நாட்டுக் கழுதை ,கோரைப்பற்களுள்ள வன விலங்குகள்.

1260. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள். (வன) விலங்குகளில் கோரைப் பற்கள் உடைய எதையும் உண்ண வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.

புஹாரி : 5527 அபூதலபா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on நாட்டுக் கழுதை ,கோரைப்பற்களுள்ள வன விலங்குகள்.

பயிற்றுவிக்கப் பட்ட நாயைக் கொண்டு வேட்டையாடுதல்.

வேட்டையாடுதல், அறுத்தல், உண்ண அனுமதிக்கப்பட்டவைகள்.

1254. நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடிக் கொண்டு வருகிறவற்றை நாங்கள் உண்ணலாமா?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவை உங்களுக்காக (வேட்டையாடிக்) கவ்விப் பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே” என்று பதிலளித்தார்கள். நான், ‘நாங்கள் இறகு இல்லாத அம்பை (வேட்டைப் பிராணிகளின் மீது) எய்கிறோமே! (அதன் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘அது (தன்னுடைய முனையால்) குத்தி (வீழ்த்தி)யதைச் சாப்பிடுங்கள். அந்த அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டதைச் சாப்பிடாதீர்கள்” என்ற கூறினார்கள்.

புஹாரி :5477 அதீபின் ஹாத்திம் (ரலி).

1255. ”நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்” என்று நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், ‘பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டையாட) நீங்கள் அனுப்பியிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்து வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்து விட்டிருந்தாலும் (அது வேட்டையாடிக் கொண்டு வரும் பிராணியை) உண்ணாதீர்கள்!

புஹாரி : 5483 அதீபின் ஹாத்திம் (ரலி).

1256. நான் நபி (ஸல்) அவர்களிடம் ஈட்டி (மூலம் வேட்டையாடுவதைப்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பிராணியை ஈட்டி அதன் முனையால் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்; பக்கவாட்டாகத் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்ணாதே. ஏனெனில் அது அடித்துக் கொல்லப்பட்டதாகும்” என்றார்கள். நான் இறைத்தூதர் அவர்களே! (வேட்டைக்காக) நான் என்னுடைய நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புகிறேன்; வேட்டையாடப்பட்ட பிராணிக்கு அருகில் என்னுடைய நாயுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன்; அந்த மற்றொரு நாய்க்காக நான் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை இவ்விரு நாய்களில் எது வேட்டையாடியது என்பதும் எனக்குத் தெரியவில்லை (அதை நான் சாப்பிடலாமா?) எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘சாப்பிடாதே! நீ அல்லாஹ்வின் பெயர் கூறியது உன்னுடைய நாயை அனுப்பும்போது தான். மற்றொரு நாய்க்கு நீ அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை” என விடையளித்தார்கள்.

புஹாரி : 5475 அதீபின் ஹாத்திம் (ரலி).

1257. இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். ‘பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடாதீர்கள்)” என்று பதிலளித்தார்கள். நான் அவர்களிடம் (பயிற்சியளிக்கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உங்களுக்காக அது கவ்விக்கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும் ‘உங்களின் நாயுடன்’ அல்லது
‘உங்கள் நாய்களுடன்’ வேறோரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களின் நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களின் நாயை அனுப்பியபோதுதான் வேறொரு நாய்க்காக அல்ல” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 2054 அதீபின் ஹாத்திம் (ரலி).

1258. நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்களின் (வேட்டை) நாயை (வேட்டையாட) அனுப்பி, அது வேட்டைப் பிராணியைக் கவ்விப் பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். அது (அந்தப் பிராணியைத்) தின்றிருந்தால் நீங்கள் அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அப்போது அது அந்தப் பிராணியைத் தனக்காகவே பிடித்து வைத்துக்கொண்டுள்ளது. அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பப்படாத பல நாய்களுடன் உங்கள் வேட்டை நாயும் கலந்துவிட அவை (அப்பிராணியைப்) பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அவற்றில் எது அப்பிராணியைக் கொன்றது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒன்று அல்லது இரண்டு நாள்கள் கழித்து அதன் மீது உங்கள் அம்பின் அடையாளத்தைத் தவிர வேறெதுவுமில்லாதிருக்க நீங்கள் அதைக் கண்டால் அதை நீங்கள் உண்ணலாம். அது தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். (ஏனெனில், அது தண்ணீரில் விழுந்ததால் இறந்திருக்கலாம்.)

புஹாரி : 5484 அதீபின் ஹாத்திம் (ரலி).

1259. நான், ‘அல்லாஹ்வின் நபியே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களின் பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா? மேலும், வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் நாங்கள் இருக்கிறோம். நான் என்னுடைய வில்லாலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை ஏவியும் வேட்டையாடுவேன்; (இவற்றில்) எது எனக்கு (சட்டப்படி) தகும்?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் குறிப்பிட்ட வேதக்காரர்களின் (பாத்திரத்தில் உண்ணும்) விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவிவிட்டு அவர்களின் பாத்திரங்களில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் (அதைச்) சாப்பிடுங்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 5478 அபூதலபா அல் குஷானி (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on பயிற்றுவிக்கப் பட்ட நாயைக் கொண்டு வேட்டையாடுதல்.

பிரயாணம் வேதனையின் ஒரு பகுதி.

1251. ”பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1804 அபூஹுரைரா (ரலி).

1252. ”நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டிற்கு இரவு நேரத்தில் வரமாட்டார்கள். காலையிலோ, மாலையிலோ தான் பிரயாணத்திலிருந்து வருவார்கள்.”

புஹாரி : 1800 அனஸ் (ரலி).

1253. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் எனும்) ஒரு போரில் இருந்தோம். (போர் முடிந்து) திரும்பி வந்து நாங்கள் மதீனாவை நெருங்கிக் கொண்டிருந்தோம். பிறகு நாங்கள் (மதீனாவுக்கு) வந்து (ஊருக்குள்) நுழைய முற்பட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களை சென்றடைய) இஷா நேரம் வரைப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும். (கணவனைப் பிரிந்திருந்த)பெண்கள் சவரக்கத்திகளைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும்” என்றார்கள்.

புஹாரி : 5247 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலீ).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on பிரயாணம் வேதனையின் ஒரு பகுதி.

நேர்வழியில் திகழும் ஒருகூட்டம்.

1249. என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) தம்மிடம் வரும் வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப்பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்திலும் அவர்கள் மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3640 முகீரா இப்னு ஷுஅபா (ரலி).


1250. என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்களுக்குத் தீங்கு செய்யமுடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்களிடம் வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3641 முஅவியா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on நேர்வழியில் திகழும் ஒருகூட்டம்.

அறப்போரில் உயிரைத் தத்தம் செய்தோர் பற்றி..

1247. ”ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான். இறைவழியில் குத்திக் கொல்லப்படுபவன், வயிற்றுப் போக்கில் இறப்பவன், தண்ணீரில் மூழ்கி மரிப்பவன், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவன், போரில் கொல்லப்படுபவன் ஆகிய ஐந்து பேர்களும் ஷஹீதுகள் ஆவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி:652-653 அபூஹுரைரா (ரலி).


1248. பிளேக் (போன்ற கொள்ளை) நோயால் இறக்கிற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உயிர்த்தியாகியின் அந்தஸ்து கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2830 அனஸ் இப்னு மாலிக் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on அறப்போரில் உயிரைத் தத்தம் செய்தோர் பற்றி..

கடற்பயண அறப்போர்.

1246. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம் (ரலி), உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி (ஸல்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, சிரித்துக் கொண்டே கண் விழித்தார்கள். உம்மு ஹராம் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் வீரர்களாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டார்கள். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் மன்னர்களாக அல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப் போல்… ஏறிச் செல்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உம்மு ஹராம் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர் (ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, தம் தலையை(த் தலையணையில்) வைத்(து உறங்க ஆரம்பித்)தார்கள்; பிறகு, சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது உம்மு ஹராம் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் புரிபவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர்..” என்று முன்பு போன்றே கூறினார்கள். உம்மு ஹராம் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்) முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (சைப்ரஸ் தீவின் மீது அறப்போர் புரியச் சென்றவர்களுடன் உம்மு ஹராம் (ரலி) அவர்களும் கடல் பயணம் செய்து கடலிலிருந்து (தீவின் ஒரு பகுதிக்குப்) புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்கள்.

புஹாரி : 2788- 2789 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on கடற்பயண அறப்போர்.

ஒருவன் முஸ்லிமாவது எப்போது?

மிகவும் எளிது!

தனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து

அல்லாஹ் எனும்
ஏக இறைவனை தவிர்த்து வேறு
இறைவன் இல்லை;
முஹம்மத் (ஸல்) அவர்கள்
அவனுடைய தூதர் ஆவார்கள்!

எனும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஒருவர் முஸ்லிமாகிறார்.

இவ்வாறு பறைசாற்றுவதன் மூலம் அவர், இறைத்தூதர்கள் அனைவரின் மீதும், அவர்கள் கொண்டு வந்த இறைவேதங்கள் அனைத்தின் மீதும் நம்பிக்கைக் கொண்டவராகின்றார். இத்தகைய மனிதர் முஸ்லிம் எனப்படுகின்றார்.

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.
 

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on ஒருவன் முஸ்லிமாவது எப்போது?

செயல்கள் எண்ணங்களைப் பொறுத்தே…

1245. செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6689 உமர் இப்னு அல்கத்தாப் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on செயல்கள் எண்ணங்களைப் பொறுத்தே…

அல்லாஹ்வின் வாக்கு மேலோங்க போரிடுபவரின் சிறப்பு.

1243. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஒருவர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார்; மற்றொரு மனிதர் புகழுக்காகப் போரிடுகிறார்; இன்னொரு மனிதர் தன் வீரத்தைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார். (இவர்களில்) இறைவழியில் போரிடுபவர் எவர்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘(இவர்களில் எவருமே இறைவழியில் போரிடுபவராக இல்லை.) அல்லாஹ்வின் (ஏகத்துவ) வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 2810 அபூமூஸா (ரலி).

1244. ‘ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்திற்காகப் போராடுகிறார். (இன்னொருவர்) தம் குலப்பெருமைகளைக் காக்கும் சீற்றத்துடன் போரிடுகிறார். இவற்றில் இறைவழியில் செய்யப்படும் போர் எது?’ என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, ‘அல்லாஹ்வின் கொள்கை (இவ்வுலகில்) மேலோங்குவதற்காக (மட்டும்) போர் புரிகிறவர் தாம் மகத்துவமும் கண்ணியமுமிக்க இறைவழியில் போரிட்டவராவார்’ என்று கூறினார்கள்.

புஹாரி : 123 அபூ மூஸா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on அல்லாஹ்வின் வாக்கு மேலோங்க போரிடுபவரின் சிறப்பு.

நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கையை கூறுக!

கேள்வி எண்: 75. அபூஹுரைரா (ரலி), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி),
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கையைக் கூறுக. Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கையை கூறுக!