எந்த மூன்று மனிதர்களின் தீய விதிக்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது?

கேள்வி எண்: 83. எந்த ‘மூன்று மனிதர்களின் தீய விதிக்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பழாலா பின் உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்?

பதில்: மூன்று மனிதர்களின் தீய விதிக்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது. முஸ்லிம் உம்மத்திலிருந்து பிரிந்து தன்னுடைய இமாமிற்கு (முஸ்லிம் ஆட்சியாளருக்கு) மாறு செய்து அதே நிலையில் இறப்பவன், தன் எஜமானனிடமிருந்து ஓடிச் சென்று அவனிடம் திரும்புவதற்கு முன் இறப்பவன், ஒரு பெண்ணிற்குத் தேவையானவைகளை அவன் (கணவன்) அளித்து விட்டுச் சென்று விடுகிறான். ஆனால், அவன் இல்லாதபோது தபர்ருஜ் செய்து தன் அழகை வெளிப்படுத்துபவள். இத்தகையோருக்காக வருத்தப்படாதீர்கள்’ அறிவிப்பவர்: பழாலா பின் உபைத் (ரலி), நூல்: அஹ்மத்.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.