விவாக விலக்கு, கணவரை இழந்த பெண்களுக்கு அல்லாஹ்வின் அனுமதிகள்!

நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் (இத்தா) தவணை முடியும் தருவாயை அடைந்து விட்டால், நல்லமுறையில் அவர்களை உங்களுடன் வாழச்செய்யுங்கள் அல்லது நல்ல முறையில் அவர்களை அனுப்பி விடுங்கள். ஆனால் வரம்பு மீறும் எண்ணத்துடனும் தொல்லை கொடுக்கும் எண்ணத்துடனும் அவர்களை நீங்கள் தடுத்து நிறுத்தாதீர்கள். அப்படி எவரேனம் செய்தால், உண்மையில் அவர் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டவராவார். அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன்: 2:231)

உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு மரணமடைந்து விட்டால், அந்த அவருடைய மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும். தங்கள் தனிப்பட்ட விஷயத்தில் (தம் விருப்பத்துக்கொப்ப) ஒழுங்கான முறையில் செயல்பட அவர்களுக்கு உரிமையுண்டு. அதில் உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 2:234)

உங்களின் மனைவியரை விட்டு மரணமடைவோர், தம் மனைவியரின் நலன் கருதி, (வீட்டை விட்டு) அவர்கள் வெளியேற்றப்படாமல் ஓராண்டு வரை அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதி அளிக்கப்பட வேண்டுமென மரண சாஸனம் செய்ய வேண்டும். ஆனால் அவர்களாகவே வெளியேறிய பிறகு அவர்கள் தங்களின் தனிப்பட்ட விசயத்தில் ஒழுங்கான முறையில் செயல்பட்டால் உங்கள் மீது எந்தப் பொறுப்புமில்லை. மேலும் அல்லாஹ் யாவற்றின் மீதும் வல்லமை மிக்கோனும், பேரறிவாளனுமாயிருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:240)

This entry was posted in இறுதி இறை வேதம் and tagged , , , . Bookmark the permalink.