மார்க்க அறிஞர்களின் ஆய்வின் முடிவுகளில் வித்தியாசங்கள்.

1121. (தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூற, மற்றொருத்தி அவளிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள்.(அவர்களின் தீர்ப்பில் கருத்து வேறுபட்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், ‘என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள) ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது இளையவள், ‘அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்” என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் ‘அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3427 அபூஹுரைரா (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , . Bookmark the permalink.