எது இஸ்லாம்?

இஸ்லாம்!

இது ஒரு புதிய மதமோ, தத்துவமோ அல்ல! மாறாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் தனது இறைத்தூதர்கள் மூலமாக அனுப்பி அருளிய சத்திய வாழ்க்கை நெறியே அது! உலகில் வாழும் ஐவரில் ஒருவருக்கு இஸ்லாம் ஒரு மார்க்கம் மட்டுமல்ல, மாறாக, அவர்களின் முழுமையான வாழ்க்கை வழிமுறையுமாகும்.

இறைவனால் முஸ்லிம்கள் என சிறப்பிக்கப்பட்ட மக்கள் பின்பற்றும் மார்க்கமான இஸ்லாம் அமைதியும், அருளும் கொண்ட மிக உன்னதமான இறைமார்க்கமாகும். பாவமன்னிப்பும், பரஸ்பர அன்பும் பாராட்டும் வாழ்வியல் நெறியும் ஆகும்.

இதை விடுத்து மற்றவர்கள் தமது நம்பிக்கையுடன் இணைத்துள்ள ஏனைய வழிமுறைகள், செயற்பாடுகள் எதுவொன்றுக்கும் இஸ்லாத்துடன் எந்த தொடர்பும் இல்லை.

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் (IPC) – தமிழ் பிரிவு
குவைத்.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.