[பாகம்-3] முஸ்லிமின் வழிமுறை.

நபித்தோழர்கள், நபியின் குடும்பத்தினர்.

ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வும் அவன் தூதரும் அவர்களை நேசிப்பதால்.

அவர்கள் ஏனைய முஃமின்கள், முஸ்லிம்களை விடச் சிறந்தவர்கள் என நம்ப வேண்டும்.

ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: “(இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்திக் கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தார்கள்.” (அல்குர்ஆன்: 9:100)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என்னுடைய தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் (உங்களில்) ஒருவர் உஹத் மலை அளவு தங்கத்தை (இறைவழியில்) செலவு செய்தாலும், அவர்களில் ஒருவர் செலவு செய்த ஒரு முத்து அல்லது அதில் பாதி அளவைக் கூட அவரால் அடைந்து விட முடியாது.’ அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

பொதுவாக ஸஹாபாக்களில் சிறந்தவர் அபூபக்கர் (ரலி) அடுத்தடுத்து உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) என்று கருத வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் உயிரோடி இருக்கும்போது (ஸஹாபாக்களில் சிறந்தவர்கள்) முதலில் அபூபக்கர் (ரலி), பிறகு உமர் (ரலி), பிறகு உஸ்மான் (ரலி) அதன் பிறகு அலீ (ரலி) என்று தான் நாங்கள் கூறி வந்தோம். இது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்ததும் அவர்கள் இதை மறுக்கவில்லை. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி.

அவர்களின் தவறுகளை எடுத்துச் சொல்வதும் அவர்களுக்கிடையே நடந்த கருத்து வேறுபாடுகளைக் கூறுவதும் கூடாது.

நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் கண்ணியத்தையும் நம்ப வேண்டும். அவர்கள் பரிசுத்தமானவர்கள்; (அவதூறுகளை விட்டும்) தூய்மைப்படுத்தப்பட்டவர்கள். மேலும் அவர்களில் சிறந்தவர் கதீஜா (ரலி), ஆயிஷா (ரலி) என்றும் கருத வேண்டும்.

நூல்: முஸ்லிமின் வழிமுறை

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-3] முஸ்லிமின் வழிமுறை.

குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது: இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டோ?

கேள்வி எண்: 112. குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது: இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டோ? என்று குர்ஆன் குறிப்பிடும் வசனம் எது? இந்த வசனத்தின் பொருள் என்ன? Continue reading

Posted in கேள்வி பதில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது: இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டோ?

[பாகம்-2] முஸ்லிமின் வழிமுறை.

நபித்தோழர்களை நேசிப்பது.

நபித்தோழர்களையும், நபியின் குடும்பத்தார்களையும் நேசிப்பது கடமை என்றும், அவர்கள் மற்ற முஃமின்கள், முஸ்லிம்களை விட சிறந்தவர்கள் என்றும் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். சிறப்பில் அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு உண்டு. இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்டதைப் பொருத்துத்தான் அவர்களுடைய உயர் அந்தஸ்து இருக்கும்.

அவர்களில் சிறந்தவர்கள் நேர்வழி பெற்ற கலீஃபாக்கள். அடுத்து சொர்க்கம் குறித்து நற்செய்தி கூறப்பட்ட பத்து பேர்கள். அவர்கள் நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்கள், தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), ஸுபைர் பின் அவாம் (ரலி), ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி), ஸயீத் பின் ஸைத் (ரலி), அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோர். அதற்கடுத்து பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள். அதற்கடுத்து மேற்கூறப்பட்ட பத்து பேர்கள் அல்லாமல் சொர்க்கம் குறித்து நற்செய்தி கூறப்பட்ட இன்னும் சிலர். உதாரணம்: பாத்திமா (ரலி), அவர்களின் மக்களான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி), மேலும் ஸாபித் பின் கைஸ் (ரலி), பிலால் பின் ரிபாஹ் (ரலி) மற்றும் சிலர்.

இவ்வாறே இஸ்லாத்திற்காகப் பாடுபட்ட இமாம்களைக் கண்ணியப்படுத்துவதும், மதிப்பதும் கடமை என்றும் நம்ப வேண்டும்.

அவர்கள் யாரெனில், ஸஹாபாக்களை அடுத்தடுத்த காலங்களில் வாழ்ந்த, திருக்குர்ஆனை நன்கு அறிந்த, அதை மனனம் செய்து அதை அழகிய முறையில் ஓதக்கூடிய காரிகள், ஃபிக்ஹ் மற்றும் ஹதீஸ் கலை வல்லுநர்கள், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் போன்றவர்கள்.

நூல்: முஸ்லிமின் வழிமுறை

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , | Comments Off on [பாகம்-2] முஸ்லிமின் வழிமுறை.

தன் அடியார்களிடம் அன்பான அல்லாஹ்!

1:2. (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

2:128. “எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும், யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள், யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம். இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.

2:163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

2:182. ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை)சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும்; நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.

2:207. இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.

15:49. (நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக “நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்.”

16:7. மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன – நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.

22:65. (நபியே) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான், தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

24:20. இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்.

24:22. இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.

32:6. அவனே மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன்; (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன்; அன்புடையோன்.

Posted in இறுதி இறை வேதம் | Tagged , , , , , | Comments Off on தன் அடியார்களிடம் அன்பான அல்லாஹ்!

இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.

இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது (விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம்) (அல்குர்ஆன்:2:183)

இனி முஸ்லிம்கள் நோற்கும் நோன்பு சம்பந்தமான தெளிவை இதன் மூலம் அறிந்து கொள்ள முயற்சிப்போம்.

குறிப்பாக மேலே குறிப்பிட்டுள்ள அல்குர்ஆன் வசனம் முஸ்லிம்களுக்கு நோன்பு ஏதும் புதிய கடமையல்ல என்பதனையும், கடந்த காலங்களில் இறைவனால் அறிமுகப்படுத்தப்பட்ட இறை சட்டங்களைப் பின்பற்றிய சமூகத்தவர்களுக்குக் கூட கடமையாக்கப்பட்டிருந்தது என்ற உண்மையை அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்திற்கும் இன்னொரு மார்க்கத்திற்கும் வேற்றுமை இருந்து வந்திருக்கின்றது. இன்றும்கூட பெரும்பாலான மார்க்கங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தைக் கெடுத்து இருந்தாலும் சரி! மேலும் இவ்வாறு விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் மனித உள்ளங்கள் ஓய்வு பெறுவதுடன், அதனை ஏற்றுக் கொண்டு அதற்குக் கட்டுப்படுவதும் இலேசாக இருக்கும். மேலும் ஏனையவர்களுக்கும் நோன்பு அனுஷ்டிப்பது கடமையாக்கப்பட்டிருந்தது என்ற மனத் திருப்தியினால் கஷ்டமானதாகத் தோன்றவும் மாட்டாது.

ஒரு முஸ்லிம் நோன்பு நோற்பதன் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு அதனை கடமையாக்கிய இறைவனே தெளிவான பதில் அளிக்கின்றான். அதாவது (நீங்கள் இறைபக்தி உள்ளவர்களாக ஆவதற்கே) என்பதுவே அதுவாகும். எனவே ஒரு முஸ்லிம் நோன்பு நோற்பதன் மூலம் இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதையே கருத்திற் கொண்டிருப்பான்.

வெறுக்கப்பட்ட, இழிவான பண்புகளுக்கிடையில் நோன்பு பாதுகாவலாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் வழங்கப்படும் பாதுகாவலாகும். மேலும் இதனால் சமூகத்தில் சிறந்த பண்புகளுடன் கூடிய மனிதர்கள் உருவாகவும் வாய்ப்பேற்படுகின்றது. இதுபற்றி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது (நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் யாராவது நோன்பு நோற்றிருக்கும் நிலையில் தீய வார்த்தைகள் பேசவோ, உடலுறவில் ஈடுபடவோ, தீய செயல்களில் ஈடுபடவோ வேண்டாம். யாராவது உன்னுடன் சண்டையிட்டால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி, நான் நோன்பாளி எனக் கூறுவீராக!) என்றார்கள். மேலும் நோன்பு ஒரு கேடயமாகும். அதாவது பாதுகாப்பாகும். அதன் பொருளாவது நோன்பாளி நான் நோன்பு நோற்பது தனது மிருகத்தனமான தீங்குகளை விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே என நம்புவதாகும். தான் நோன்பாளி எனக் கூறுவதன் மூலம் தான் மானிடப் பண்புகளுடன் இருப்பதையும், மிருகத்தனமான பண்புகளில் இல்லை என்பதையும் ஞாபகப்படுத்துகின்றான். தன்னை தன் உள்ளத்தின் தீங்குகளை விட்டும் பாதுகாத்து, தனது தீங்குகளை விட்டும் தனது சமூகத்தைப் பாதுகாக்கும் போது இறைவனின் திருப்தியைப் பெற்றுக் கொண்டு இறை பக்தியாளர்களில் நின்றும் ஆகிவிடுவார். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.

அல்லாஹ்வால் இணைத்தே சொல்லப்பட்டிருக்கும் இரு அழகிய அமல்கள்!

இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது, (உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன்: 2:83)

“உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக, “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது. நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.” (அல்குர்ஆன்: 4:77)

எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள். இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் – அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். (அல்குர்ஆன்: 4:162)

நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்;. மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்; “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்;. எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்.” (அல்குர்ஆன்: 5:12)

அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் – இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர்வழி பெற்றவர்களில் ஆவார்கள். (அல்குர்ஆன்: 9:18)

Posted in இறுதி இறை வேதம் | Tagged , , , , , , , , , , , , , , | Comments Off on அல்லாஹ்வால் இணைத்தே சொல்லப்பட்டிருக்கும் இரு அழகிய அமல்கள்!

மனிதன் நஷ்டத்திற்குள்ளாக்கும் அல்லாஹ்வின் இரு அருட்கொடைகள் எவை?

கேள்வி எண்: 111. இறைவனின் எந்த இரு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on மனிதன் நஷ்டத்திற்குள்ளாக்கும் அல்லாஹ்வின் இரு அருட்கொடைகள் எவை?

[பாகம்-1] முஸ்லிமின் வழிமுறை.

அல்லாஹ்வை நம்புவது.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமெனில், இறைவன் ஒருவன் இருக்கின்றான்,அவன் தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன்! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். அனைத்துக்கும் இரட்சகனும், எஜமானனும் அவனே! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் பரிபூரணமானவன்! என்று நம்ப வேண்டும். இதற்கு அறிவு பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் சான்றுகள் உள்ளன. அவற்றுள் சில:

அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்; அவனே சகல படைப்பினங்களையும் படைத்து பரிபாலிப்பவன்; அவனுக்கு அழகிய திருநாமங்கள், பண்புகள் இருக்கின்றன் என்பது பற்றி அல்லாஹ்வாகிய அவனே கூறுவது.

நிச்சயமாக அல்லாஹ்தான் உங்களுடைய இறைவன். அவன் எத்தகையவன் எனில் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷில் அமைந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். இரவுக்குப் பின்னால் பகல் விரைந்து வருகின்றது. அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் படைத்தவன். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. அறிந்து கொள்ளுங்கள்: படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே. அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவனாவான்! (அல்குர்ஆன்: 7:54)

மூஸாவே! நான் தான் அல்லாஹ்! அகிலத்தாரின் அதிபதி!
(அல்குர்ஆன்: 28:30)

நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை! எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைவு கூறுவதற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவீராக! (அல்குர்ஆன்: 20:14)

இதுபோல மாறுபட்ட இவ்வுலகங்களும் வேறுபட்ட படைப்பினங்களும் அவற்றைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான்; அவனே அல்லாஹ்! என்பதற்குச் சான்று பகர்வது.

ஏனெனில் இவ்வுலகங்களைப் படைத்தவன், அவற்றை உருவாக்கியவன் நான்தான் என்று வாதிடக்கூடியவன் இவ்வுலகில் (அல்லாஹ்வைத் தவிர) வேறு யாரும் இல்லை. உருவாக்குபவன் இல்லாமல் எதுவும் தானாகவே உருவாகுவது சாத்தியமில்லை என்று தானே மனித அறிவும் கூறுகிறது. எனவே இதுபோன்ற அறிவுப்பூர்வமான, ஆதாரப்பூர்வமான மற்றும் வேறு பல சான்றுகளின் அடிப்படையில்தான் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வையும் அவன் தான் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன்; முன்னோர் பின்னோர் அனைவருக்கும் இறைவன் என்பதையும் நம்புகிறான். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-1] முஸ்லிமின் வழிமுறை.

எங்கள் இறைவனே! எங்களை இந்த அக்கிரமக்காரர்களுடன் ஆக்கி விடாதே.

சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, “எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்றுக் கொண்டோம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” என்று அறிவிப்பார். (7:44)

(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்)வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் மறுமையையும் (நம்பாது) மறுத்தனர். (7:45)

(நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை – அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள். (7:46)

அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே” என்று கூறுவார்கள். (7:47)

சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை – அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு – அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்; “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!” (7:48)

“அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள். (7:49)

நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்; “நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று கூறுவார்கள். (7:50)

(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது. எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம். (7:51)

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது. (7:52)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on எங்கள் இறைவனே! எங்களை இந்த அக்கிரமக்காரர்களுடன் ஆக்கி விடாதே.

உறுதியான வீரமுள்ள செயல் எது?

கேள்வி எண்: 110. உறுதியான (வீரமுள்ள) செயல் என்று குர்ஆன் எதைக் கூறுகிறது? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on உறுதியான வீரமுள்ள செயல் எது?