கேலி – கிண்டல் செய்வது அறிவீனர்களின் செயல்

கேள்வி எண்: 51. “(கேலி-கிண்டல் செய்யும்) அறிவீனர்களில் ஒருவனாக இருப்பதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று மூஸா நபி (அலை) அவர்கள் இறைவனிடம் துஆச் செய்ததன் மூலம் கேலி-கிண்டல் செய்வது அறிவில்லாத மூடர்களின் செயல் என்பதை உணர்த்தும் திருமறை வசனம் எது?
 

பதில்: “இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், ‘நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டுமென்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்’ என்று சொன்னபோது, அவர்கள் ‘(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகிறீரா?’ என்று கூறினர். (அப்பொழுது) அவர் ‘(அப்படி பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார்” (அல்குர்ஆன்: 2:6)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.