இஸ்லாத்திற்கு முந்தைய கெட்ட செயல்கள்

இஸ்லாம் முந்தைய கெட்ட செயல்களை அழித்து விடுகிறது என்பது பற்றி…..

76- இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர். விபச்சாரம் அதிகமாகச் செய்திருந்தனர்.(ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகின்ற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்பு விடுகின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்டப்பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே) என்று கூறினர். அப்போது (ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும் (கொலை செய்யக் கூடாது) என்று அல்லாஹ் தடைசெய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லை. மேலும் விபச்சாரம் செய்வதில்லை எனும் (25:68 ஆவது) வசனம் அருளப்பெற்றது. மேலும் (நபியே!) கூறுங்கள்: வரம்பு மீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவ நம்பிக்கைக் கொண்டு விடாதீர்கள்… எனும்( 39:53 ஆவது) வசனமும் அருளப்பெற்றது.
புகாரி-4810: இப்னு அப்பாஸ் (ரலி)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இஸ்லாத்திற்கு முந்தைய கெட்ட செயல்கள்

இஸ்லாத்திற்கு முந்தைய கெட்ட செயல்கள்

இஸ்லாம் முந்தைய கெட்ட செயல்களை அழித்து விடுகிறது என்பது பற்றி…..

76- இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர். விபச்சாரம் அதிகமாகச் செய்திருந்தனர்.(ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகின்ற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்பு விடுகின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்டப்பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே) என்று கூறினர். அப்போது (ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும் (கொலை செய்யக் கூடாது) என்று அல்லாஹ் தடைசெய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லை. மேலும் விபச்சாரம் செய்வதில்லை எனும் (25:68 ஆவது) வசனம் அருளப்பெற்றது. மேலும் (நபியே!) கூறுங்கள்: வரம்பு மீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவ நம்பிக்கைக் கொண்டு விடாதீர்கள்… எனும்( 39:53 ஆவது) வசனமும் அருளப்பெற்றது.
புகாரி-4810: இப்னு அப்பாஸ் (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இஸ்லாத்திற்கு முந்தைய கெட்ட செயல்கள்

பயந்து கொள்ளுங்கள்

நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை – நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 8:25)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on பயந்து கொள்ளுங்கள்

அனைத்தின் மீதும் ஆற்றலுடையோன்!

(நபியே!) நீர் கூறும்: ”உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்) வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (அல் குர்ஆன் 6:65)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அனைத்தின் மீதும் ஆற்றலுடையோன்!

வெட்கத்தலத்தை பேணுவது பரிசுத்தமாகும்

24-30 (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

24-31 இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

23-5 மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

17-32 நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.

அல்குர்ஆன்
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on வெட்கத்தலத்தை பேணுவது பரிசுத்தமாகும்

போர் வெற்றிப் பொருட்களைத் திருடுபவர் நரகில்.. .

74- நாங்கள் கைபரை வெற்றி கொண்டோம். அப்போது நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. மாடு, ஒட்டகம் (வீட்டுப்) பொருட்கள்,தோட்டங்கள் ஆகியவற்றையே போர்ச்செல்வமாக பெற்றோம். பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களுடன் (மதீனாவிற்கு அருகிலுள்ள) வாதில் குரா என்னுமிடத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். நபியவர்களுடன் மித்அம் எனப்படும் ஓர் அடிமையும் இருந்தார். அவரை பனூளிபாப் குலத்தாரில் (ரிஃபாஅ பின் ஸைத் என்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களின் சிவிகையை அந்த அடிமை இறக்கிக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு அவர் மீது பாய்ந்தது. அவருக்கு இறைவழியில் உயிர் தியாகம் செய்யும் பேறு கிடைத்து விட்டது. வாழ்த்துகள்! என்று மக்கள் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் இல்லை எனது உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவர் எடுத்துக் கொண்ட போர்வையை அவருக்கு நரக நெருப்பாகி எரிந்து கொண்டிருக்கிறது,என்று கூறினார்கள். நபி(ஸல்)அவர்களிடமிருந்து இதைக் கேட்டபோது ஒரு மனிதர் ,ஒரு செருப்பு வாரை……. அல்லது இரண்டு செருப்பு வார்களைக்…… கொண்டு வந்து இது (போர்ச் செல்வம் பங்கிடப்படும் முன்) நான் எடுத்துக் கொண்ட பொருள் என்று கூறினார். அப்போது (இது சாதாரண செருப்பு வார் அல்ல. இதனைத் திருப்பித்தராமல் இருந்தால் இதுவே )நரகத்தின் செருப்பு வார்….அல்லது இரு வார்கள்….ஆகும் என்று கூறினார்கள்.

புகாரி-4234: அபூஹூரைரா(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on போர் வெற்றிப் பொருட்களைத் திருடுபவர் நரகில்.. .

நேர்வழி Vs வழிகேடு

நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது); எவர் வழிதவறி கெடுகிறாரோ, அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (அல் குர்ஆன்: 39:41)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நேர்வழி Vs வழிகேடு

பரிந்துரைக்காக அன்பளிப்புப் பெறுதல்

மக்களிடையே பெரும் செல்வாக்கும் அந்தஸ்தும் ஒரு மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாக எப்பொழுது ஆகுமெனில் அதற்காக அவன் நன்றி செலுத்தும் போதுதான். முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக இந்த செல்வாக்கைப் பயன்படுத்துவது இவ்வருட்கொடைக்கு நன்றி செலுத்துவதாக அமையும். ஏனெனில் ‘உங்களில் யாரேனும் தன் சகோதரனுக்கு நன்மை செய்ய முடிந்தால் செய்யட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் பொதுவாகக் கூறியிருப்பதில் இது அடங்குகிறது. இந்த நபிமொழி ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்க முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடன் தன் சகோதர முஸ்லிமுக்கு ஒரு நன்மை செய்தால் அல்லது ஒரு அநீதியைத் தடுத்தால் – அதே நேரத்தில் விலக்கப்பட்ட எதையும் செய்யாமல் அல்லது யாருடைய உரிமையிலும் கை வைக்காமல் இருந்தால் அத்துடன் அவனுடைய எண்ணம் தூய்மையானதாக இருந்தால் அவன் அல்லாஹ்விடத்தில் நற்கூலியைப் பெறுவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பரிந்துரை செய்யுங்கள். நற்கூலி வழங்கப்படுவீர்கள்’ அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: முஸ்லிம். ஆனால் பரிந்துரை செய்ததற்காக கூலியோ பிரதி உபகாரமோ பெற்றுக் கொள்ளக் கூடாது. ஆதாரம்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘ஒருவர் இன்னொருவருக்குப் பரிந்துரை செய்து, அதற்காக அவருக்கு வழங்கப்படுகின்ற அன்பளிப்பை பெற்றுக் கொண்டால் அவர் வட்டியின் பல வாசல்களில் மிகப் பெரிய வாசலில் நுழைந்தவராவார்’ அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), நூல்: அஹ்மத்.

மக்களில் சிலர் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி அல்லது பரிந்துரை செய்து ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதற்கு அல்லது இடமாற்றம் வாங்கித் தருவதற்கு அல்லது ஒரு நோயாளிக்கு மருத்துவம் செய்து கொடுக்க இன்னும் இதுபோன்ற உதவிகளைச் செய்து கொடுப்பதற்காக ஒரு தொகையை கேட்கின்றனர். அறிஞர்களின் சரியான கூற்றின் பிரகாரம் இது ஹராமாகும். முன்னர் கூறப்பட்ட அபூஉமாமா (ரலி) அறிவிக்கும் நபிமொழியே இதர்கு ஆதாரமாகும். மட்டுமின்றி ஹதீஸின் வெளிப்படையான அர்த்தத்தைப் பார்க்கும்போது கேட்காமல் கொடுக்கப்படும் பொருள்களைப் பெறுவதும் ஹராம் தான். நன்மையைச் செய்யக்கூடியவனுக்கு மறுமையில் அல்லாஹ்விடம் கிடைக்கும் கூலி மட்டுமே போதுமானதாகும்.

ஒரு காரியத்தில் பரிந்துரை செய்யக் கோரி ஹஸன் பின் ஸஹ்ல் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்தார். அதை அவர் நிறைவேற்றிக் கொடுத்தார். அதற்காக அம்மனிதர் அவர்களுக்கு நன்றி செலுத்த வந்தார். அப்போது அந்த மனிதரிடம் ஹஸன் பின் ஸஹ்ல் (ரஹ்) அவர்கள் எதற்காக எங்களுக்கு நன்றி செலுத்துகிறீர், பொருளுக்கு ஜகாத் இருப்பது போலவே பதவியின் பேரில் ஜகாத் கொடுக்க வேண்டியுள்ளது என்றே நாங்கள் கருகிதுகிறோம் எனக் கூறினார்கள். (அல் – ஆதாப் அஷ்ஷரஇய்யா)

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும். அதாவது ஒருவர் தன்னுடைய வேலையை முடித்துத் தருவதற்காக சம்பளத்திற்கு ஒருவரை நியமிப்பதற்கும் ஒருவர் தன்னுடைய பதவியை, செல்வாக்கைப் பயன்படுத்தி பரிந்துரை செய்து கூலி பெறுவதற்கும் இடையில் பெருத்த வித்தியாசம் உள்ளது. முந்தியது மார்க்கத்தின் நிபந்தனைகளுடன் கூலி பெறுதல் எனும் அடிப்படையில் ஆகுமானதாகும். பிந்தியது ஹராமானதாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on பரிந்துரைக்காக அன்பளிப்புப் பெறுதல்

சொர்க்கத்திற்குத் தகுதியான முஸ்லிமான ஆன்மா!

71- அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், இவர் நரகவாசிகளில் ஒருவர், என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்த போது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து, இவர் நரகவாசிகளில் ஒருவர், என்று குறிப்பிட்டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்து விட்டார் என்று கூறப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர் நரகத்திற்கே செல்வார் என்று (மீண்டும்) கூறினார்கள். மக்களில் சிலர் (நபி(ஸல்) அவர்களின் இந்தச் சொல்லை) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது, அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை.ஆயினும்,அவர் கடும் காயத்திற்கு ஆளானார். இரவு வந்த போது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கபட்டது. அப்போது அவர்கள்,அல்லாஹ் மிகப்பெரியவன் . நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறுகிறேன், என்று கூறினார்கள். பிறகு பிலால்(ரலி) அவர்களுக்கு கட்டளையிட,அவர்கள் மக்களிடையே,முஸ்லிமான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும் அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகின்றான். என்று பொது அறிவிப்புச் செய்தார்கள்.

புகாரி-3062: அபூஹூரைரா(ரலி)

72- நபி(ஸல்) அவர்களும் இணைவைப்போரும் (கைபர் போர்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்று விட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்)போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர்,படையிலிருந்து விலகிப்போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர்,பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித்தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார்.(அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித்தோழர்கள்,இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தீரப் போரிடவில்லை என்று (வியந்து )கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அவரோ நரகவாசியாவார் என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் நான் அவருடன் இருக்கிறேன். (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு) என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்றபோதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார்.(ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி,அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன். என்று சொன்னார். நபி(ஸல்)அவர்கள், என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அவர் சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி, அவர் நரகவாசி என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்) உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்துவர) நான் அவருடன் போய் வருகிறேன் என்று கூறிவிட்டு,அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்
பி வாளின் பிடிமுனையைத் தன் இரு மார்ப்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார், என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால்,அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார்.மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருமனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்)அவர் சொர்க்கவாசியாக இருப்பார் என்று சொன்னர்கள்.

புகாரி-2898: சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ(ரலி)

73- ஜூன்தப்(ரலி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை)அவர் காயமடைந்தார். அவரால் வலி பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ் என் அடியான் தன் விஷயத்தில் (அவசரப்பட்டு) என்னை முந்திக் கொண்டான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி (அதை அவன் நுழையத் தடை செய்யப்பட்ட இடமாக ஆக்கி) விட்டேன் என்று கூறினான்.

புகாரி-3463: ஜூன்துப் பின் அப்துல்லாஹ்(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on சொர்க்கத்திற்குத் தகுதியான முஸ்லிமான ஆன்மா!

அல்குர்ஆனின் பிரதானமானச் செய்தி பற்றி..

இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக் கின்றோம். (அல் குர்ஆன்: 24;34)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்குர்ஆனின் பிரதானமானச் செய்தி பற்றி..