நபி (ஸல்) அவர்கள் விரும்பிய வலதுபுறம்!

152- நபி (ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும் தலை முடி சீவுவதிலும் சுத்தம் செய்வதிலும் அவர்களுடைய எல்லா விஷயங்களையும் வலது புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.

புகாரி-168: ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நபி (ஸல்) அவர்கள் விரும்பிய வலதுபுறம்!

மனிதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள்!

அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணி கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்). (அல்குர் ஆன்: 18:48)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மனிதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள்!

மறைவிடங்களைச் சுத்தம் செய்வதுபற்றி….

151-உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விடவேண்டாம். கழிப்பிடம் சென்றால் ஆண்குறியைத் தமது வலக் கரத்தால் தொடவோ தூய்மைப் படுத்தவோ வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-153: அபூ கதாதா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மறைவிடங்களைச் சுத்தம் செய்வதுபற்றி….

இவ்வுண்மையை நீங்கள் செவியேற்க வேண்டாமா?

(நபியே! – தூதரே) நீர் கூறுவீராக: “கியாம (இறுதி) நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு (ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டு வரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா? (அல்குர்ஆன்: 28:71)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இவ்வுண்மையை நீங்கள் செவியேற்க வேண்டாமா?

மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-2)

கடமையான, நஃபிலான தொழுகைகளை தொழுவது ஹராம்.
;

இது போன்றே தொழுகைக்குரிய நேரத்தில் பூரணமான ஒரு ரக்அத்தின் நேரத்தை அவள் அடைந்திருந்தால் அவளின் மீது அத்தொழுகை கடமையாகும். அப்படி அவள் அடைந்து கொண்டது தொழுகையின் ஆரம்ப நேரமாக இருந்தாலும் சரியே. அல்லது அதன் கடைசி நேரமாக இருந்தாலும் சரியே. ஆரம்ப நேரத்திற்கு உதாரணம்: சூரியன் மறைந்த பின் ஒரு ரக்அத்துக்கான நேர அளவு கடந்ததும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுவது போன்றதாகும். இப்படியிருந்தால் அவள் சுத்தமான பின் மஃரிப் தொழுகையை கழாச் செய்வது அவளின் மீது கட்டாயமாகும். ஏனெனில் அவள் மாதவிடாய்க்கு முன்பு ஒரு ரக்அத்தை அதற்குரிய நேரத்தில் அடைந்து விட்டாள். கடைசி நேரத்திற்கு உதாரணம்: சூரியன் உதயமாவதற்கு முன்பு ஒரு ரக்அத்தை அடைந்து கொள்ளும் நேரத்தில் ஒரு பெண் சுத்தமாகி விட்டாள். இவள் ஒரு ரக்அத்திற்குரிய வசதியான பகுதியை அந்த நேரத்தில் அடைந்து விட்டாள். சுத்தமானதும் சுபுஹுத் தொழுகையை கழாச் செய்வது கட்டாயமாகும். ‘சுப்ஹானல்லாஹ்’ ‘அல்ஹம்துலில்லாஹ்’ ‘அல்லாஹ் அக்பர்’ போன்ற திக்ருகளையும், சாப்பிடும் போதும் அது அல்லாத நேரத்திலும் ‘பிஸ்மில்லாஹ்’ கூறவும். பிக்ஹ் ஹதீஸ்களைப் படிப்பதும், துஆச் செய்வதும், குர்ஆனைக் கேட்பதும் மாதவிடாயப்பெண்ணுக்கு ஹராமாகாது. எனினும் அவள் குர்ஆனைப் பார்த்தோ, அல்லது நாவால் மொழியாமல் உள்ளத்தால் சிந்தித்து ஓதுவதாலோ குற்றம் ஏதும் கிடையாது. உதாரணமாக குர்ஆனையோ, அல்லது பலகையையோ முன்னால் வைத்துக்கொண்டு உள்ளத்தால் ஓதுவதுபோல. மாதவிடாய்க்காரி தேவையுள்ள நேரத்தில் தவிர மற்ற நேரங்களில் குர்ஆனை ஓதாமலிருப்பது மிக்க நல்லது. தேவையுள்ள நேரமென்பது அவள் மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியையாகவோ அல்லது தேர்வு நேரத்தில் தேர்வுக்காக பாடம் படிக்க வேண்டிய மாணவியாகவோ இருப்பது போன்றதாகும்.

பர்லான சுன்னத்தான நோன்பு பிடிப்பது ஹராம்.

அப்படியே அவள் நோன்பு நோற்றாலும் கூடாது. எனினும் பர்லான நோன்பை அவள் கழாச் செய்ய வேண்டும். ஒரு பெண் நோன்பு நோற்றிருக்கும் சமயம் மாதவிடாய் வந்து விட்டால், அப்படி வந்தது சூரியன் மறைவதற்கு ஒரு வினாடிக்கு முன்பாக இருந்தாலும் நோன்பு முறிந்து போய் விடும். அது பர்லான நோன்பாக இருந்தால் அதைக் கழாச் செய்வது அவளுக்கு கட்டாயமாகும். ஒரு பெண் சூரியன் மறையும் முன் மாதவிடாய் வருவதாக உணர்ந்தாள். ஆனாலும் சூரியம் மறைந்தபின் தான் வெளியானது. இந்நேரத்தில் அவளின் நோன்பு பூரணமாகி விடும். ஒரு மாதவிடாய்க்காரி பஜ்ர் உதயமாகி ஒரு வினாடிக்குப் பின் சுத்தமாகி நோன்பு நோற்றால் அவளின் நோன்பு செல்லுபடியாகாது. பஜ்ர் உதயமாவதற்கு சிறிது நேரத்திற்கு முன் அவள் சுத்தமாகி நோன்பு நோற்றால் அது நிறைவேறிவிடும். பஜ்ருக்குப் பிறகே அவள் குளித்திருந்தாலும் சரியே.

 

அல்லாஹ் நாடினால் தொடரும்

Posted in இஸ்லாமியப் பெண் | Comments Off on மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-2)

இப்னு உமர் (ரலி)யின் கூற்று!

150-ஹப்ஸா (ரலி)வின் வீட்டுக் கூரை மீது ஒரு வேலையாக நான் ஏறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும் கிப்லாவின் திசையை பின்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் தமது (இயற்கைத்) தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கண்டேன்.

புகாரி-149: இப்னு உமர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இப்னு உமர் (ரலி)யின் கூற்று!

இவ்வுண்மையை நீங்கள் நோக்க வேண்டாமா?

“கியாம நாள் வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா?” என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 28:72)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இவ்வுண்மையை நீங்கள் நோக்க வேண்டாமா?

நீர் உம்முடைய தேவைக்காக…..

149- ‘நீர் உம்முடைய தேவைக்காக (மலம் கழிக்க) உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தஸ்ஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி (ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்” என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

புகாரி-148: இப்னு உமர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நீர் உம்முடைய தேவைக்காக…..

தொடர்ந்து பின் முற்றுபெற்ற வஹீ!

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) தூதர்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (அல்குர்ஆன்: 4:163)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on தொடர்ந்து பின் முற்றுபெற்ற வஹீ!

மல ஜலம் கழிக்கும் போது….

148- நீங்கள் மலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்பக்கமாக ஆக்கியோ பின்பக்கமாக ஆக்கியோ உட்காராதீர்கள். கிழக்குத் திசையையோ மேற்குத் திசையையோ முன் நோக்குங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) அறிவித்து விட்டுத் தொடர்ந்து நாங்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கே கிப்லாவுக்கு எதிரில் அமரும் விதத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். அதை விட்டு நாங்கள் திரும்பி அமர்ந்து அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடினோம் எனக் கூறினார்கள்.

புகாரி-394: அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மல ஜலம் கழிக்கும் போது….