நம்பிக்கை கொண்டோருக்கு அது உறுதியான உண்மை – நிராகரிப்போருக்கு அது கைசேதமே!

ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.

நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.).

நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.

இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.

(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைத்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.

அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்படடதாகும்.

அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் –

அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-

பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.

அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.

ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.

ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.

மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.

ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.

அல்குர்ஆன்: அல்ஹாக்கா: 38 முதல் 52

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.