கூத்தாநல்லூரில் அல்லாஹ்வுக்கு இணை வைத்தலுக்கு ஒரு மாநாடு

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

பாரம்பரியம் என்றும், முன்னோர்களின் வழிமுறையில் நிலைத்திருத்தல் என்றும் கூறிக் கொண்டு இஸ்லாமிய வழிமுறையை விட்டும் மக்களை திசைதிருப்பி விடும் மௌலானாக்களின், மௌலவிகளின் இஸ்லாமிய விரோதப் போக்கை கவனியுங்கள்.

அல்லாஹ் உலக கல்வி மூலம் சிலருக்கு இல்மைக் (அறிவைக்) கொடுத்து, அவர்களுடைய பாவச்செயல்களின் காரணத்தால் உண்மையை மறைத்து விடுகிறான். ஆனால் இவர்களோ தாங்கள் உண்மையின் மீது நிலைத்திருப்பதாக எண்ணிக் கொண்டு தாங்களும் கெட்டு, தங்களைச் சார்ந்தவர்களையும் வழிகெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்
mahaboob-subhani-copy

அப்துல் வஹ்ஹாப், (கொடையாளனாகிய அல்லாஹ்வின் அடிமை) அப்துர்ரஹ்மான் (அருளாளனனாகிய அல்லாஹ்வின் அடிமை) இதோடு “முஹ்யித்தீன் அடிமை’ ஒப்பிட்டுப் பாருங்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். இதுவல்லவோ தெளிவான இணைவைத்தல். மார்க்கம் கற்ற அறிஞர்களை பின்பற்றுகிறோம், அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற மனப்பால் குடித்துக் கொண்டு அல்லாஹ்வின் கொடிய வேதனை மிக்க நரகை நோக்கி பயணிக்கும் என் அருமை கூத்தாநல்லூர் மார்க்க சகோதரா விழித்துக் கொள்!

இன்னும், அவர்களில்  எவரேனும் “அல்லாஹ்வையன்றி  நிச்சயமாக நானும் ஆண்டவன்தான்” என்று கூறுவாரேயானால்,   அ(த்தகைய)வருக்கு – நாம் நரகத்தையே  கூலியாகக்  கொடுப்போம் – இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக்   கூலி கொடுப்போம். அல்குர்ஆன்: 21:29

மேலுள்ள இறைவசனத்தை அல்லாஹ்வின் மீதுள்ள உள்ளச்சத்தைக் கொண்டு படித்து விட்டு, முஹ்யித்தீன் ஆண்டகை என்று கூறுகிறீர்களே அதை சற்று சீர்தூக்கிப் பாருங்கள். நம்பிக்கைக் கொண்டபின், மொழிகின்ற வார்த்தைகளால் குஃப்ருடைய பக்கம் செல்லுதல் நியாயமோ?

இதே தலைப்பை ஒட்டிய சுவனத்தென்றல் தளத்தின் ஆக்கம் ஒன்றும் அனுமதியுடன் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

நபி (ஸல்) அவர்களின் பிறந்த மாதமாகிய ரபியுல் அவ்வல் முடிந்து விட்டது. பித்அத்களையும் பிறமத கலாச்சாரங்களையும் பின்பற்றுபவர்கள் ரபியுல் அவ்வல் மாதம் முழுவதும் மீலாது விழா என்ற பெயரில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இல்லாத பல புதிய அனாச்சாரங்களை நிறைவேற்றினர். அதை அடுத்து வந்திருக்கின்ற இந்த ரபியுல் ஆகிர் மாதத்தில் ரபியுல் அவ்வல் மாதத்தில் சிலர் நிறைவேற்றிய அனாச்சாரங்களுக்குப் போட்டியாக இந்த மாதத்திலும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நோக்கில் முஹ்யித்தீன் அப்துல் ஜீலானியின் (ரஹ்) நினைவு தினத்தைக் கொண்டாடும் விதமாக இம்மாதம் முழுவதும் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்)நினைவு மாநாடு நடத்துகின்றனர்.
இவ்வகை மாநாடுகளில் மீலாது விழாக்களில் நடக்கும் அனாச்சாரங்களை எல்லாம் மிஞ்சி விடும் அளவிற்கு எல்லை மீறி ஷிர்கின் உச்சக்கட்டத்தை அடைகின்றனர்.

ஆம். தஞ்சை, நாகை திருவாரூர் போன்ற மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் உள்ளவர்கள் ரபியுல் ஆகிர் மாதத்தில் முதல் பதினோரு நாட்களுக்கு முஹ்யித்தீன் ஆண்டகையை? (அவர்கள் அப்படித்தான் அழைக்கின்றனர்) நினைவு கூறும் முகமாக அவர்கள் பெயரில் கொடி ஏற்றி, தபரூக் வழங்கி, பயான் நிகழ்ச்சி நடத்துகின்றனர். இதில் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானியின் (ரஹ்) வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் இறைவனையும் மிஞ்சிய ஆற்றலுள்ளவராக அவரைச் சித்தரித்து கற்பனைக் கதைகளை முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களின் கராமத் (அற்புதங்கள்) என்று கட்டவிழ்த்து விடுகின்றனர். பிறகு பதினோராம் நாளின் இறுதியில் நபி (ஸல்) அவர்களின் மீலாது விழா மாநாட்டை மிஞ்சும் அளவிற்கு பெரிய மாநாடு நடத்துகின்றனர்.

இந்த மாநாட்டின் இறுதியில் அனைவரும் எழுந்து நின்று ‘யா கவ்துல் அஃலம் யா முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ’ என்று ஒட்டு மொத்தமாக உரக்கக் கூவி அவரை ஆயிரத்து ஒரு (1001) முறை அழைக்கின்றனர். அவ்வாறு அழைக்கும் போது முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவ்விடத்திற்கு பிரசன்னமாகி ஒவ்வொருவரும் தம் மனதில் என்ன நாட்டத்தை நினைத்து அவரை அழைத்தாரோ அதை நிறைவேற்றுகிறார் என்று நம்புகின்றனர்.
இதைவிட மிகவும் மோசமானது என்ன வென்றால் முஹ்யித்தீன் ராத்திபு என்ற பெயரில் சிலர் இரவில் வட்டமாக அமர்ந்து தங்களுக்கு முன் ஒரு பெரிய தட்டு ஒன்றில் சில மாவுகளை தூவிவிட்டு பின்னர் விளக்குகளை எல்லாம் அனைத்து விட்டு மேற்கூறியவாறு முஹ்யித்தீன் ஆண்டகையை ஆயிரத்து ஓர் முறை அழைக்கின்றனர். அவ்வாறு அழைத்து முடித்ததும் பின்னர் விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தால் மாவு தூவப்பட்ட அந்த தட்டில் ஒருவரின் காலடித்தடம் இருக்கிறது. அந்த காலடித்தடம் முஹ்யித்தின் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் அங்கு வருகை தந்ததற்கான அடையாளமாம்.

மேலும் அவ்வாறு அவரை ஆயிரத்து ஓர் முறை இருட்டில் அழைத்துக் கொண்டிருக்கும் போது ஓர் ஒளி தென்படுமாம்! அதுவும் பக்தியுடன் அழைப்பவருக்கு மட்டும் தான் அந்த ஒளி தென்படுமாம். அந்நிகழ்ச்சி முடிந்ததும் அந்த ஒளியை நீ பார்த்தாயா? என்று அதில் கலந்துக் கொண்டவர்களைப் பார்த்து ஒவ்வொருவராக அந்த நிகழ்ச்சியின் கலீபா (அதை தலைமை தாங்கி நடத்துபவர்) கேட்பார். அனைவரும் பேந்த பேந்த விழ்த்துக் கொண்டு நான் பார்த்தேன் என்று கதையளப்பார்கள்.

இதை கற்பனையாக நான் எழுதுவதாக யாரும் நினைக்க வேண்டாம். நான் அவர்களுள் ஒருவனாக அறியாமையில் மூழ்கியிருந்தபோது இந்த வகை ராத்திபுகளில் பங்கு கொண்டிருக்கின்றேன். அதற்காக கருனையாளாகிய அல்லாஹ் என்னை மன்னித்தருள வேண்டும் என அவனிடம் மன்றாடுகிறேன். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் அவர்கள் இத்தகைய அறிவீனமான செயல்களை இன்னமும் செய்து கொண்டுதானிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுமாறு பிரார்த்திப்போமாக!

இதைவிடக் கொடுமை என்னவென்றால் நாகை, தஞ்சை, திருவாரூர் (எனக்குத் தெரிந்த மாட்டங்கள்) போன்ற மாவட்டங்களில் உள்ளவர்களில் பலர் தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரும் போது அவர்களை அறியாமல் அவர்களின் வாயிலிருந்தும் உதிரும் வார்த்தை என்ன வெனில் ‘யா முஹ்யித்தீன்’. அதாவது நம்மையறியாது ஒரு ஆபத்து நிகழும் போது நாம் ‘யா அல்லாஹ்’ என்று இறைவனை அழைத்து உதவி தேடுவது போல் அவர்கள் முஹ்யித்தீனை அழைத்து அந்த ஆபத்திலிருந்து அவர்களைக் காக்குமாறு வேண்டுகின்றனர். இன்றளவும் பலர் இதை தொடர்ந்து செய்கின்றனர்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் ‘அவனைத் தவிர வேறு ஒருவரை அழைப்பவர்கள் மிகுந்த வழிகேட்டில் இருக்கிறார்கள்’   என்று கூறுகிறான்.

“கியாம நாள்வரை (அழைத்தாலும் ) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை  அழைப்பவர்களை  விட வழி கெட்டவர்கள்  யார்? தங்களை அழைப்பதையே  அவர்கள் அறிய முடியாது.  அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும்  (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய  பகைவர்களாக  இருப்பர் ; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும்  நிராகரித்து  (மறுத்து) விடுவர்.” (அல்-குர்ஆன் 46:5-6)

இவ்வாறு அழைக்கப்படுபவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்வதற்கு சக்தியற்றவர்களாக இருக்கின்றனர் என அல்லாஹ் கூறுகிறான்: –

“அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி (த்து அழை)க்கின்றீர்களோ ,  அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும்  இல்லை. நீங்கள் அவர்களைப்  பிரார்த்தி(த்து அழை)த்தாலும் ,  அவர்கள் உங்கள் பிரார்த்தனையை  (அழைப்பை )ச் செவியோற்கார் ; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்  ; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும்  அவர்கள் நிராகரித்து  விடுவார்கள்; யாவற்றையும்  நன்கு அறிபவனைப்  போன்று  (அவர்கள் ) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். (அல்-குர்ஆன் 35:13-14)

இப்னு அல்-கைய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவர்களை  அழைத்து தேவைகளை  கோருவது,  அவர்களின் உதவியை நாடுவது,  அவர்களின் பால் திரும்புவது  ஆகியவைகள் அனைத்தும் ஷிர்கின் (இணை வைத்தலின் ) வகைகளாகும்.  இவைகள் தான் ஷிர்கின் (இணை வைத்தலின் ) முக்கிய அடிப்படைகளாகும். ஆதாரம் : பத்-அல் மஜீத்

இணை வைத்தவர்களுக்கு  மன்னிப்பே  கிடைக்காது!

”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான் அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.  அல்லாஹ்வுக்கு  இணை கற்பிப்பவர்  மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.” (திருக்குர்ஆன், 004:048,116)

அல்லாஹ் முஸ்லிமான நம் அனைவருக்கும் அவனுடைய கருணையை பொழிந்து இணை வைக்கும் படுபயங்கர செயல்களிலிருந்து நம்மைக் காத்தருள்வானாகவும்.

நன்றி: சுவனத்தென்றல்

Posted in ஈமான் (நம்பிக்கை) | 10 Comments

அல்லாஹ்வின் அழைப்பு!

ِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

அளவற்ற அருளாளன்,  (55:1)

இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.  (55:2)

அவனே மனிதனைப் படைத்தான்.  (55:3)

அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.  (55:4)

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)

(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் – (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.  (55:6)

மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.  (55:7)

நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.  (55:8)

ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.  (55:9) Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வின் அழைப்பு!

நம்பிக்கை கொண்டோருக்கு அது உறுதியான உண்மை – நிராகரிப்போருக்கு அது கைசேதமே!

ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.

நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.).

நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.

இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.

(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைத்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.

அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்படடதாகும்.

அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் –

அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-

பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.

அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.

ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.

ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.

மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.

ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.

அல்குர்ஆன்: அல்ஹாக்கா: 38 முதல் 52

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நம்பிக்கை கொண்டோருக்கு அது உறுதியான உண்மை – நிராகரிப்போருக்கு அது கைசேதமே!

மறுமை நாள் (அத்தியாயம்-10) இறுதிப் பகுதி

ஷபாஅத்

பரிந்துரை செய்வது என்பது ஷபாஅத் என்பதன் பொருளாகும். அதாவது மறுமை நாளில் மனிதர்களைத் தண்டனையிலிருந்து காக்கவும், தண்டனையைக் குறைக்கவும் பிரதானமாக அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்தலை இது குறிக்கிறது.

அல்லாஹ் கருணை நிறைந்தவன். எனவே முடிந்தளவு அதிகமான மனிதர்கள் சுவர்க்கத்துக்குச் செல்வதையே அவன் விரும்புகிறான். அதற்கு அவன் பல்வேறு வழிகளை வைத்துள்ளான். அவற்றில் ஒன்றாகவே ஷபாஅத் (பரிந்துரை செய்தல்) அமைந்துள்ளது.

அதேவேளை அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்தல், அப்பரிந்துரையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளல் என்பது சில அடியார்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் உயர்ந்த கண்ணியமாகவும் அமைந்துள்ளது.

பரிந்துரை செய்தல் இரு நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. முதலாவது பரிந்துரைக்கு உட்படுபவர் இறைநிராகரிப்பில், அல்லது இணைவைத்தலில் ஈடுபட்டவராக மரணித்திருக்கக் கூடாது. அல்குர்ஆன் இதனைக் கீழ்வருமாறு கூறுகிறது : Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-10) இறுதிப் பகுதி

இறைநம்பிக்கைக் கொண்ட ஆணும், பெண்ணும்…..

ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும், இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ திண்ணமாக அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். (அல்குர்ஆன்: 33:35)

இறை நம்பிக்கை கொண்ட ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள்: தீமையிலிருந்து தடுக்கிறார்கள். மேலும் தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்: ஜகாத்தும் கொடுக்கிறார்கள். மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டிருக்கும். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 9:71)

அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான் : உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் – அவர் ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி – நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே. (அல்குர்ஆன்: 3:195)

தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி – இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் – அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும். (அல்குர்ஆன்: 40:40)

ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) தூய வாழ்வு வாழச் செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோர்க்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம். (அல்குர்ஆன்: 16:97)

Posted in இறுதி இறை வேதம் | Tagged , , , , , , , | 2 Comments

விவாக விலக்கு, கணவரை இழந்த பெண்களுக்கு அல்லாஹ்வின் அனுமதிகள்!

நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் (இத்தா) தவணை முடியும் தருவாயை அடைந்து விட்டால், நல்லமுறையில் அவர்களை உங்களுடன் வாழச்செய்யுங்கள் அல்லது நல்ல முறையில் அவர்களை அனுப்பி விடுங்கள். ஆனால் வரம்பு மீறும் எண்ணத்துடனும் தொல்லை கொடுக்கும் எண்ணத்துடனும் அவர்களை நீங்கள் தடுத்து நிறுத்தாதீர்கள். அப்படி எவரேனம் செய்தால், உண்மையில் அவர் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டவராவார். அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன்: 2:231)

உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு மரணமடைந்து விட்டால், அந்த அவருடைய மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும். தங்கள் தனிப்பட்ட விஷயத்தில் (தம் விருப்பத்துக்கொப்ப) ஒழுங்கான முறையில் செயல்பட அவர்களுக்கு உரிமையுண்டு. அதில் உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 2:234)

உங்களின் மனைவியரை விட்டு மரணமடைவோர், தம் மனைவியரின் நலன் கருதி, (வீட்டை விட்டு) அவர்கள் வெளியேற்றப்படாமல் ஓராண்டு வரை அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதி அளிக்கப்பட வேண்டுமென மரண சாஸனம் செய்ய வேண்டும். ஆனால் அவர்களாகவே வெளியேறிய பிறகு அவர்கள் தங்களின் தனிப்பட்ட விசயத்தில் ஒழுங்கான முறையில் செயல்பட்டால் உங்கள் மீது எந்தப் பொறுப்புமில்லை. மேலும் அல்லாஹ் யாவற்றின் மீதும் வல்லமை மிக்கோனும், பேரறிவாளனுமாயிருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:240)

Posted in இறுதி இறை வேதம் | Tagged , , , | Comments Off on விவாக விலக்கு, கணவரை இழந்த பெண்களுக்கு அல்லாஹ்வின் அனுமதிகள்!

நேர்வழி கெட்டு, சத்திய மார்க்கத்தை தவற விட்டோர் அல்லாஹ்வின் தூதரிடம் கேட்ட அத்தாட்சிகள்!

25:4. இன்னும் இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள் என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களுக்கு ஓர் அநியாயத்தையும் பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.

25:5. இன்னும் அவர்கள் கூறுகிறார்கள் இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் ஆகவே அவை அவருக்கு முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.

25:6. (நபியே!) வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான் என்று கூறுவீராக!

25:7. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?

25:8. அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்) அன்றியும், இந்த அநியாயக்காரர்கள் (முஃமின்களை நோக்கி) சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்றும் கூறுகிறார்கள்.

25:9. (நபியே!) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழிகெட்டுப் போய்விட்டார்கள் – ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நேர்வழி கெட்டு, சத்திய மார்க்கத்தை தவற விட்டோர் அல்லாஹ்வின் தூதரிடம் கேட்ட அத்தாட்சிகள்!

மறுமை நாள் (அத்தியாயம்-9)

விசாரணை

மஹ்ஷர் வெளியில் மிக முக்கிய அம்சம் அங்கு நடக்கும் விசாரணையாகும். மனிதர்கள் அனைவரும் தமது இறுதியான உலகுக்குப் போகும் முன்னால் அவர்கள் அங்கு செல்வதற்கான நியாயத்தை முன்வைப்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும்.

இந்த விசாரணை குறித்து அல்குர்ஆன் பல இடங்களில் மிகத் தெளிவாக விளக்குகிறது :

“நிச்சயமாக அவர்கள் எம்மிடமே மீண்டு வர வேண்டும். அத்தோடு அவர்களை விசாரணை செய்வதும் எமது பொறுப்பேயாகும்.
(ஸூரா வாகியா : 25, 26)

எனக் கூறும் அல்குர்ஆன் விசாரணைக்காக மனிதர்கள் இறைவன் முன்னால் கொண்டு வரப்படுவார்கள் எனவும் கூறுகிறது :

“உமது இரட்சகன் முன்னே அவர்கள் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்.” (ஸூரா கஹ்ப் : 48)

விசாரணைப் பற்றியும் அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது :

“உமது இரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது பற்றி அவர்கள் அனைவரிடமும் நாம் கேட்போம்.” (ஸூரா ஹிஜ்ர் : 92, 93)

தொடர்ந்து அல்லாஹ் அணுவளவும் பிசகாத வகையில் ஓர் அற்ப செயல் கூட தவறி விடாத வகையில் மிகுந்த நுணுக்கமாக அன்று நீதி வழங்கப்படும் எனக் கூறுகிறான் : Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-9)

எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?

36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான்.

36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ”எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?”” என்று.

36:79. ”முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

36:80. ”பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.

36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களை படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?

மறுமை நாள் (அத்தியாயம்-8)

மஹ்ஷர் வெளியும், அதன் நிகழ்வுகளும்

பிரபஞ்ச அழிவின் பிறகு மனிதன் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான். மனிதர்கள் அனைவரும் ஒரு வெட்டவெளியில் திரட்டப்பட்டு அந்த விசாரணை நடைபெறும். அவ்வாறு மனிதர்கள் ஒன்று திரட்டப்படும் வெட்டவெளியை ‘மஹ்ஷர்’ என அல்குர்ஆனும் சுன்னாவும் அழைக்கின்றன.

இவ்வாறு மனிதர்கள் மீண்டும் எழுப்பப்பட ஒரு ஸூர் ஊதப்படும் என அல்குர்ஆன் கூறுகிறது. உலக அழிவு அந்த ஸூர் ஊதப்படுதலோடு தான் ஆரம்பமாகும் எனவும் குர்ஆன் கூறுகிறது.

“ஸூரில் ஊதப்படும். அப்போது வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் மடிந்து வீழ்வார்கள். அல்லாஹ் நாடியோரைத் தவிர! பின்னர் இன்னொரு முறை ஸூரில் ஊதப்படும். அப்போது அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.”
(ஸூரா ஜுமர் : 69)

ஸூர் என்ற அரபு மொழிச் சொல்லுக்கு பெரும் ஊதுகுழல் என்பது பொருள். இஸ்ராபீல் (அலை) அவர்களே இவ்வாறு ஊதுவதற்குப் பொறுப்பான மலக்கு எனவும் ஹதீஸ்களிலிருந்து தெரிய வருகிறது. அந்த ஸூரின் அமைப்போ, அது ஊதப்படும் ஒழுங்கு குறித்தோ எமக்கு ஆராய முடியாது. அது மறை உலக விஷயங்களில் ஒன்று. உலக அழிவின் போதும், மீண்டும் மனிதர்கள் எழுப்பப்படும் போதும் ஸூர் ஊதப்படும் என்பது மட்டும் எமக்குத் தெளிவாகிறது.

இவ்வாறு எழுப்பப்படும் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவது குறித்தும் வெட்டவெளி குறித்தும், அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது. Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-8)