மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-2)

கடமையான, நஃபிலான தொழுகைகளை தொழுவது ஹராம்.
;

இது போன்றே தொழுகைக்குரிய நேரத்தில் பூரணமான ஒரு ரக்அத்தின் நேரத்தை அவள் அடைந்திருந்தால் அவளின் மீது அத்தொழுகை கடமையாகும். அப்படி அவள் அடைந்து கொண்டது தொழுகையின் ஆரம்ப நேரமாக இருந்தாலும் சரியே. அல்லது அதன் கடைசி நேரமாக இருந்தாலும் சரியே. ஆரம்ப நேரத்திற்கு உதாரணம்: சூரியன் மறைந்த பின் ஒரு ரக்அத்துக்கான நேர அளவு கடந்ததும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுவது போன்றதாகும். இப்படியிருந்தால் அவள் சுத்தமான பின் மஃரிப் தொழுகையை கழாச் செய்வது அவளின் மீது கட்டாயமாகும். ஏனெனில் அவள் மாதவிடாய்க்கு முன்பு ஒரு ரக்அத்தை அதற்குரிய நேரத்தில் அடைந்து விட்டாள். கடைசி நேரத்திற்கு உதாரணம்: சூரியன் உதயமாவதற்கு முன்பு ஒரு ரக்அத்தை அடைந்து கொள்ளும் நேரத்தில் ஒரு பெண் சுத்தமாகி விட்டாள். இவள் ஒரு ரக்அத்திற்குரிய வசதியான பகுதியை அந்த நேரத்தில் அடைந்து விட்டாள். சுத்தமானதும் சுபுஹுத் தொழுகையை கழாச் செய்வது கட்டாயமாகும். ‘சுப்ஹானல்லாஹ்’ ‘அல்ஹம்துலில்லாஹ்’ ‘அல்லாஹ் அக்பர்’ போன்ற திக்ருகளையும், சாப்பிடும் போதும் அது அல்லாத நேரத்திலும் ‘பிஸ்மில்லாஹ்’ கூறவும். பிக்ஹ் ஹதீஸ்களைப் படிப்பதும், துஆச் செய்வதும், குர்ஆனைக் கேட்பதும் மாதவிடாயப்பெண்ணுக்கு ஹராமாகாது. எனினும் அவள் குர்ஆனைப் பார்த்தோ, அல்லது நாவால் மொழியாமல் உள்ளத்தால் சிந்தித்து ஓதுவதாலோ குற்றம் ஏதும் கிடையாது. உதாரணமாக குர்ஆனையோ, அல்லது பலகையையோ முன்னால் வைத்துக்கொண்டு உள்ளத்தால் ஓதுவதுபோல. மாதவிடாய்க்காரி தேவையுள்ள நேரத்தில் தவிர மற்ற நேரங்களில் குர்ஆனை ஓதாமலிருப்பது மிக்க நல்லது. தேவையுள்ள நேரமென்பது அவள் மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியையாகவோ அல்லது தேர்வு நேரத்தில் தேர்வுக்காக பாடம் படிக்க வேண்டிய மாணவியாகவோ இருப்பது போன்றதாகும்.

பர்லான சுன்னத்தான நோன்பு பிடிப்பது ஹராம்.

அப்படியே அவள் நோன்பு நோற்றாலும் கூடாது. எனினும் பர்லான நோன்பை அவள் கழாச் செய்ய வேண்டும். ஒரு பெண் நோன்பு நோற்றிருக்கும் சமயம் மாதவிடாய் வந்து விட்டால், அப்படி வந்தது சூரியன் மறைவதற்கு ஒரு வினாடிக்கு முன்பாக இருந்தாலும் நோன்பு முறிந்து போய் விடும். அது பர்லான நோன்பாக இருந்தால் அதைக் கழாச் செய்வது அவளுக்கு கட்டாயமாகும். ஒரு பெண் சூரியன் மறையும் முன் மாதவிடாய் வருவதாக உணர்ந்தாள். ஆனாலும் சூரியம் மறைந்தபின் தான் வெளியானது. இந்நேரத்தில் அவளின் நோன்பு பூரணமாகி விடும். ஒரு மாதவிடாய்க்காரி பஜ்ர் உதயமாகி ஒரு வினாடிக்குப் பின் சுத்தமாகி நோன்பு நோற்றால் அவளின் நோன்பு செல்லுபடியாகாது. பஜ்ர் உதயமாவதற்கு சிறிது நேரத்திற்கு முன் அவள் சுத்தமாகி நோன்பு நோற்றால் அது நிறைவேறிவிடும். பஜ்ருக்குப் பிறகே அவள் குளித்திருந்தாலும் சரியே.

 

அல்லாஹ் நாடினால் தொடரும்

This entry was posted in இஸ்லாமியப் பெண். Bookmark the permalink.