வேலைக்காரனுக்கு கூலி கொடுக்காதிருத்தல்

வேலைக்காரனுக்கு அவனுடைய உரிமையை (கூலியை) விரைவாக வழங்கிட நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். ‘வேலைக்காரனுக்கு அவனுடைய வேர்வை உலர்வதற்குள் கூலியை கொடுத்து விடுங்கள்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம்.

முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் பல்வேறு அநியாயங்களில் தொழிலாளர்கள், பணியாளர்கள், வேலைக்காரர்கள் ஆகியோருக்கு அவர்களின் உரிமைகளை வழங்காதிருப்பது ஒன்றாகும். இதற்குப் பல்வேறு வடிவங்கள் உள்ளன. அவற்றுள் சில வருமாறு:

வேலைக்காரனுடைய உரிமையை முழுவதும் கொடுக்க மறுப்பது, அவனிடம் அதற்கான ஆதாரம் இல்லாமல் செய்து விடுவது, இத்தகையவனுடைய உரிமை இவ்வுலகில் பறிபோனாலும் மறுமையில் அல்லாஹ்விடத்தில் வீணாகிவிடாது. அப்போது அநீதியிழைத்தவன் அநீதி இழைக்கப்பட்டவனுடைய பொருளை உண்ட நிலையில் வருவான். அவனுடைய நன்மைகளை எடுத்து அவனால் பாதிக்கப்பட்டவனுக்குக் கொடுக்கப்படும். அவனுடைய நன்மைகள் தீர்ந்து விட்டால் பாதிக்கப்பட்டவனுடைய தீமைகளை எடுத்து அவன் தலையில் போட்டு அவனை நரகில் தள்ளப்படும்.

கூலியை குறைத்துக் கொடுப்பது: அதாவது வேலைக்காரனுக்கு அவனுடைய கூலியை முழுமையாக வழங்காமல் அநியாயமாகக் குறைத்து விடுவது.

அல்லாஹ் கூறியுள்ளான்: “அளவில் மோசடி செய்வோருக்குக் கேடுதான்” (83:1). சில முதலாளிகள் செய்வது இதற்கு உதாரணமாகும். அதாவது தொழிலாளர்களை அவர்களுடைய நாடுகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்து அழைத்து வருவது, அவர்கள் வேலையில் சேர்ந்தபின் ஒப்பந்தத்தை மாற்றி கூலியைக் குறைத்துக் கொடுப்பது. அப்போது தொழிலாளர்கள் வேண்டா வெறுப்புடனேயே வேலையில் ஈடுபடுகின்றனர். தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை நிரூபிக்க இயலாதவர்களாக ஆகிவிடுகின்றனர். அதனால் தங்கள் நிலைமையை அல்லாஹ்விடமே முறையிடுகின்றனர்.

அநியாயக்கார அந்த முதலாளி முஸ்லிமாகவும் தொழிலாளி காஃபிராகவும் இருந்தால் முதலாளியின் இச்செயல் அத்தொழிலாளி இஸ்லாத்திற்கு வருவதற்கு தடையாகி விடு(வது மட்டுமல்ல இஸ்லாத்தைப் பற்றித் தவறாக விளங்குவதற்கும் காரணமாகி விடு)கிறது. அதன் பாவமும் அந்த முதலாளிக்கு வந்து விடுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட வேலைக்கும் கூடுதலான வேலைகளை கொடுத்து, அல்லது வேலை நேரத்தைக் கூட்டி, அடிப்படைக் கூலியை மட்டுமே கொடுப்பது. மேலதிகமான வேலைகளைச் செய்ததற்கான கூலியைக் கொடுக்காமலிருப்பது.

கூலி வழங்குவதில் கால தாமதம் செய்வது: தொழிலாளர்களின் கூலியை, அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு, திரும்பத் திரும்பக் கேட்டு, பல முறை முறையிட்டு, நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய பிறகே கொடுப்பது. முதலாளி கூலியைத் தாமதப்படுத்துவதின் நோக்கம் திரும்பத் திரும்பக் கேட்டு, தொழிலாளியை சோர்வடையச் செய்வதற்காகக் கூட இருக்கலாம். பிறகு அவன் தனது உரிமையை – ஊதியம் கேட்பதை விட்டு விடுவான். அல்லது தொழிலாளர்களின் ஊதியங்களை தனது தொழிலில் முடக்கி பலன் பெறுவதற்காகக் கூட இருக்கலாம்.

இன்னும் சில முதலாளிகள் அந்த ஊதியங்களை வட்டிக்கு விடுகின்றனர். ஆனால் இந்த ஏழைத் தொழிலாளியோ தன் அன்றாட உணவுக்குக் கூட காசு இல்லாமல் சிரமப்படுகிறான். மட்டுமல்ல தன் மனைவி, மக்களின் செலவுக்கும் அவனால் பணம் அனுப்ப முடியவில்லை. அவர்களின் தேவையை நிறைவு செய்வதற்காகத்தானே அவன் நாடு துறந்து வந்திருக்கின்றான். இத்தகைய அக்கிரமக்காரர்களுக்குக் கேடுதான்! துன்புறுத்தக்கூடிய ஒரு நாளின் தண்டனையின் வாயிலாக.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘அல்லாஹ் கூறுகிறான்: மறுமையிம் மூன்று பேர்களுடன் நான் சண்டையிடுவேன். ஒருவன் எனது பெயரால் வாக்குக் கொடுத்து ஏமாற்றியவன், மற்றொருவன் சுதந்திரனை விற்று அதன் கிரயத்தை உண்டவன், மூன்றாமவன் ஒருவரைக் கூலிக்கு அமர்த்தி அவரிடம் முழுமையாக வேலையை வாங்கிக் கொண்டு கூலியைக் கொடுக்காதவன்’ (புகாரி)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on வேலைக்காரனுக்கு கூலி கொடுக்காதிருத்தல்

தர்மமும், அதனைத் தொடர்ந்த நோவினையும்…

2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

2:262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு இன்னும் – அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்.

2:263. கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்;. தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன்.

2:264. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;. அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது, ஒரு வழுக்குப் பாறையாகும்;. அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.

2:265. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெரு மழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.

2:266. உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.

2:267. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.

2:268. (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

2:269. தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

2:270. இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.

2:271. தான தர்மங்களை நீங்கள் வெளிப்டையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழை எளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்க இன்னும் நல்லது. அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

2:272. (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.

2:273. பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.

2:274. யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on தர்மமும், அதனைத் தொடர்ந்த நோவினையும்…

நல்ல, கெட்ட செயல்களை அல்லாஹ் எவ்வாறு பதிவு செய்கிறான்?..

79 – என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புகாரி-5269: அபூஹுரைரா(ரலி)

80- உங்ளில் ஒருவர் தமது இஸ்லாத்தை அழகாக்கிக் கொண்டால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அந்த தீமையின் அளவு போன்றே பதிவு செய்யப்படும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புகாரி-42: அபூஹுரைரா(ரலி)

81- (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு)கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும்(அவை இன்னின்னவை என நிர்ணயித்து)எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்)எண்ணிவிட்டாலே- அதை செயல்படுத்தாமல் விட்டாலும் சரி- அவருக்காக தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால்,அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக,எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் தீமை செய்ய எண்ணி,(அல்லாஹ்வுக்கு அஞ்சி)அதைச் செய்யாமல் கை விட்டால்,அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழுநன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ,அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.

புகாரி-6491: இப்னு அப்பாஸ் (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நல்ல, கெட்ட செயல்களை அல்லாஹ் எவ்வாறு பதிவு செய்கிறான்?..

மனிதனின் நன்றி மறக்கும் குணம் பற்றி..

இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர்,(இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித் தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான்; அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (அல் குர்ஆன்: 39:8)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மனிதனின் நன்றி மறக்கும் குணம் பற்றி..

அல்லாஹ்வுக்கு இணைவைத்தலே மாபெரும் அநீதி

78- எவர் இறைநம்பிக்கைக் கொண்டு(பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திட வில்லையோ என்னும்(6:82) வசனம் அருளப்பட்டபோது அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது. ஆகவே அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தனக்குத் தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்? ஏன்று கேட்டனர். ஆதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இந்த வசனம் குறிப்பிடுவது)அதுவல்ல, அது இணைவைப்பையே குறிக்கின்றது. என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே,நிச்சயமாக இணைவைப்பு மாபெரும் அநீதியாகும் என்று (அறிஞர்)லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றதே,(31:13)அதை) நீங்கள் கேட்கவில்லையா? என்று சொன்னார்கள்.

புகாரி-3429: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அல்லாஹ்வுக்கு இணைவைத்தலே மாபெரும் அநீதி

தோலின் உணர்ச்சிகள் செத்தாலும் ஓயாத தண்டனை பற்றி..

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவ னாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன்: 4:56)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on தோலின் உணர்ச்சிகள் செத்தாலும் ஓயாத தண்டனை பற்றி..

நல்ல பிள்ளைகளுக்கு வேதகட்டளை!


4-36 மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

46-15 மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்; ”இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.

17-23 அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

17-24 இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக! மேலும், ”என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை (ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

31-14 நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால்குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே ”நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

31-15 ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக – பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”

அல்குர்ஆன்
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நல்ல பிள்ளைகளுக்கு வேதகட்டளை!

வஹ்ஹாபி என்பதன் அர்த்தம்

தௌஹீதின் எதிரிகள் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களைச் சம்பந்தப்படுத்தி தௌஹீதுடைய அடிப்படையில் இருப்பவனுக்கு ‘வஹ்ஹாபி’ என்று சொல்கின்றனர். இவர்கள் உண்மை சொல்லுகின்றவர்களாக இருந்தால் அப்துல் வஹ்ஹாபுடைய மகன் முஹம்மதைச் சம்பந்தப்படுத்தி ‘முஹம்மதி’ (முஹம்மதைச் சேர்ந்தவன்) என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். (அவ்வாறு சொல்லியிருந்தால் முஹம்மத் (ஸல்) அவர்களைச் சார்ந்தவன் என்று கருத்துக் கொள்ள இடமேற்பட்டு விடும் என்று எதிரிகள் அஞ்சியிருக்கலாம்.)

‘அல்வஹ்ஹாப்’ என்ற அஸ்மாஉல் ஹுஸ்னாவிலுள்ள அல்லாஹ்வின் பெயரை இவர்கள் சம்பந்தப்படுத்தி ‘வஹ்ஹாபி’ என்று பெயர் சூட்டப்பட வேண்டுமென அல்லாஹ் விரும்பியிருக்கிறான்.

‘அல்வஹ்ஹாப்’ என்பதற்கு அதிகம் கொடை கொடுப்பவன் என்று பொருள்படும். அது அல்லாஹ்வுக்குரிய அழகிய பெயர்களில் ஒன்றாகும். ‘வஹ்ஹாபி’ என்றால் கொடையாளனாகிய அல்லாஹ்வைச் சார்ந்தவன் என்று பொருள்படும். (ஷிர்க்கு, பித்அத்துக்கெதிராக புரட்சி செய்தவர் முஹம்மத் என்பவர் தான். இவருடைய தந்தையின் பெயர் அப்துல் வஹ்ஹாப் என்பதாகும். இப்பெயரின் அர்த்தம் அல்வஹ்ஹாப் என்ற அல்லாஹ்வின் அடிமை என்பதாகும்.

கம்பளித்துணிக்கு ‘ஸூப்’ என்று அரபியில் சொல்லப்படும். கம்பளித்துணியை அணிகின்றவனுக்கு ‘ஸூபி’ என்று சொல்லப்படும். ஏழ்மையுடன் இப்படியான துணியுடனிருக்கும் ஒரு கூட்டத்துக்கே ‘ஸூபிகள்’ என்று வழங்கப்படலாயிற்று.

எனவே நிச்சயமாக ‘வஹ்ஹாபி’ என்ற சொல் அல்வஹ்ஹாப் என்ற அல்லாஹ்வுடைய பெயருடன் தொடர்பு படுகின்றது. அந்த அல்லாஹ் தான் இவனுக்கு தௌஹீதைக் கொடையாக அருளி, அதன்பால் மக்களை அழைக்கக் கூடியதாகவும் வாய்ப்பை ஏற்படுத்தினான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on வஹ்ஹாபி என்பதன் அர்த்தம்

அல்லாஹ் ஏற்படுத்தும் ஒளி!

அல்லாஹ் வானங்கள், பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்). அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை : விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது. அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப் படுகின்றது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று, மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

(அல்குர்ஆன் – 24:35)
Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ் ஏற்படுத்தும் ஒளி!

இஸ்லாத்திற்கு முந்தைய நல்ல செயல்கள்

ஒரு நிராகரிப்பவன் இஸ்லாத்தை தழுவும் முன்பு செய்த நல்லறங்கள் பற்றி…….

77- அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பு தர்மம் செய்தல், உறவினரைச் சேர்(ந்து வாழ்)தல்,போன்ற நல்ல காரியங்களைச் செய்துள்ளேன். அவற்றிற்கு (மறுமையில் எனக்கு) நன்மை ஏதும் உண்டா? என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்கூலி)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்! என்று பதிலளித்தார்கள்.

புகாரி-1436: ஹகீம் பின் ஹிஸாம்(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இஸ்லாத்திற்கு முந்தைய நல்ல செயல்கள்