கேள்வி எண்: 66. அல்லாஹ்வின் தூதரே! நற்குணங்கள் என்றால் என்ன? என்று கேட்ட அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் என்ன?
பதில்: ‘அபூஹுரைராவே! நற்குணங்களை மேற்கொள்வீராக’ என நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைராவுக்கு அறிவுரை வழங்கினார்கள். அப்போது அவர் ‘அல்லாஹ்வின் தூதரே! நற்குணங்கள் என்றால் என்ன?’ என்று கேட்டார். அதற்கு ‘உன்னைத் துண்டித்து வாழ்பவருடன் நீ சேர்ந்து வாழ். உனக்கு அநீதம் செய்தவரை நீ மன்னித்து விடு. உனக்கு தர மறுத்தவருக்கு நீ கொடு’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (பைஹகீ)