முயல் கறி உண்ண ஆகுமானது.

1276. மர்ருழ் ழஹ்ரான், என்னுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை (அதன் பொந்திலிருந்து) கிளப்பி விரட்டினோம். மக்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து களைத்து விட்டார்கள். நான் அதைப் பிடித்து விட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் பிட்டத்தை அல்லது தொடைகளை அல்லாஹ்வின் தூதரிடம் அனுப்பினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உண்டார்களா? என்று ஓர் அறிவிப்பாளர் கேட்க, மற்றொரு அறிவிப்பாளர் (ஆம்) நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து உண்டார்கள் என்று கூறிவிட்டு அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறினார்.

புஹாரி : 2572 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on முயல் கறி உண்ண ஆகுமானது.

வெட்டுக்கிளியை உண்ணலாம்.

1275. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘ஏழு’ அல்லது ‘ஆறு’ புனிதப் போர்களில் கலந்து கொண்டோம். நபி (ஸல்) அவர்களுடன் நாங்களும் வெட்டுக்கிளிகளைச் சாப்பிட்டு வந்தோம்.

புஹாரி : 5495 சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on வெட்டுக்கிளியை உண்ணலாம்.

அல்லாஹ்வுக்கு முன் யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்து விடும் ஓர் நாள்!

20:105. (நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப் பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி) விடுவான்” என்று நீர் கூறுவீராக.

20:106. “பின்பு, அவற்றை சமவெளியாக்கி விடுவான்.

20:107. “அதில் நீர் மேடு பள்ளத்தைக் காணமாட்டீர்”. Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வுக்கு முன் யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்து விடும் ஓர் நாள்!

உடும்புக் கறி உண்ணலாம்.

1271. உடும்பை நான் உண்ணவும் மாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென) நான் தடை செய்யவும் மாட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5536 இப்னு உமர் (ரலி).

1272. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் ஓர் இறைச்சியை உண்ணச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர், அது உடும்பு இறைச்சி என்று அவர்களை அழைத்துச் சொன்னார்கள். உடனே அவர்கள் (அதை உண்ணுவதை) நிறுத்திவிட்டார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘சாப்பிடுங்கள்’ அல்லது ‘உண்ணுங்கள்’. ஏனெனில், அது, ‘அனுமதிக்கப்பட்டதாகும்’ அல்லது, ‘அதனால் குற்றமில்லை’என்று கூறினார்கள். ஆயினும், அது என் (பரிச்சியமான) உணவு அல்ல” என்றார்கள்.

புஹாரி : 7267 இப்னு உமர் (ரலி).

1273. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் சிறிய தாயாராவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களின் சகோதரி ஹுஃபைதா பின்த் ஹாரிஸ் (ரலி) நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா (ரலி) அந்த உடும்பு இறைச்சியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள். இறைத்தூதர் அவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தம் கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் ‘நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தம் கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் ‘உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை” என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

புஹாரி : 5391 காலித் பின் வலீத் (ரலி).

1274. என் தாயரின் சகோதரியான உம்மு ஹூஃபைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு (உலர்ந்த) பாலாடைக் கட்டியையும் வெண்ணெயையும் உடும்புகளையும் அன்பளிப்பாகத் தந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பாலாடைக் கட்டியிலிருந்தும், வெண்ணையிலிருந்தும் (சிறிது எடுத்து) உண்டார்கள். ஆனால் அவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றியதால் உடும்புகளை உண்ணாமல் விட்டு விட்டார்கள். (எனினும்) அது (உடும்பு) அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டது. அது ஹராமாக (தடை செய்யப்பட்டதாக) இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டிருக்காது.

புஹாரி :2575 இப்னு அப்பாஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on உடும்புக் கறி உண்ணலாம்.

அல்லாஹ்வுடையவும், அவன் தூதருடையவும் சாபத்தைப் பெற்ற இவர்கள் யார்?

கேள்வி எண்: 77. ‘வட்டி வாங்கி புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்கு (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்’ என்றார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யார்? Continue reading

Posted in கேள்வி பதில் | 1 Comment

குதிரை இறைச்சி உண்ணலாம்.

1269. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாம் எனத் தடைவிதித்தார்கள். குதிரைகளை (அவற்றின் இறைச்சியை உண்ணலாமென) அவர்கள் அனுமதித்தார்கள்.

புஹாரி :4219 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

1270. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு குதிரையை (அதன் கழுத்து நரம்பை) அறுத்து (‘நஹ்ர்’ செய்து) அதை உண்டோம்.

புஹாரி : 5510 அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on குதிரை இறைச்சி உண்ணலாம்.

இஸ்லாம் பொருள் என்ன?

இஸ்லாம் எனும் அரபிச்சொல் சரணடைதல் – கட்டுப்படுதல் எனும் பொருள்படும். இச்சொல் அமைதி எனும் மூலச்சொல்லிலிருந்து பிறந்தது. மதக் கருத்தோட்டத்தின்படி நோக்கினால், இச்சொல்லுக்குரிய சரியான – பொருத்தமான பொருள் இறை நாட்டத்தின் பால் தன்னை முழுமையாக அர்ப்பணித்தல் என்பதே!

முஸ்லிம்கள் ஏக இறைவனை விடுத்து முஹம்மத் (ஸல்) என்பவரை இறைவனாகக் கருதுகின்றார்கள் எனும் பொருளில் சிலர் இஸ்லாத்தை முஹம்மதியம் – Muhammadinism என்று கூறுகின்றனர். இக்கருத்து முற்றிலும் தவறானது.

“முஸ்லிம்கள் வணங்குவதும்
வழிபடுவதும் ஏக இறைவனான
அல்லாஹ் ஒருவனை மட்டுமே!”

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.
 

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on இஸ்லாம் பொருள் என்ன?

கழுதை இறைச்சி உண்ணத் தடை.

1262. கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘முத்அத்துன்னிஸா.”.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.

புஹாரி : 4216 அலீ (ரலி).

1263. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள்.

புஹாரி : 5527 அபூதலபா (ரலி).

1264. நாட்டுக் கழுதையின் இறைச்சியை உண்ண வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.

புஹாரி :4218 இப்னு உமர் (ரலி).

1265. கைபர் கோட்டையின் முற்றுகையில் ஈடுபட்டிருந்த நாள்களில் நாங்கள் பசி பட்டினியால் பீடிக்கப்பட்டிருந்தோம். கைபர் போர் தொடங்கிய நாளில் நாங்கள் காட்டுக் கழுதைகளை வேட்டையாடிப் பிடித்து அவற்றை அறுத்தோம். (அவற்றைச் சமைக்கின்ற) பாத்திரங்கள் கொதிக்கத் தொடங்கியபோது அல்லாஹ்வின் தூதருடைய அறிவிப்பாளர், ‘பாத்திரங்களைக் கவிழ்த்து விடுங்கள். கழுதைகளின் இறைச்சிகளில் சிறிதும் உண்ணாதீர்கள்” என்று (உரக்கக் கூவி) அறிவித்தார். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) (தொடர்ந்து) கூறுகிறார்கள்: இந்த அறிவிப்பைச் செவியுற்ற நாங்கள், ‘அதிலிருந்து குமுஸ் – அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரிய ஐந்திலொரு பங்கு நிதி செலுத்தப்படாமல் இருந்ததால் தான் இப்படி அறிவிக்கப்படுகிறது” என்று சொன்னோம். மற்றவர்கள், ‘(அப்படியல்ல) அதை என்றைக்குமாக நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி :3155 இப்னு அபீஅவ்ஃபா (ரலி).

1266. (கைபர் போரில்) மக்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு (நாட்டு)க் கழுதைகள் கிடைத்தன. உடனே அவற்றை மக்கள் சமைத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘பாத்திரங்களைக் கவிழ்த்து விடுங்கள்” என்று பொது அறிவிப்புச் செய்தார்.

புஹாரி:4221 பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1267. நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைப் புசிக்க வேண்டாமென இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தற்குக் காரணம், அது மக்களைச் சுமந்து செல்லும் வாகனமாக இருப்பதனால் (அது உண்ணப்படும் பட்சத்தில்) அவர்களுக்கு வாகனம் இல்லாமல் போய் விடுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள் என்பதாலா? அல்லது கைபர் போரின்போது நாட்டுக் கழுதைகளை (புசிக்க வேண்டாமென) அவர்கள் (நிரந்தரமாகத்) தடைசெய்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியாது.

புஹாரி : 4227 இப்னு அப்பாஸ் (ரலி).

1268. நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது நெருப்பு ஒன்று மூடப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே, ‘எதற்காக இந்த நெருப்பு மூட்டப்படுகிறது?’ என்று கேட்டார்கள். ‘நாட்டுக் கழுதை இறைச்சியைச் சமைப்பதற்காக” என்று மக்கள் பதிலளித்தார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘பானைகளை உடைத்து அவற்றிலுள்ள (இறைச்சி, உணவு ஆகிய)வற்றை எறிந்துவிடுங்கள்” என்று உத்திரவிட்டார்கள். மக்கள், ‘அதிலுள்ளவற்றை எறிந்துவிட்டு அவற்றைக் கழுவி விடலாமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(அவ்வாறே) கழுவிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 2477 ஸலமா பின் அக்வஹ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on கழுதை இறைச்சி உண்ணத் தடை.

கடலில் உள்ள உயிரினங்களை மரணித்திருந்தாலும் உண்ணலாம்.

1261. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் குதிரைப்படை வீரர்களான முந்நூறு பேரை (ஒரு புனிதப் போருக்கு) அனுப்பினார்கள். அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரலி) எங்கள் தலைவராக இருந்தார்கள். நாங்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எனவே, நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம். எங்களைக் கடுமையான பசி பீடிக்க, கருவேல மரத்தின் இலையை நாங்கள் புசித்தோம். எனவே, அந்தப் படைப் பிரிவு ‘கருவேல இலைப்படைப் பிரிவு’ என்று பெயர் சூட்டப்பட்டது. கடல் எங்களுக்காக ‘அல் அம்பர்’ எனப்படும் (ஒரு வகை மீன் இனப்) பிராணியை (கரையில்) போட்டது. நாங்கள் அதிலிருந்து அரை மாதம் உண்டோம். அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக் கொண்டோம். அதனால் எங்கள் (வலிமையான) உடல்கள் எங்களுக்கு திரும்பக் கிடைத்துவிட்டன. அபூ உபைதா (ரலி) அந்த (பெரிய) மீனின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுத் தம்முடனிருந்த மிக உயரமான மனிதரிடம் சென்றார்கள். (அவரை அந்த விலா எலும்பின் கீழே நடந்து செல்லும்படி கேட்டுக் கொண்டார்கள்.) மற்றோர் அறிவிப்பில் ‘ஒரு மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு அந்த எலும்பு(க் கூடடுக்)க்குக் கீழே நடந்து சென்றார்கள்” என்று இடம் பெற்றுள்ளது. ஜாபிர் (ரலி) கூறினார்:அந்தப் படையினரில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்களையும் மீண்டும் மூன்று ஒட்டகங்களையும் அறுத்தார். பிறகு அபூ உபைதா (ரலி), ‘(இனி அறுக்க வேண்டாம்” என்று) அவரைத் தடுத்து விட்டார்கள்.

புஹாரி : 4361 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on கடலில் உள்ள உயிரினங்களை மரணித்திருந்தாலும் உண்ணலாம்.

அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு திருப்தி பெறுதல் என்பது எவ்வாறு?

கேள்வி எண்: 76. “அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு தாராளமாக ஆகாரம் வழங்குகின்றான். மேலும் தான் நாடுகின்றவர்களுக்கு அவன் அளவோடு வழங்குகின்றான். எனினும் இவர்கள் உலக வாழ்க்கையில் மூழ்கி அதைக்கொண்டே பெரிதும் திருப்தி அடைகின்றார்கள். ஆனால், மறுமைக்கு எதிரில் இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமேயன்றி வேறில்லை” என்ற திருமறை வசனம் எது? இதன் மூலம் நாம் பெறும் படிப்பினைகள் என்ன? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு திருப்தி பெறுதல் என்பது எவ்வாறு?