Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

உஹது மலையை நேசித்தல்.

880. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரிலிருந்து (திரும்பியவாறு மதீனாவை) முன்னோக்கிச் சென்றோம். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது அவர்கள், ‘இது ‘தாபா’ (தூய்மையானது) ஆகும். இதோ இந்த உஹத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்” என்று கூறினார்கள். புஹாரி :4422 அபூஹூமைத் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on உஹது மலையை நேசித்தல்.

சுவனப் பூங்கா.

878. ”என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1195 அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி). 879. ”என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர், என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் அருகிலுள்ளது என … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on சுவனப் பூங்கா.

பிளேக் நோய் மற்றும் தஜ்ஜாலிடமிருந்து மதீனா பாதுகாப்பு.

871. ‘தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாசலிலும் இரண்டு வானவர்கள் இருப்பார்கள்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1879 அபூஹூரைரா (ரலி). 872. ”யத்ரிபு என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பிளேக் நோய் மற்றும் தஜ்ஜாலிடமிருந்து மதீனா பாதுகாப்பு.

மதினாவின் சிறப்புக்கு நபி (ஸல்) அவர்களின் துஆ

863.”இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கியது போல் நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் ஸாவு, முத்து ஆகியவற்றில் (பரக்கத்துக்காக) பிரார்த்தித்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2129 அப்துல்லாஹ் இப்னு ஸைத் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , | Comments Off on மதினாவின் சிறப்புக்கு நபி (ஸல்) அவர்களின் துஆ

இஹ்ராமில்லாது மக்காவுக்குள் நுழையலாமா?

862. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, ‘இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்!’ எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘அவனைக் கொன்று விடுங்கள்!” என்று உத்தரவிட்டார்கள். புஹாரி :1846 அனஸ் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இஹ்ராமில்லாது மக்காவுக்குள் நுழையலாமா?

மக்காவின் புனித தன்மையும் அதனைப் பேணுதலும்.

859. ”அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்! எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போரிடுதல்) அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது. எனக்குக் கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது! எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது யாரேனும் தவறவிட்ட பொருட்களை, அது பற்றி அறிவிப்புச் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மக்காவின் புனித தன்மையும் அதனைப் பேணுதலும்.

ஹஜ் உம்ரா அரஃபா தின சிறப்புகள்.

855. ”ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1773 அபூஹுரைரா (ரலி). 856. ”மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஹஜ் உம்ரா அரஃபா தின சிறப்புகள்.

இணைவைப்போர் நிராகரிப்போர் ஹஜ் உம்ரா செய்ய தடை நிர்வாண தவாஃப் தடை.

854. ஹஜ்ஜத்துல் விதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ‘எச்சரிக்கை! இந்த ஆண்டிற்குப் பின்னர் இணைவைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக்கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் வலம் வரக்கூடாது’ என அறிவிக்கச் செய்தார்கள். புஹாரி : 1622 அபூஹூரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , | Comments Off on இணைவைப்போர் நிராகரிப்போர் ஹஜ் உம்ரா செய்ய தடை நிர்வாண தவாஃப் தடை.

ஹஜ் உம்ராவிலிருந்து திரும்பும் போது…

852. நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் கற்கள் நிறைந்த இடத்தில் தம் ஒட்டகத்தை அமர வைத்து, அங்கேயே (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள். இப்னு உமர் (ரலி), இது போன்றே செய்வார் என நாஃபிஉ கூறுகிறார். புஹாரி :1532 இப்னு உமர் (ரலி). 853. பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் முஅர்ரஸ் எனுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , | Comments Off on ஹஜ் உம்ராவிலிருந்து திரும்பும் போது…

ஹஜ் அல்லது பிரயாணத்திலிருந்து திரும்பினால் என்ன கூறவேண்டும்?

851. நபி (ஸல்) அவர்கள் புனிதப் போரிலிருந்து, அல்லது ஹஜ்ஜிலிருந்து, அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது ஒவ்வொரு மேடான பகுதியில் ஏறும்போதெல்லாம் மூன்று முறை ‘அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்வார்கள். பிறகு (பின்வருமாறு) கூறுவார்கள். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல்முல்க்கு வலஹுல் ஹம்து வஹ்வ அலா குல்லி … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஹஜ் அல்லது பிரயாணத்திலிருந்து திரும்பினால் என்ன கூறவேண்டும்?