கிறிஸ்தவ திருமணங்களைப் போன்றவையா இஸ்லாமிய திருமணங்கள்?

இஸ்லாமிய திருமணம் என்பது ஒரு இரகசிய சடங்கு (Sacrament) அல்ல! மாறாக, எளிமையான ஒரு உறவுமுறை ஆகும். இரு தரப்பாரும் நிபந்தனைகள் விதிக்க உரிமை பெற்ற ஒரு சட்டபூர்வ வாழ்க்கை ஒப்பந்தமே அன்றி வேறில்லை! எனவே, திருமண மரபும், வழக்கமும் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடிய ஒரு விசாலமான செயல்முறை!

விவாக விலக்கு என்பது பரவலான ஒன்றும் அல்ல! தடுக்கப்பட்ட ஒன்றும் அல்ல! மாறாக, வேறு தீர்வே இல்லை எனும் நிலையில் இறுதியாகப் பயன்படுத்த வேண்டிய ஆயுதமே அது!

இஸ்லாமிய கோட்பாட்டின்படி, தனது விருப்பத்துக்கு மாற்றமாக, மணமுடிக்கும்படி எந்தவொரு முஸ்லிம் பெண்ணையும் எவரும் நிர்பந்திக்க முடியாது. பெண்ணைப் பெற்றவர்கள்கூட, தமது மகளுக்குத் தகுதியானவர் என தாம் நினைப்பவரை மணமுடித்துக் கொள்ளும்படி பெண்ணுக்கு ஆலோசனை மட்டுமே வழங்க முடியுமே தவிர, அவளை நிர்ப்பந்திக்க முடியாது.

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on கிறிஸ்தவ திருமணங்களைப் போன்றவையா இஸ்லாமிய திருமணங்கள்?

வஹியின் போது….

1505. ‘ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவு படுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்து விடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்’ என ஆயிஷா (ரலி) குறிப்பிட்டார். மேலும்,”கடும் குளிரான நாள்களில் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி (ஸல்) அவர்களை விட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்” என ஆயிஷா (ரலி) கூறினார்.

புஹாரி : 2 ஆயிஷா (ரலி).

1506. நபி (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுடையவர்களாகவும் (மேல் முதுகும் மார்பும் விசாலமான நிலையில்) இரண்டு புஜங்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களின் காதுகளின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அதை விட அழகான ஆடையை நான் கண்டதேயில்லை.

புஹாரி : 3551 பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1507. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகிய முகம் உடையவர்களாகவும் அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு உயரமானவர்களாகவும் இல்லை. குட்டையானவர்களாகவும் இல்லை.

புஹாரி : 3549 பராஉ பின் ஆஸிஃப் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on வஹியின் போது….

நறுமணம் மிக்க நபிகளார் (ஸல்) அவர்கள்.

1503. நபி(ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நபி (ஸல்) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை.

புஹாரி : 3561 அனஸ் (ரலி).

1504. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபி(ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்களின் (உடலிலிருந்து வழிகின்ற) வியர்வைத் துளிகளையும் (ஏற்கனவே தம்மிடமுள்ள) நபியவர்களின் தலைமுடியையும் எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிப்பார்கள். பிறகு அதனை வாசனைப் பொருளில் வைப்பார்கள். (இதையெல்லாம்) நபி (ஸல்) அவர்கள் உறங்கும்போதே (செய்து முடிப்பார்கள்).

புஹாரி : 6281 துமாமா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on நறுமணம் மிக்க நபிகளார் (ஸல்) அவர்கள்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று ஆரம்பமாகாத அத்தியாயம் எது?

கேள்வி எண்: 94. “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று ஆரம்பமாகாத அத்தியாயம் எது? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று ஆரம்பமாகாத அத்தியாயம் எது?

நற்குணங்கள்.

1501.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் கறுப்பு நிற அடிமையான அன்ஜஷா எனப்படுபவரும் இருந்தார். அவர் பாட்டுப்பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து) கொண்டிருந்தார். அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உமக்கு நாசம்தான் (வைஹக்க). அன்ஜஷா! நிதானம்! (ஒட்டகத்தின் மேலுள்ள) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!” என்று கூறினார்கள்.

புஹாரி :6161 அனஸ் (ரலி).

1502. இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் -எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழி வாங்கியதில்லை. அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. (அப்போது மட்டும் பழி வாங்குவார்கள்.)

புஹாரி :3560 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on நற்குணங்கள்.

ஒரு முஸ்லிம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணமுடிக்கலாமா?

இஸ்லாம் உலக சமூகங்கள் அனைத்துக்கும் ஒரு வாழ்க்கை நெறியாக அருளப்பட்டது. ஒவ்வொரு காலங்களிலும் வலியுறுத்தப்பட்ட இந்த இறைநெறி அந்தந்த சமூக அமைப்பின் பல்வேறு தேவைகளை ஆகுமான வகையில் பூர்த்தி செய்தது. சூழலும் தேவையும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணமுடிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தலாம். இறைவன் அதற்குரிய நிபந்தனையையும் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

….ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 4:3)

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on ஒரு முஸ்லிம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணமுடிக்கலாமா?

நபி(ஸல்) அவர்கள் அதிக வெட்க சுபாவம் உள்ளவர்கள்.

1499. நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்.

புஹாரி :3562 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1500. நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ‘உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே” என்று அவர்கள் கூறுவார்கள்.

புஹாரி :3559 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on நபி(ஸல்) அவர்கள் அதிக வெட்க சுபாவம் உள்ளவர்கள்.

இல்லை என்று சொல்லாத தாராள மனம்.

1493. நபி (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் ‘இல்லை’ என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலி) கூறக் கேட்டேன்.

புஹாரி :6034 ஜாபிர் (ரலி).

1494. ”பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருள்கள் வந்தால் உனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருள்கள் வரவில்லை. அபூ பக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனியிலிருந்து பொருள்கள் வந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!” என்று அபூ பக்ர் (ரலி) பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று ‘நபி(ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்!” என்றேன். அபூ பக்ர் (ரலி)எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக் கொள்வீராக!” என்று அபூபக்ர் (ரலி) கூறினார்.

புஹாரி :2296 ஜாபிர்(ரலி).

1495. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்” என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, ‘கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது. எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக் கவலைப் படுகிறோம்” என்றார்கள்.

புஹாரி :1303 அனஸ் (ரலி).

1496. ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டார்கள்.

புஹாரி :5998 ஆயிஷா (ரலி).

1497. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ்அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப் படமாட்டார்” என்று கூறினார்கள்.

புஹாரி : 5997 அபூஹூரைரா (ரலி).

1498. (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6013 ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on இல்லை என்று சொல்லாத தாராள மனம்.

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகச் சிறந்தவர்.

1491. நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப் படும்படி) என்னை ‘ச்சீ” என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்” என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை.

புஹாரி :6038 அனஸ் (ரலி).

1492. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னுடைய கையைப் பிடித்து அழைத்துச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! அனஸ் புத்திசாலிப் பையன். அவன் தங்களுக்குப் பணிவிடை செய்யட்டும்” என்றார்கள். அதன்படி நான் நபி (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் போதும் பயணத்தில் இருக்கும்போது அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் செய்த எதைப் பற்றியும் ‘இதை ஏன் நீ இப்படிச் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத எதைப் பற்றியும் ‘இதை ஏன் நீ இப்படிச் செய்யவில்லை?’ என்றோ நபியவர்கள் என்னிடம் கேட்டதில்லை.

புஹாரி :6911 அனஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகச் சிறந்தவர்.

முஸ்லிம் பெண்களின் நிலை என்ன?

இஸ்லாமிய கண்ணோட்டத்தின்படி, பெண் என்பவள், தனக்குரிய சொத்துக்களையும் உடைமைகளையும் தனது விருப்பப்படி ஆகுமான வகையில் பயன்படுத்திக் கொள்ள தன்னுரிமைக் கொண்ட சுதந்திரப் பறவையாவாள். அவள் தனி ஒருத்தியாக இருந்தாலும் சரி, திருமணமானவளாக இருந்தாலும் சரியே!

தான் திருமணம் முடிக்க நாடும் ஆண்மகனிடமிருந்து தனக்குரிய பாதுகாப்புக் கவசமாக (மஹர் எனும் பெயரில்) ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தையோ அல்லது அதற்கு பெறுமானமுள்ள ஒன்றையோ பெற்றுக் கொள்கின்றாள். அதுமட்டுமல்ல, மணமுடித்து சென்றாலும் தனது கணவனின் குடும்பப் பெயரை அவள் உடைமையாக்கிக் கொள்வதில்லை! மாறாக, தன்னுடைய குடும்பப் பெயரைக் கொண்டே அழைக்கப்படுகின்றாள். மானத்தைக் காக்கக் கூடியதாகவும், கண்ணியதுக்குரியதாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை உடுத்துவதற்கு ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமையுண்டு.

சில முஸ்லிம் நாடுகளில் காணப்படும் பெண்களுக்குரிய கண்ணியமான ஆடை வடிவமைப்புகள் அந்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன எனலாம்.

அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நன்னடத்தையும், தமது மனைவியிடம் (உண்மை) பரிவு கொண்ட இறைநம்பிக்கையாளரே தமது இறைநம்பிக்கையில் முழுமையானவர்! 

 நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on முஸ்லிம் பெண்களின் நிலை என்ன?