குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

463. ”எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுக!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்கள். நான் ‘அந்நிஸா’ எனும் (4 வது) அத்தியாயத்தை ஓதினேன். ‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போது (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’ எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்தபோது ‘நிறுத்துங்கள்’ என்று கூறினார்கள் அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிவதை கண்டேன்.

புஹாரி:5055 இப்னு மஸ்ஊத் (ரலி)

464. நாங்கள் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்து கொண்டிருந்தோம். (ஒரு சமயம்) இப்னு மஸ்ஊத் (ரலி) ‘யூசுஃப்’ எனும் (12 வது) அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒருவர் (அதனை ஆட்சேபிக்கும் விதமாக) ‘இவ்வாறு இந்த அத்தியாயம் அருளப்படவில்லை” என்று கூறினார். இப்னு மஸ்ஊத் (ரலி), ‘(இவ்வாறுதான்) நான் இறைத்தூதர் (ஸல்) முன்னிலையில் ஓதினேன். அவர்களும், ‘மிகச் சரியாக ஓதினாய்’ என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். அப்போது (ஆட்சேபிக்க வந்த) அந்த மனிதரின் வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டார்கள். ‘மதுவையும் அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா?’ என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறிவிட்டு, அந்த மனிதருக்கு (மது அருந்திய குற்றத்திற்கான) தண்டனையை நிறைவேற்றும்படி செய்தார்கள்.

புஹாரி: 5001 அல்கமா (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.