மலைகளைப் போன்ற மேகங்கள்

கேள்வி எண்: 26. இன்று நாம் விமானங்கள் மூலம் மேகங்களுக்கு மேலே சென்று ‘மேகக் கூட்டங்கள் மலைகளைப் போன்று’ இருப்பதைக் காண்கிறோம். ஆனால், விமானங்கள் கண்டுபிடிக்கப்படாத 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவனால் அருளப்பட்ட திருமறையில் இப்பேருண்மையை விளக்கும் வசனம் எது? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on மலைகளைப் போன்ற மேகங்கள்

சூரா பகராவின் இறுதி இரு வசனங்களின் சிறப்பு..

465. ‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 – 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 4008 அபூ மஸ்ஊத் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on சூரா பகராவின் இறுதி இரு வசனங்களின் சிறப்பு..

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

463. ”எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுக!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்கள். நான் ‘அந்நிஸா’ எனும் (4 வது) அத்தியாயத்தை ஓதினேன். ‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போது (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’ எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்தபோது ‘நிறுத்துங்கள்’ என்று கூறினார்கள் அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிவதை கண்டேன்.

புஹாரி:5055 இப்னு மஸ்ஊத் (ரலி)

464. நாங்கள் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்து கொண்டிருந்தோம். (ஒரு சமயம்) இப்னு மஸ்ஊத் (ரலி) ‘யூசுஃப்’ எனும் (12 வது) அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒருவர் (அதனை ஆட்சேபிக்கும் விதமாக) ‘இவ்வாறு இந்த அத்தியாயம் அருளப்படவில்லை” என்று கூறினார். இப்னு மஸ்ஊத் (ரலி), ‘(இவ்வாறுதான்) நான் இறைத்தூதர் (ஸல்) முன்னிலையில் ஓதினேன். அவர்களும், ‘மிகச் சரியாக ஓதினாய்’ என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். அப்போது (ஆட்சேபிக்க வந்த) அந்த மனிதரின் வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டார்கள். ‘மதுவையும் அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா?’ என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறிவிட்டு, அந்த மனிதருக்கு (மது அருந்திய குற்றத்திற்கான) தண்டனையை நிறைவேற்றும்படி செய்தார்கள்.

புஹாரி: 5001 அல்கமா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

குர்ஆனை ஓதுவதில் சிறந்தவரிடம் ஓதக்கூறுதல்..

462. நபி (ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, ‘வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும்வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை..” என்னும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்” என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப் (ரலி), ‘என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை இப்னு கஅப் அவர்கள் (ஆனந்தம் மேலிட்டு) அழுதார்கள்.

புஹாரி:3809 அனஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on குர்ஆனை ஓதுவதில் சிறந்தவரிடம் ஓதக்கூறுதல்..

வேதங்களை நம்புவது! (பாகம்-2)

குர்ஆனில் பெயர் கூறப்பட்ட வேதங்கள்.

மூஸா (அலை) தவ்ராத்2:53,5:44,66,68,17:2

ஈஸா (அலை) இன்ஜீல்5:46,110

தாவூத் (அலை) ஸபூர் 4:163,17:55

முஹம்மது (ஸல்) அல்குர்ஆன்39:1,2,42:7,14:4,15:9

சுஹ்ஃபு என்ற ஏடுகள் —- 3:84, 87:18.19 Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on வேதங்களை நம்புவது! (பாகம்-2)

குர்ஆனை மனனம் செய்தவரின் சிறப்பு..

460. குர்ஆனை ஓதும் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, நார்த்தைப் பழம் போன்றதாகும். அதன் மணமும் நன்று சுவையும் நன்று. குர்ஆனை ஓதாத இறைநம்பிக்கையாளரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதற்கு மணம் கிடையாது (ஆனால்,) அதன் சுவை இனிமையானது. குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலையானது, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் மணம் நன்று. அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதற்கு மணமும் கிடையாது. அதன் சுவையும் கசப்பானதாகும்.

புஹாரி : 5427 அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி)


461. குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 4937 ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on குர்ஆனை மனனம் செய்தவரின் சிறப்பு..

குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்..

458. ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் – ரலி-) தம் வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) ‘அல் கஹ்ஃப்’ (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து) விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், ‘இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்” என்று கூறினார்கள்.

புஹாரி: 3614 பராஉ பின் ஆஸிப் (ரலி)

459. நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) ‘அல்பகரா’ எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காணமுடியவில்லை.காலை நேரமானதுபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் ‘இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)” என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளிய வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘அது என்னவென்று நீ அறிவாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை (தெரியாது)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் ‘உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள். மக்களை விட்டும் அது மறைந்திருக்காது” என்று கூறினார்கள்.

புஹாரி:5018 உஸைத் இப்னு ஹூளைர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்..

Backgam Mon எனும் ஒருவகை சூதாட்டம்

மக்களிடையே பரவலாக வழக்கத்திலுள்ள பெரும்பாலான விளையாட்டுகள் ஹராமான காரியங்களை உள்ளடக்கியுள்ளன. அதில் ஒன்று Backgam Mon எனும் ஒருவகை விளையாட்டாகும். இதை விளையாட ஆரம்பித்தால் இது போன்ற பல விளையாட்டுகளுக்கு இது இட்டுச் செல்லும். பல சூதாட்டங்களுக்கு வழி திறந்து விடுகின்ற Backgam Mon எனும் இந்த விளையாட்டு குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளார்கள்: Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on Backgam Mon எனும் ஒருவகை சூதாட்டம்

விடியற்காலையில் வந்த இறை வேதனை எதனால்?

11:77. நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் (இறைதூதர்) வந்த போது (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார். (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக “இதுநெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.

11:78. அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள் இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு) ப் பரிசுத்தமானவர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமான படுத்தாதீர்கள். நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.

11:79. (அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர். நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்” என்று கூறினார்கள்.

11:80. அதற்கு அவர் “உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்க போதுமான) வலிமையுள்ள ஆதரவின் பால் நான் ஒதுங்க வேண்டுமே” என்று (விசனத்துடன்) கூறினார்.

11:81. (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள் “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கிறோம். நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது. எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும் போதேஉம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியை தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்து கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபித்து விடவில்லையா?

11:82. எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்து விட்ட போது. நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம். இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.

11:83. அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன. (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.

அல்குர்ஆன்: சூரா-அல் ஹூது


26:165. “உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்டநோக்கோடு) நெருங்குகின்றீர்களா?

26:173. இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.

அல்குர்ஆன்: சூரா- அஷ்ஷூஃரா
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on விடியற்காலையில் வந்த இறை வேதனை எதனால்?

மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?

11:7. “….உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே!
அவர்களிடம்) ”நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், ”இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை என்றும் கூறுவார்கள்” Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?