அல்லாஹ்வுக்கு இணை வைப்பதையும், இணை வைப்பவர்களையும் விட்டும் விலகி கொண்டால், அடியானுக்கு அல்லாஹ் வழங்கும் நன்கொடைகள்!

(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் – நபியாகவும் – இருந்தார். (19:41)

“என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்த தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும். (19:42)

“என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன். (19:43) Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Tagged , , , , , , , , , , , , , , , | Comments Off on அல்லாஹ்வுக்கு இணை வைப்பதையும், இணை வைப்பவர்களையும் விட்டும் விலகி கொண்டால், அடியானுக்கு அல்லாஹ் வழங்கும் நன்கொடைகள்!

[பாகம்-8] முஸ்லிமின் வழிமுறை.

நபி(ஸல்) அவர்களுடன் நடந்து கொள்ளும் முறை.

நபி (ஸல்)அவர்களுடன் ஒரு முழுமையான ஒழுங்குடன் நடந்து கொள்வது தன் கடமை என்பதை ஒரு முஸ்லிம் மனதார உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்குக் காரணம் இது தான்:

இவ்வொழுங்கை அல்லாஹ்தான் முஃமினான ஆண்,பெண் அனைவர் மீதும் கடமையாக்கி இருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களே! அல்லாஹ் மற்றும் அவன் தூதரின் முன்னிலையில் முந்தாதீர்கள்.(49:1)

“இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசிக்கொள்வதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். இதனால் நீங்கள் செய்த செயல்கள் வீணாகிவிடும்; நீங்கள் அதனை அறியாத நிலையில்! (49:2)

அவர்களுக்குக் கட்டுப்படுவதையும் அவர்களை நேசிப்பதையும் அல்லாஹ்வே முஃமின்களுக்கு கடமையாக்கியுள்ளான். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-8] முஸ்லிமின் வழிமுறை.

[பாகம்-7] முஸ்லிமின் வழிமுறை.

அல்லாஹ்வின் வார்த்தையுடன்…

அல்லாஹ்வின் வார்த்தையுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள்:

அல்லாஹ்வின் வார்த்தை பரிசுத்தமானது. மற்ற எல்லா வார்தைகளை விட மேலானதும் சிறப்பானதும் ஆகும். திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். திருக்குர்ஆனின் கூற்றை கூறியவர் உண்மையைக் கூறியவராவார். திருக்குர்ஆனின்படி தீர்ப்பு வழங்கியவர் நீதமாக நடந்து கொண்டவராவார். திருக்குர்ஆனை அறிந்திருப்பவர்கள் அல்லாஹ்வுக்குரியவர்கள்; அவனுக்கே உரித்தானவர்கள். அதைப் பற்றிப் பிடித்துக் கொள்பவர்கள்.  தப்பித்துக் கொள்வார்கள்; வெற்றி பெறுவார்கள். அதனைப் புறக்கணிப்பவர்கள் பேரிழப்புகளுக்கு  ஆளாவார்கள்; அழிந்து போவார்கள் என ஒரு முஃமின் நம்ப வேண்டும். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-7] முஸ்லிமின் வழிமுறை.

நீதியையும், நீதிமான்களையும் நேசிக்கும் அல்லாஹ்!

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:135) Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on நீதியையும், நீதிமான்களையும் நேசிக்கும் அல்லாஹ்!

அல்லாஹ் தன் அடியானை எச்சரிக்கும் பல வகையான மன இச்சைகள்!

2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும். அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.

3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும். அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அல்லாஹ் தன் அடியானை எச்சரிக்கும் பல வகையான மன இச்சைகள்!

[பாகம்-6] முஸ்லிமின் வழிமுறை.

அல்லாஹ்வுடன்…

அல்லாஹ்வுடன் நடந்து கொள்ளவேண்டிய ஒழுங்குகள்:

ஒரு முஸ்லிம் தன் தாயின் கருவறையில் இந்திரியத் துளியாக இருந்ததிலிருந்து அல்லாஹ் அவனுக்கு அருளிய அருட்கொடைகளை (இவ்வருட்கொடைகள் நாளை மறுமையில் அவன் இறைவனைச் சந்திக்கும்வரை அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்) எண்ணிப் பார்த்து அதற்காக வல்ல நாயனுக்கு, அவனை தனது நாவால் புகழ்ந்து, துதிபாடி, தன் அவயங்களை அவனுடைய வழிபாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் நன்றி செலுத்தவேண்டும்.

இதுதான் அல்லாஹ்வுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கமாகும். காரணம், அருட்கொடைளை அள்ளித் தந்தவனுடைய சிறப்பை மறுப்பதும் அவற்றுக்கு நன்றி கொல்வதும் ஒழுங்கல்லவே!

அல்லாஹ் கூறுகிறான்: உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். (16:52)

அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணி முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது. (16:18)

மேலும் கூறுகிறான்: என்னை நீங்கள் நினைவு கூருங்கள். நானும் உங்களை நினைவு கூறுகின்றேன். (2:152)

தன்னையும் தன்னுடைய எல்லா நிலைமைகளையும் அல்லாஹ் சூழ்ந்தறிபவனாய் இருக்கின்றான் என்பதை ஒரு முஸ்லிம் உணர வேண்டும். அப்போதுதான் அவனுடைய உள்ளத்தில் அல்லாஹ்வைப் பற்றிய பயம், மதிப்பு மற்றும் கண்ணியம் ஏற்படும். அதனால் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதற்கும் அவனுக்கு கட்டுப்படாமல் இருப்பதற்கும் அவன் வெட்கப்படுவான். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-6] முஸ்லிமின் வழிமுறை.

[பாகம்-5] முஸ்லிமின் வழிமுறை.

அதிகாரம் வகிப்பவர்கள்.

ஒரு முஸ்லிம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை கடமை என்று கருத வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்) (அல்குர்ஆன்: 4:56)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அதிகாரம் உடையவர்களுக்கு) நீங்கள் செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள். உலர்ந்த திராட்சையைப் போன்ற தலையுடைய ஒரு நீக்ரோ அடிமை உங்களுக்குத் தலைவரானாலும் சரியே. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி

ஆயினும் அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் அவர்களுக்குக் கட்டுப்படுதல் கூடாது. ஏனெனில் அவர்களுக்குக் கட்டுப்படுவதை விட அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். ‘படைத்தவனுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் எந்தப் படைப்பினங்களுக்கும் கட்டுப்படுதல் கூடாது’ என்பது நபிமொழி. (அஹ்மத்)

அவர்களுக்கு எதிராக செயல்படுவதும் பகிரங்கமாக அவர்களுக்கு மாறுசெய்வதும் ஹராம் என்று கருத வேண்டும். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-5] முஸ்லிமின் வழிமுறை.

நற்போதனையை புறக்கணித்து, நிராகரித்த மக்களுக்கு அல்லாஹ் அனுப்பிய வேதனை.

34:15. நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; ‘உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்’ (என்று அவர்களுக்கு கூறப்பட்டது).

34:16. ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிராவகத்தை அவர்கள் மீது அனுப்பினோம். இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளையும் கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களுடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.

34:17. அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரிதோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா?

34:18. இன்னும், அவர்களுக்கிடையிலும், நாம் பரக்கத்து (அவற்றில்) செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் (வழியில்) தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் போக்குவரத்து (ப் பாதைகளையு)ம் அமைத்தோம்; ‘அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்’ (என்று கூறினோம்).

34:19. ஆனால் அவர்கள் ‘எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!’ என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்; ஆகவே அவர்களை (பழங்) கதைகளாக ஆக்கி விட்டோம். இன்னும் அவர்களை(ப் பல இடங்களில்) சிதறிப் போகும் படியாய் சிதற வைத்தோம்; நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.

அல் குர்ஆன்: ஸூரா அஸ் ஸபா.
Posted in இறுதி இறை வேதம் | Tagged , , , , , , , , , , , , , , , | Comments Off on நற்போதனையை புறக்கணித்து, நிராகரித்த மக்களுக்கு அல்லாஹ் அனுப்பிய வேதனை.

[பாகம்-4] முஸ்லிமின் வழிமுறை.

காரிகள், ஃபிக்ஹ், ஹதீஸ் கலை வல்லுனர்கள்.

ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களுக்காக அருளை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் சிறப்பை ஒப்புக் கொள்ள வேண்டும்.

அவர்களைப் பற்றி நல்லதையே கூற வேண்டும். அவர்களைப் பற்றி குறை கூறவோ தப்பபிப்ராயம் கொள்ளவோ கூடாது. திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வுக்காகவே தூய உள்ளத்தோடு (குர்ஆன், ஹதீஸை) ஆய்வு செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்குப் பின் வந்தவர்களின் கருத்தை விடவும் அவர்களின் கருத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அல்லாஹ்வுடைய, அவன் தூதருடைய அல்லது நபித்தோழர்களுடைய கூற்றுக்காகவே அன்றி அவர்களுடைய கூற்றை விட்டு விடக்கூடாது.

இமாம் மாலிக் (ரஹ்), இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அஹ்மத் (ரஹ்), இமாம் அபூஹனீஃபா (ரஹ்) ஆகிய நான்கு இமாம்கள் தொகுத்த நூல்களும், அவர்கள் கூறிய மார்க்க சம்பந்தமான விஷயங்கள், ஃபிக்ஹ் மற்றும் ஷரீஅத் சட்டங்கள் அனைத்தும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியிலிருந்து பெறப்பட்டதே. இவ்விரு அடிப்படை ஆதாரங்களிலிருந்து அவர்கள் விளங்கியதைத் தவிர அல்லது இவ்விரண்டிலிருந்து அவர்கள் ஆய்வு செய்து பெற்றதைத் தவிர அல்லது இவ்விரண்டையும் ஒப்பு நோக்குவதன் (கியாஸ்) மூலம் பெறப்பட்டதைத் தவிர வேறெதுவும் அவர்களிடம் இல்லை.

அவர்கள் மனிதர்கள்தாம். அவர்கள் சரியாகச் சொல்லியிருக்கலாம். தவறாகவும் சொல்லியிருக்கலாம் என்று கருத வேண்டும். சிலவேளை அவர்கள் ஏதாவது ஒரு சட்டத்தில் உண்மைக்குப் புறம்பாக சொல்லியிருக்கலாம். இது வேண்டுமென்றே அல்ல. மாறாக மறதியாக அல்லது பாராமுகமாக அல்லது ஆழ்ந்த ஆய்வின்றி அவ்வாறு சொல்லியிருக்கலாம். இதனால்தான் ஒரு முஸ்லிம் அவர்களில் ஒருவருடைய கருத்தை விட்டுவிட்டு இன்னொருவரது கருத்தை மாத்திரம் பலமாகப் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. மாறாக அவர்களில் எவரது கருத்தையும் அவர் எடுத்துக் கொள்ளலாம்.

நூல்: முஸ்லிமின் வழிமுறை.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , | Comments Off on [பாகம்-4] முஸ்லிமின் வழிமுறை.

ஹுதமா, ஹாவியா, ஜக்கூம்?

கேள்வி எண்: 113. ஹுதமா, ஹாவியா, ஜக்கூம் என்று குர்ஆன் எவற்றைக் கூறுகிறது? Continue reading

Posted in கேள்வி பதில் | Tagged , , , , , , , , , , , , , | Comments Off on ஹுதமா, ஹாவியா, ஜக்கூம்?