Monthly Archives: November 2006

தண்ணீர் இல்லாதபோது தயம்மம் செய்க..

206- நாங்கள் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். பைதாவு அல்லது தாத்துல்ஜைஸ், என்ற இடத்தை வந்தடைந்ததும் எனது கழுத்தணி அறுந்து (தொலைந்து) விட்டது. அதை தேடுவதற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கி விட்டோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூபக்ர் (ரலி)இடம் சிலர் வந்து … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தண்ணீர் இல்லாதபோது தயம்மம் செய்க..

ஷிர்க்கின் கேடுகளும் அதன் தீமைகளும்

நிச்சயமாக ஷிர்க்கின் தீமைகள் தனி மனித வாழ்க்கையிலும் கூட்டு வாழ்க்கையிலும் உண்டு. அவற்றில் மிக முக்கியமானவை பின்வருமாறு: 1. ஷிர்க் வைத்தல் மனித இனத்துக்கு இழிவை ஏற்படுத்துகின்றது. அது மனிதனுடைய கண்ணியத்தைக் குறைக்கின்றது. அவனுடைய அந்தஸ்தைத் தாழ்த்துகின்றது. அவனுடைய அந்தஸ்து யாதெனில், அல்லாஹ் அவனைப் பூமியில் தன்னுடைய பிரதிநிதியாக அமைத்து, அவனை கண்ணியப்படுத்தி, எல்லா வஸ்துக்களுடைய … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on ஷிர்க்கின் கேடுகளும் அதன் தீமைகளும்

இழிவு தரும் வேதனையே இவர்களின் கூலி!

6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களைவிடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இழிவு தரும் வேதனையே இவர்களின் கூலி!

செத்த ஆட்டின் தோலைப் பதனிடுக…

205- மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மம் வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இதன் தோலை நீங்கள் பயன் படுத்தியிருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். இது செத்ததாயிற்றே! எனத் தோழர்கள் கூறியதும், இதை உண்பது தான் தடுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-1492: இப்னு … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on செத்த ஆட்டின் தோலைப் பதனிடுக…

காற்றுப் பிரிந்தால் உளூசெய்க…

204- தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும் வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம் என்றார்கள். புகாரி-137: அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on காற்றுப் பிரிந்தால் உளூசெய்க…

அசுத்தமான தடுக்கப்பட்ட உணவு வகைகள்

(நபியே) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்பந்திக்கப்பட்டு, வரம்பை … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அசுத்தமான தடுக்கப்பட்ட உணவு வகைகள்

சமைத்த இறைச்சி உணவை உண்டால்.. …

200- நபி (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஒரு ஆட்டின் தொடைப்பகுதி இறைச்சியைச் சாப்பிட்ட பின் உளூ செய்யாமலே தொழுதார்கள். புகாரி-207: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) 201- நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடை இறைச்சியை வெட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே கத்தியைப் போட்டு விட்டுத் தொழுதார்கள். உளூ … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on சமைத்த இறைச்சி உணவை உண்டால்.. …

எச்சரிக்கை எதற்காக?

இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். (அல்குர்ஆன்: 14:52)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on எச்சரிக்கை எதற்காக?

சட்ட மாற்றத்திற்குப் பின்….

199- ஒருவர் தமது மனைவியின் (இரு கால், இரு கை,ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உடலுறவு கொள்வாராயின் அவர் மீது குளிப்புக் கடமையாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-291: அபூஹூரைரா (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on சட்ட மாற்றத்திற்குப் பின்….

இரகசியங்களை முற்றிலும் அறிந்தவன்!

நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைந்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 35:38)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இரகசியங்களை முற்றிலும் அறிந்தவன்!