நபி (ஸல்) அவர்களின் பிற பெயர்கள்.

1517. எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன். நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ (குஃப்ரை) அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஞர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3532 ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on நபி (ஸல்) அவர்களின் பிற பெயர்கள்.

மக்கா மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் இருந்தார்கள்?

1516. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் நாற்பதாம் வயதில் நபியாக நியமிக்கப்பட்டார்கள். தமக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் மக்காவில் பதின்மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். பிறகு ஹிஜ்ரத் செய்யும்படி அவர்களுக்கு கட்டளையிடப்பட, ஹிஜ்ரத் செய்து (மதீனாவில்) பத்தாண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள்.

புஹாரி : 3902 இப்னு அப்பாஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on மக்கா மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் இருந்தார்கள்?

மரணத்தின் போது நபிகளாரின் வயது.

1515. நபி (ஸல்) அவர்கள் தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள்.

புஹாரி : 3536 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , | Comments Off on மரணத்தின் போது நபிகளாரின் வயது.

நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய வசனம் எது?

கேள்வி எண்: 95. நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய வசனம் எது? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய வசனம் எது?

முதல் வஹியின் போது நபிகளாரின் வயது.

1514. அனஸ் (ரலி) நபி (ஸல்) அவர்களின் உருவ அமைப்பை விவரிக்கக் கேட்டேன். அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் மக்களில் நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள்; நெட்டையானவர்களாகவும் இல்லை. குட்டையானவர்களாகவும் இல்லை. பொன்னிறமுடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை. கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை. முழுக்கவே படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வகை முடியை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருந்தபோது அவர்களுக்கு குர்ஆன் அருளப்படலாயிற்று. குர்ஆன் அருளப்படும் நிலையிலேயே மக்கா நகரில் பத்து ஆண்டுகள் தங்கி வசித்து வந்தார்கள். மதீனா நகரிலும் பத்து ஆண்டுகள் வசித்து வந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையிலேயே இறந்து விட்டார்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி :3547 ரபிஆ பின் அபீஅப்துர் ரஹ்மான் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on முதல் வஹியின் போது நபிகளாரின் வயது.

மூத்தோரை முஸ்லிம்கள் மதிப்பது எவ்வாறு?

மிகவும் கடினமாதொரு காலச் சூழலில் மனித சமூகம் உழன்று கொண்டிருக்கின்றது. இத்தகையதொரு சிரமநிலையில், தம்மைப் பெற்ற தாய்-தந்தையரைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்வது, இறையருளுக்கும், மதிப்புக்கும் உரிய செயலாகும். அதுமட்டுமல்ல, இறைகட்டளையை மதித்து தமது ஆன்மிக நிலையை வளர்த்து கொள்ளும் ஒரு மாபெரும் வாய்ப்புமாகும் அது!

தம்மைப் பெற்றெடுத்த தாய்-தந்தையருக்காக பிரார்த்திக்கும்படி மட்டும் மனிதனுக்கு இறைவன் கட்டளையிடவில்லை. மாறாக, நம்மைப் பராமரித்து வளர்க்க யாருமில்லாது நிராதரவான நிலையில் குழந்தையாக நாம் இருந்தோம். அந்நேரம், நமது சுகத்துக்காகவும், தேவைகளுக்காகவும் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தாம் பெற்றோர்!

இதனைக் கவனத்தில் கொண்டு பெற்றோர் மீது எல்லையில்லா கருணை காட்டும்படி இறைவன் கட்டளையிடுகின்றான்! குறிப்பாக, தாயைமதித்துப் போற்றும் வகையில் முஹம்மத் (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

சுவனம் அன்னையின் காலடியில் இருக்கின்றது!

முஸ்லிம் பெற்றோர் வயது முதிந்தவர்களாகி விட்டால், அவர்கள் கருணையுடன் நடத்தப்படுகின்றார்கள். அவர்களிடம் காட்டப்படும் கருணையிலும், பரிவிலும் எந்தவொரு குறையும் ஏற்படுவதில்லை. பெற்றோருக்குத் தொண்டாற்றுவதும் – சேவை புரிவதும் இஸ்லாத்தில் தொழுகைக்கு அடுத்தப்படியான முக்கியத்துவம் வாய்ந்த கடமையாக போற்றப்படுகின்றது.

அதுமட்டுமல்ல, இத்தகையதொரு சேவையைத் தமது பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்ப்பதும் பெற்றோர்க்குரிய உரிமையாகும். (முதிர்ந்த வயதின் காரணமாக) பெற்றோர் (அறிந்தும், அறியாமலும்) செய்கின்ற தவறுகளுக்காக அவர்களை குற்றம் பிடிப்பது மிகவும் வெறுக்கத்தக்க இழிவான ஒரு செயலாகும். பிள்ளைகளின் இத்தகைய செயல்பாடு அவர்களைப் பெற்றவர்களுக்கு பெரும் கவலையைத் தரக்கூடியது.

இதோ, திருக்குர்ஆனின் கட்டளையைக் காணுங்கள்:

உம் அதிபதி(யாகிய அல்லாஹ்) விதித்துள்ளான்: “அவனைத்தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய்-தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமையை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை ‘சீ’ என்றுகூட கூறாதீர்!

மேலும், அவர்களைக் கடிந்து பேசாதீர்! மாறாக, அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக! மேலும், பணிவுடனும், கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக!”

மேலும், “என் இறைவனே! சிறுவயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடன் பாசத்துடனும் வளர்த்தார்களோ, அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக!” என நீர் இறைஞ்சியவண்ணம் இருப்பீராக! திருக்குர்ஆன்: 17:23,24  

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மூத்தோரை முஸ்லிம்கள் மதிப்பது எவ்வாறு?

நபித்துவ முத்திரை பற்றி….

1513. ‘என்னுடைய சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்’ எனக் கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி (ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது” .
புஹாரி : 190 ஸாயிப் இப்னு யஸீது (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on நபித்துவ முத்திரை பற்றி….

அல்லாஹ் சூட்டிய அழகிய பெயர் ‘முஸ்லிம்’!

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; ”எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, ”உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினார். (ஸூரா பகரா : 133)

(முஃமின்களே!)”நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்”. (ஸூரா பகரா : 136)

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, ”அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார் (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன் ”நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” (ஸூரா ஆல இம்ரான் : 52) Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ் சூட்டிய அழகிய பெயர் ‘முஸ்லிம்’!

நபி (ஸல்) அவர்களின் நரை முடி பற்றி….

1510. நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் (தம் நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்)அவர்களுக்குச் சிறிதளவே நரை ஏற்பட்டிருந்தது” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :5894 அனஸ் (ரலி).

1511. நபி (ஸல்) அவர்களை பார்த்திருக்கிறேன். அவர்களின் கீழுதட்டின் அடியிலுள்ள (தாடைக்கு மேலுள்ள) குறுந்தாடியில் நான் வெண்மையைக் கண்டேன்.

புஹாரி : 3545 வஹப் அபீ ஜூஹைஃபா (ரலி).

1512. நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன். ஹஸன் (ரலி) (தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்கிறார்கள்.

புஹாரி :3543 வஹப் அபீ ஜூஹைஃபா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on நபி (ஸல்) அவர்களின் நரை முடி பற்றி….

நபி (ஸல்) அவர்களின் முடி பற்றி….

1508. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (தலை) முடி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (தலை) முடி அலையலையானதாக இருந்தது. படிந்த முடியாகவும் இல்லை. சுருள் முடியாகவும் இல்லை. அவர்களின் காது மடல்களுக்கும் அவர்களின் தோளுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :5905 அனஸ் (ரலி).

1509. நபி(ஸல்) அவர்களின் (தலை) முடி அவர்களின் தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தது.

புஹாரி : 5904 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on நபி (ஸல்) அவர்களின் முடி பற்றி….