தொழுகையில் தஷஹ்ஹுது எனும் நிலை..

226. நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலா மீகாயீல, அலா ஃபுலானின் வ ஃபுலானின் (அடியார்களுக்கு முன் அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல் மீது சாந்தி உண்டாகட்டும். இன்னார் இன்னார் மீது சாந்தி உண்டாகட்டும் என்று கூறிவந்தோம். நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி ‘நிச்சயமாக அல்லாஹ்வே ஸலாம் (சாந்தியளிப்பவன்) ஆக இருக்கின்றான். ஆகவே உங்களில் ஒருவர் தொழுகையின் இருப்பில் இருக்கும் போது அத்தஹியாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து, வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அஸ்ஸலாமு அலைனா வலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்’ (சொல் செயல் பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினாலே வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறியதாக அமையும். அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸுலுஹூ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி கூறுகிறேன்) என்றும் கூறட்டும். பிறகு தாம் நாடிய பிரார்த்தனையை ஒதிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

புகாரி- 6230: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.

0 Responses to தொழுகையில் தஷஹ்ஹுது எனும் நிலை..

  1. வஹ்ஹாபி says:

    ‘தஷஹ்ஹுது’ என்பதே சரியான சொல். தலைப்பில் சரி செய்யவும்.