மோதிரத்தில் இலச்சினை.

1356. நபி (ஸல்) அவர்கள் ஒரு மடல் எழுதிடும்படிக் கூறினார்கள். அல்லது எழுதிட நாடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ‘அவர்கள் எந்த மடலையும் முத்திரையிடப்படாமல் படிக்க மாட்டார்கள்’ என்றும் சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் ‘முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்பதாகும். நபி (ஸல்) அவர்களின் கையில் அம்மோதிரம் இருக்கும் நிலையில் அதன் (பளிச்சிடும்) வெண்மையை (இப்போதும் நேரில்) நான் பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது” என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

புஹாரி : 65 அனஸ் (ரலி)

1357. ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் வெள்ளிமோதிரம் ஒன்றை கண்டேன். பிறகு மக்கள், (அதைப்போன்று) வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து) கொண்டார்கள்.எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (முதலில் அணிந்திருந்த) தம் (தங்க) மோதிரத்தை(க் கழற்றி) எறிந்தார்கள். பின்னர் மக்களும் தம் (தங்க) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்துவிட்டனர்.

புஹாரி :5868 அனஸ் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on மோதிரத்தில் இலச்சினை.

எந்த மூன்று மனிதர்களின் தீய விதிக்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது?

கேள்வி எண்: 83. எந்த ‘மூன்று மனிதர்களின் தீய விதிக்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பழாலா பின் உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on எந்த மூன்று மனிதர்களின் தீய விதிக்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது?

வெள்ளி மோதிரம் அணிய அனுமதி.

1354. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, அபூ பக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (இறைத்தூதர் முஹம்மது) என்றிருந்தது.

புஹாரி :5873 இப்னு உமர் (ரலி).

1355. நபி (ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, ‘நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் (‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். எனவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்களின் சுண்டுவிரலில் அது மின்னியதை இப்போதும் நான் (என் மனத்திரையில்) பார்க்கிறேன்.

புஹாரி : 5874 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on வெள்ளி மோதிரம் அணிய அனுமதி.

தங்க மோதிரம் அணியத் தடை.

1352. நபி (ஸல்) அவர்கள் தங்க மோதிரத்தை அணியவேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடைவிதித்தார்கள்.

புஹாரி : 5864 அபூஹூரைரா (ரலி).

1353. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டிருந்தார்கள். அதன் குமிழைத் தம் உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்தார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைத் தயார் செய்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழறறிவிட்டு, ‘நான் இந்த மோதிரத்தை உள்ளங்கைப் பக்கமாக அதன் குமிழ் அமையும்படி அணிந்து கொண்டிருந்தேன்” என்று கூறி, அதை எறிந்துவிட்டார்கள். பிறகு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதை ஒருபோதும் நான் அணியமாட்டேன்” என்று கூறினார்கள். உடனே மக்களும் தங்களின் மோதிரங்களை(க் கழற்றி) எறிந்தனர்.

புஹாரி :6651 இப்னு உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on தங்க மோதிரம் அணியத் தடை.

சோதனைகள் ஏதுமின்றி இலகுவாக சொர்க்கம் செல்ல வழியுண்டா?

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) ”அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)” என்று கேட்டதற்கு ”அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது” என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 2:214)

அலிஃப்; லாம்; மீம். மனிதர்கள் ”நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதனைப் பற்றி) அவர்கள் சோதிக்கப் படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?

இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கின்றோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறும்) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான். (அல்குர்ஆன் 29:1,2,3)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on சோதனைகள் ஏதுமின்றி இலகுவாக சொர்க்கம் செல்ல வழியுண்டா?

தற்பெருமையுடன் நடக்காதே.

1351. (முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5789 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on தற்பெருமையுடன் நடக்காதே.

பெருமைக்காக ஆடையை கரண்டைக்கு கீழ் உடுத்தல்.

1349. நபி (ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள்.

புஹாரி : 5784 இப்னு உமர் (ரலி).

1350. கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5788 அபூ ஹுரைரா(ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on பெருமைக்காக ஆடையை கரண்டைக்கு கீழ் உடுத்தல்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆனது எப்படி?

அப்பொழுது அவருக்கு வயது 40! வழக்கம்போல் ஹிரா குகையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த வேளை அது! வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் வஹீ எனப்படும் இறைச்செய்தி முதன் முதலாக இறங்கிற்று. அவருடைய வாழ்வில் 23 வருடங்கள்வரை இறங்கிய இந்த இறைச்செய்தியே திருக்குர்ஆன் எனப்படுகின்றது.

வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக தான் பெற்ற இறைச்செய்தியான திருக்குர்ஆனை தன் சமூகத்தாரிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார்கள். ஒரு சிறிய கூட்டம் அவருடைய இந்தப் பேச்சுக்கு செவிசாய்க்க ஆரம்பித்தது. இதன் விளைவாக அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளாக நேர்ந்தது.

இறைநம்பிக்கை கொண்ட அந்த சிறிய கூட்டத்தின் மீது அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஒரு கட்டத்தில் மக்காவாசிகளின் பகைமை உணர்வு முற்றிப்போனது. எந்த அளவுக்கு எனில், கி.பி. 622ல் அந்நகரை விட்டு புலம்பெயர்ந்து செல்லும்படி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged | Comments Off on முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆனது எப்படி?

மென்பட்டு விரிப்புகள் உபயோகிக்கலாம்.

1348. ”(எனக்குத் திருமணம் ஆன பொழுது) உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கின்றனவா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘எங்களிடம் எப்படி அந்த விரிப்புகள் இருக்கும்?’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள். (பின்னர் ஒரு நாளில்) நான் (என் மனைவியான) அவரிடம் ‘எங்களைவிட்டு உன் விரிப்புகளை அப்புறப்படுத்து” என்று கூறுவேன். அவள், ‘நபி (ஸல்) அவர்கள், ‘விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்’ என்று கூறவில்லையா?’ என்று கேட்பாள். ‘அப்படியானால் அவற்றை (அவ்வாறே) விட்டு விடுகிறேன்” (என்று நான் கூறுவேன்.)

புஹாரி 3631 ஜாபிர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on மென்பட்டு விரிப்புகள் உபயோகிக்கலாம்.

ஒட்டுப் போட்ட ஆடைகளை அணிதல்.

1347. ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக்காட்டி, ‘இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது” என்றார்கள்.

புஹாரி : 5818 அபூபுர்தா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on ஒட்டுப் போட்ட ஆடைகளை அணிதல்.