இஸ்லாமிய திருமணம் என்பது ஒரு இரகசிய சடங்கு (Sacrament) அல்ல! மாறாக, எளிமையான ஒரு உறவுமுறை ஆகும். இரு தரப்பாரும் நிபந்தனைகள் விதிக்க உரிமை பெற்ற ஒரு சட்டபூர்வ வாழ்க்கை ஒப்பந்தமே அன்றி வேறில்லை! எனவே, திருமண மரபும், வழக்கமும் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடிய ஒரு விசாலமான செயல்முறை!
விவாக விலக்கு என்பது பரவலான ஒன்றும் அல்ல! தடுக்கப்பட்ட ஒன்றும் அல்ல! மாறாக, வேறு தீர்வே இல்லை எனும் நிலையில் இறுதியாகப் பயன்படுத்த வேண்டிய ஆயுதமே அது!
இஸ்லாமிய கோட்பாட்டின்படி, தனது விருப்பத்துக்கு மாற்றமாக, மணமுடிக்கும்படி எந்தவொரு முஸ்லிம் பெண்ணையும் எவரும் நிர்பந்திக்க முடியாது. பெண்ணைப் பெற்றவர்கள்கூட, தமது மகளுக்குத் தகுதியானவர் என தாம் நினைப்பவரை மணமுடித்துக் கொள்ளும்படி பெண்ணுக்கு ஆலோசனை மட்டுமே வழங்க முடியுமே தவிர, அவளை நிர்ப்பந்திக்க முடியாது.
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.