும் அறிந்து (பாதுகாத்து) வைத்துக் கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து (அதை அடையாளம் சொல்லக் கேட்டு)விட்டால் (அவரிடம் கொடுத்து விடு.) இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘(பிறரின்) தொலைந்து போன ஆடு (நம்மிடம் வந்து சேர்ந்தால்…)?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘அது உனக்குச் சொந்தமானது. அல்லது உன் சகோதரனுக்குச் சொந்தமானது. அல்லது ஓநாய்க்குச் சொந்தமானது” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘தொலைந்து போன ஒட்டகம் (நம்மிடம் வந்து சேர்ந்தால்)?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர் பையும் (குடலும்) அதன் கால் குளம்புகளும் உள்ளன. அது நீர் நிலைக்குச் சென்று நீர் அருந்திக் கொள்ளும்; மரத்தை மேய்ந்து கொள்ளும்; அதன் உரிமையாளர் அதைப் பிடித்துக் கொள்ளும் வரை. (எனவே, அதன் போக்கில் அதை விட்டுவிடு)” என்று கூறினார்கள்.

புஹாரி : 2372 ஜைது பின் காலித் (ரலி).

1124. நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிpந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், ‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி (ஸல்) அவர்கள், ‘அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள். எனவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.

புஹாரி :2426 உபை பின் கஃப் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on காணாமல் போன பொருட்கள்.

நீதியால் இருவரை ஒருங்கிணைத்தல்.

1122. (பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ‘என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை” என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ‘நிலததை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (எனவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)” என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், ‘உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?’ என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ‘எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்” என்று கூறினார். மற்றொருவர், ‘எனக்குப் பெண்பிள்ளை இருக்கிறது” என்று கூறினார். தீர்ப்புச் சொல்பவர், ‘அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்” என்று தீர்ப்பளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3472 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on நீதியால் இருவரை ஒருங்கிணைத்தல்.

மார்க்க அறிஞர்களின் ஆய்வின் முடிவுகளில் வித்தியாசங்கள்.

1121. (தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூற, மற்றொருத்தி அவளிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள்.(அவர்களின் தீர்ப்பில் கருத்து வேறுபட்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், ‘என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள) ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது இளையவள், ‘அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்” என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் ‘அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3427 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on மார்க்க அறிஞர்களின் ஆய்வின் முடிவுகளில் வித்தியாசங்கள்.

நற்குணங்கள் என்றால் என்ன?

கேள்வி எண்: 66. அல்லாஹ்வின் தூதரே! நற்குணங்கள் என்றால் என்ன? என்று கேட்ட அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் என்ன? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on நற்குணங்கள் என்றால் என்ன?

மார்க்கத்தில் புதுமை நிராகரிக்கப்படும்.

1120. நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2697 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , | Comments Off on மார்க்கத்தில் புதுமை நிராகரிக்கப்படும்.

கோபத்திலிருக்கும் போது தீர்ப்பளிக்காதே.

1119. (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான் – ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். ‘நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்கவேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்” (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).

புஹாரி :7158 அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on கோபத்திலிருக்கும் போது தீர்ப்பளிக்காதே.

வானவர்கள்!

அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது இஸ்லாத்தில் இரண்டாவது அம்சமாகும். இவர்களை அரபு மொழியில் ‘மலாஇகா’ எனக் கூறப்படும். கண்களுக்குப் புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்பட முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது.

இவர்களுல் பிரதானமானவர் பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத்தூதர் வசம் கொண்டு வந்து சேர்ப்பதாகும். இவர்களையடுத்து இன்னும் பல முக்கியமான வானவர்கள் உளர். இவர்களின் எண்ணிக்கையை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.

Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on வானவர்கள்!

நீதிபதியின் ஆய்வுசெய்து அளித்த தீர்ப்புக்கு கூலி.

1118. நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :7352 அம்ர் பின் அல் ஆஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on நீதிபதியின் ஆய்வுசெய்து அளித்த தீர்ப்புக்கு கூலி.

அளவுக்கதிகமான கேள்விகளைத் தவிர்.

1117. (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2408 முகீரா இப்னு ஷுஅபா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on அளவுக்கதிகமான கேள்விகளைத் தவிர்.

கஞ்சனின் மனைவி கணவனின் பொருளைத் திருடலாம்.

1115. (ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரலி) (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘நியாயமன அளவு தவிர (அவ்வாறு செய்ய) வேண்டாம்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :5359 ஆயிஷா (ரலி).

1116. ஹிந்த் பின்த் உத்பா, (நபி – ஸல் – அவர்களிடம்) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது) பூமியின் முழுதும் உள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட) பிறகு இன்று பூமியின் முழுதும் உள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (இந்த உன்னுடைய விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)” என்று பதிலளித்தார்கள். ஹிந்த் பின்த் உத்பா, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியான ஒருவர். எனவே, அவருக்குரிய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் பிள்ளை குட்டிகளுக்கு நான் உண்ணக் கொடுத்தால் என் மீது குற்றமாகுமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நியாயமான அளவிற்கு எடுத்(து உண்ணக் கொடுத்)தால் குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :3825 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on கஞ்சனின் மனைவி கணவனின் பொருளைத் திருடலாம்.