கேள்வி எண்: 74. ‘ஒரு முஃமின் இன்னொரு முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து இருக்கக்கூடாது. மூன்று நாட்கள் கழித்து ஸலாம் கூறட்டும். (ஸலாமை கேட்டு மற்றவர்) பதில் கூறிவிட்டால் இருவருமே நற்கூலியில் பங்குபெறுவர். மாறாக பதில் ஸலாம் கூறாவிட்டால் அவர் பாவத்திற்கே திரும்பி விடுகிறார். முன்னால் ஸலாம் கூறியவர் இறைவெறுப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார் என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் மற்றும் இது இடம்பெற்ற நூல் எது?
பதில்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), ஆதார நூல்: அபூதாவூத்.