அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உதவி தேடினார்களா?

அறிஞர் தபரானி தமது ‘முஃஜமுல் கபீர்’ என்ற நூலில் ‘ஒரு நயவஞ்சகன் மூமின்களுக்கு கெடுதிகள் செய்து கொண்டிருந்தான். இதைக் கண்ட அபூபக்கர் ஸித்தீக் (ரலி) மூமின்களை நோக்கி, வாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் செல்வோம். இந்த நயவஞ்சகனின் தொல்லையிலிருந்து தப்பிக்க நபிகளைக் கொண்டு உதவித் தேடுவோம்’ என்றார்களாம். இதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னைக் கொண்டு எப்படி உதவித் தேட முடியும். அல்லாஹ்வைக் கொண்டுதான் உதவி தேடப்பட வேண்டும்’ என்று அபூபக்கர் (ரலி) அவர்களுக்குக் கூறியதாக குறிப்பிடுகிறார்கள். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , | Comments Off on அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உதவி தேடினார்களா?

நேர்வழியைப் புறக்கணித்தவனை அழைக்கும் நரகம்

70:1. (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப்போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.

70:2. காஃபிர்களுக்கு (நிராகரிப்பவர்களுக்கு அது ஏற்படும் போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.

70:3. (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).

70:4. ஒருநாள் மலக்குகளும் (ஜிப்ரயீலாகிய – வான தூதர்) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

70:5. எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.

70:6. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.

70:7. ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கின்றோம்.

70:8. வானம் – உருக்கப் பட்ட செம்பைப் போல் ஆகி விடும் நாளில் –

70:9. இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்) –

70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்க மாட்டான்.

70:11. அவர்கள் நேர்க்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்(தீர்ப்பு) நாளில் வேதனைக்கு ஈடாக குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-

70:12. தன் மனைவியையும், தன் சகோதரனையும்-

70:13. அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-

70:14. இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் (பிரியப்படுவான்).

70:15. அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமான)து கொழுந்து விட்டு எரியும் நெருப்பாகும்.

70:16. அது (சிரசுத்) தோல்களைக் (எரித்து) கழற்றி விடும்.

70:17. (நேர்வழியை) புறக்கனித்துப் புறங்காட்டி சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.

70:18. அன்றியும் பொருளைச் சேகரித்து பிறகு (அதைத் தக்கப்படி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே )அவனையும் அது அழைக்கும்.

70:19. நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.

70:20. அவனை ஒரு கெடுதி தொட்டு விட்டால் பதறுகிறான்;

70:21. ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக் கொள்கிறான்.

அல் குர்ஆன்: அல் மஆரிஜ் (உயர் வழிகள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நேர்வழியைப் புறக்கணித்தவனை அழைக்கும் நரகம்

கப்றும் வைபவங்களும்

நபி (ஸல்) அவர்கள் தம் கப்றை பள்ளியாகத் திருப்பி விடாமலிருக்க (அதில் வைபவங்கள், கூடு, கொடிகள் எடுக்காமலிருக்கச் சொல்லியிருப்பதுடன்) தம் மரணத் தருவாயில் ‘யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ஏனெனில் அவர்கள் தம் நபிமார்களின் கப்றுகளை பள்ளிவாசல்களாக ஆக்கி விட்டார்கள்’ என்று கூறியதாக ராவி குறிப்பிடுகிறார். இவர்கள் செய்கின்ற இந்தச் செய்கையைப் பற்றி நபியவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். (புகாரி, முஸ்லிம்) Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on கப்றும் வைபவங்களும்

அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக!

33:1. நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! காஃபிர்களுக்கும், (நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும்) முனாஃபிக்களுக்கும் (நயவஞ்சகர்களுக்கும்) கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.

33:2. இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

33:3. (நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.

33:4. எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை – உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் ளிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவிகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.

33:5. (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் – அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.

33:6. இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய(பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இதுதான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.

33:7. (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹூ, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.

33:8. எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையைப் பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.

அல் குர்ஆன்: அல் அஹ்ஜாப் (சதிகார அணியினர்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக!

இது விஷயத்தில் அப்துல் மலிக் பின் ஹாரூன் ரிவாயத்

ஆனால் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் இப்னு அப்பாஸைப் பற்றி ஒரு ஹதீஸை ரிவாயத் செய்கிறார்.

அதில் இப்னு அப்பாஸ் ‘கைபரில் உள்ள யூதர்கள் கத்பான் கோத்திரத்தாருடன் போராடி யுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் இந்த யூதர்கள் கத்பான்களுடன் மோதும் போதெல்லாம் தோல்வி அடைந்து விடுவது வழக்கம். எனவே கீழ்வரும் துஆவைக் கொண்டு யூதர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்களாம். ‘இறைவா! எழுதப்படிக்கத் தெரியாத நபியான முஹம்மத் (ஸல்) அவர்களின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறோம். இந்த நபியைக் கடைசி காலத்தில் அனுப்புவதாக நீ எங்களுக்கு வாக்களிதுள்ளாய். எனவே அந்நபியின் பொருட்டால் எங்களுக்குச் சாதகமாக நீ உதவி செய்தருள்’ என்று கூறி அவர்கள் பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் கத்பான் கோத்திரத்தாரை முறியடித்து விடுவார்கள். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on இது விஷயத்தில் அப்துல் மலிக் பின் ஹாரூன் ரிவாயத்

மறுமை நாளையின் பரிந்துரைகள் (ஷபாஅத்துகள்)

இறுதி நாளில் பரிந்துரை செய்வது பற்றி ஸஹீஹான சில ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அன்று மக்கள் அனைவரும் ஆதம் நபி அவர்களிடமும், (உலுல் அஸ்ம்) திடகாத்திர, உறுதிபாடுள்ள நபிமார்களான நூஹ், இப்றாஹீம், மூஸா, ஈஸா (அலை) ஆகியோரிடமும் வந்து தமக்காக ஷபாஅத் செய்ய வேண்டுமென்று கெஞ்சுவார்கள். அந்த நபிமார்களில் ஒவ்வொருவரும் மற்றவரிடம் மக்களைத் திருப்பி அனுப்பி வைப்பார்கள். இறுதியில் நபி ஈஸா (அலை) அவர்களிடம் மக்கள் திரண்டெழுவார்கள். அப்போது ஈஸா (அலை) அவர்கள் ‘நபி முஹம்மதை நோக்கிச் செல்லுங்கள். அவர்கள் முன்பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவர்கள்’ என்று கூறுவார்கள். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on மறுமை நாளையின் பரிந்துரைகள் (ஷபாஅத்துகள்)

மேன்மைக்குரிய சிருஷ்டிகள் அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.

மேன்மைக்குரிய மாபெரும் சிருஷ்டிகளில் நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு மட்டும் சத்தியம் செய்யலாம் என்றும், பிரார்த்திக்கலாம் என்றும் அனுமதிக்கின்றோமே தவிர எல்லா மக்களையும், அல்லது எல்லா படைப்புகளையும் கொண்டு அவர்களின் பொருட்டால் பிரார்த்திப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லையே – இது சிருஷ்டிகளில் ஸாலிஹீன்களையும், நபிமார்களையும் கொண்டு பிரார்த்திப்பதை அனுமதித்தவர்களின் வாதமாகும். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on மேன்மைக்குரிய சிருஷ்டிகள் அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.

வஸீலாவின் மூன்றாவது வகை*

வஸீலாவின் மூன்றாவது வகை அனுமதிக்கப்படாத வஸீலாவாகும். அதுவே நபிமார்கள், ஸாலிஹீன்கள் இவர்களைப் பொருட்டாக வைத்தும், மேலும் இவர்களைக் காரணம் காட்டியும், இவர்களை கொண்டு ஆணையிட்டும் அல்லாஹ்விடம் வஸீலா தேடுதல். இத்தகைய வஸீலா முழுக்க முழுக்க விலக்கப்பட்டிருக்கிறது. இந்த வஸீலாவிற்கு திருமறையும், ஸஹீஹான ஹதீஸும் ஸஹாபாக்களின் தீர்ப்புகளும் இமாம்களின் கொள்கைகளும் எதுவுமே சான்றாகாது. இதை அனுமதித்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில உலமாக்கள் மட்டுமே. பெரும்பாலான அறிஞர்கள் சிருஷ்டிகளைக் கொண்டு பிரமாணம் செய்து, ஆணையிட்டுப் பிரார்த்தித்தலை அனுமதிக்கவில்லை. Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on வஸீலாவின் மூன்றாவது வகை*

ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.

ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது. Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.

அல்லாஹ்வின் நடைமுறை

7:94. நாம் நபிமார்களை (தூதர்களை) அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம்மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.

7:95. பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலைக்கு மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன” என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் – ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.

7:96. நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரகத்துகளை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.

7:97. அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?

7:98. அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?

7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களைத் தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.

7:100. பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.

7:101. (நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை – இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் (நம்பிக்கை கொள்ளாதவர்களின்) இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.

7:102. அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை – அன்றியும் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.

அல் குர்ஆன்: அல் அஃராஃப் (சிகரங்கள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வின் நடைமுறை