Monthly Archives: November 2007

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!

3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்;. உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்). 3:43. ”மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக” (என்றும்) கூறினர்.3:44. (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!

விளைச்சல் நிலத்தை குத்தகைக்கு விடுதல்.

993. எங்களில் சிலருக்கு உபரி நிலங்கள் சில இருந்தன. அவர்கள், ‘நாங்கள் அவற்றை அவற்றின் விளைச்சலில் மூன்றிலொரு பங்குக்கோ, கால் பங்குக்கோ, அரைப் பங்குக்கோ குத்தகைக்கு விடுவோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘விளைச்சல் நிலம் வைத்திருப்பவர் அதில் தானே பயிரிடட்டும்; அல்லது தன் சகோதரருக்கு (மனீஹாவாகக்) கொடுத்து விடட்டும். அப்படிக் கொடுக்க மறுத்தால் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on விளைச்சல் நிலத்தை குத்தகைக்கு விடுதல்.

முகாபரா முஹாகலா முஸாபனா விற்பனை முறை தடை.

992. நபி (ஸல்) அவர்கள் முகாபராவையும் பலன் உறுதிப்படாத நிலையிலுள்ள, மரத்திலுள்ள கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள் மேலும், பொன் நாணயத்திற்கும் வெள்ளி நாணயத்திற்கும் (பகரமாக) மட்டுமே (அவற்றை) விற்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (மரத்திலுள்ள கனிகளுக்குப் பகரமாக சேமிக்கப்பட்ட, உலர்ந்த கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். எனினும்) ‘அராயா’வில் மட்டும் அப்படி விற்பதற்கு அனுமதியளித்தார்கள். … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on முகாபரா முஹாகலா முஸாபனா விற்பனை முறை தடை.

கேலி – கிண்டல் செய்வது அறிவீனர்களின் செயல்

கேள்வி எண்: 51. “(கேலி-கிண்டல் செய்யும்) அறிவீனர்களில் ஒருவனாக இருப்பதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று மூஸா நபி (அலை) அவர்கள் இறைவனிடம் துஆச் செய்ததன் மூலம் கேலி-கிண்டல் செய்வது அறிவில்லாத மூடர்களின் செயல் என்பதை உணர்த்தும் திருமறை வசனம் எது?

Posted in கேள்வி பதில் | Comments Off on கேலி – கிண்டல் செய்வது அறிவீனர்களின் செயல்

மகரந்த சேர்க்கை.

991. ”மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை யாரேனும் விற்றால் அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; வாங்கியவர் (தமக்குச் சேர வேண்டுமென்று) நிபந்தனையிட்டிருந்தால் தவிர!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2204 இப்னு உமர் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மகரந்த சேர்க்கை.

குத்துமதிப்பாக கணக்கிட்டு விற்க தடை.

985. ”நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளை குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதை அராயாவில் (மட்டும்) அனுமதித்தார்கள்!” புஹாரி :2188 ஜைது பின் தாபித் (ரலி). 986. ”நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்காக மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். அராயாவில் (மட்டும்) அதற்கு அனுமதி வழங்கினார்கள். அராயாக்காரர்கள் (அராயா அடிப்படையில் மரங்களைப் பெற்றவர்கள்) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on குத்துமதிப்பாக கணக்கிட்டு விற்க தடை.

பல தெய்வ வழிபாடு

“அல்லாஹ் ஒருவனே; அவனன்றி வேறு இறைவன் இல்லை” என்ற கருத்தை வழங்கும் இஸ்லாத்தில் பல தெய்வ நம்பிக்கைக்கு இம்மியளவும் இடமில்லை. அத்தகைய நம்பிக்கைக்குரிய அனைத்து வாயில்களும் மூடிவிட்ட இஸ்லாத்தில் நம்பிக்கையிலும் நடைமுறையிலும் சொல்லிலும் செயலிலும் வணக்கத்திலும் வழிபாடுகளிலும் பல தெய்வம் என்ற வாடை கூட வீசுவது இல்லை. மற்ற மதங்களில் ஆளுக்கொரு தெய்வம் இருப்பதை நீங்கள் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on பல தெய்வ வழிபாடு

மரத்தில் தொங்கும் கனிகள் விற்பனை பற்றி…

982. நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும்வரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும். புஹாரி :2194 இப்னு உமர் (ரலி). 983. மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை விற்பதற்கு நபி (ஸல்) தடை செய்தார்கள். மேலும், அவற்றில் எதையும் தீனார், திர்ஹம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மரத்தில் தொங்கும் கனிகள் விற்பனை பற்றி…

வியாபாரத்தில் ஏமாற்றப்படுதல்.

981. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி (ஸல்) அவர்கள். ‘நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் ‘ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!” என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரிய வந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)” என்றார்கள். புஹாரி :2117 இப்னு உமர் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on வியாபாரத்தில் ஏமாற்றப்படுதல்.

வியாபாரத்தில் உண்மை பேசுவதின் சிறப்பு.

980. ”விற்பவரும், வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2082 ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on வியாபாரத்தில் உண்மை பேசுவதின் சிறப்பு.