ஷிர்க்கின் கேடுகளும் அதன் தீமைகளும்

நிச்சயமாக ஷிர்க்கின் தீமைகள் தனி மனித வாழ்க்கையிலும் கூட்டு வாழ்க்கையிலும் உண்டு. அவற்றில் மிக முக்கியமானவை பின்வருமாறு:

1. ஷிர்க் வைத்தல் மனித இனத்துக்கு இழிவை ஏற்படுத்துகின்றது. அது மனிதனுடைய கண்ணியத்தைக் குறைக்கின்றது. அவனுடைய அந்தஸ்தைத் தாழ்த்துகின்றது. அவனுடைய அந்தஸ்து யாதெனில், அல்லாஹ் அவனைப் பூமியில் தன்னுடைய பிரதிநிதியாக அமைத்து, அவனை கண்ணியப்படுத்தி, எல்லா வஸ்துக்களுடைய பெயர்களையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான் என்பதாகும்.

வானம் பூமியிலுள்ள எல்லாவற்றையும் அவனுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். இவ்வமைப்பில் அவனுக்குத் தலைமைத்துவத்தையும் கொடுத்து விட்டான். எனினும் அவன் தனது மகிமையை மறந்து இவ்வுலகிலுள்ள அற்பமான சிலவற்றைத் தான் வணங்கி வழிபடக்கூடிய தெய்வங்களாக எடுத்துக் கொண்டான்.

மனிதனுக்கு ஊழியம் செய்வதற்கென்றும், அவன் அறுத்துப் புசிப்பதற்கும் அல்லாஹ் படைத்திருக்கும் காளைமாட்டைத் தமது வணக்கத்திற்குரிய தெய்வமாகப் பல இலட்சகணக்கான இந்தியர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். சில முஸ்லிம்கள், மரணித்து அடக்கம் செய்யப்பட்டவர்களின் கப்றுகளிடத்தில் சென்று அவர்களிடம் தமது தேவைகளை வேண்டுகின்றனர்.

அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களோ இவர்களைப் போன்ற (அல்லாஹ்வின்) அடிமைகள். தமக்குத்தாமே எந்தவித நன்மையோ, தீமையோ செய்துக் கொள்ள சக்தியற்றவர்கள். இன்று நாம் கண்கூடாகக் காணுகின்றவற்றில் மனிதன் செய்யும் ஷிர்க்கில் இதனைவிட இழிவான ஒன்றைக் காண முடியுமா?

மரணித்தவர்களைப் பொறுத்தமட்டில், உயிருடனிருப்பவர்கள் தமக்காக அல்லாஹ்விடம் துஆக் கேட்க வேண்டும் என்றளவு தேவையுடையவர்களாக இருக்கின்றனர். நாம், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம். அல்லாஹ்வையன்றி அவர்களிடம் எமது தேவைகளை வேண்டிப் பிரார்த்திக்க மாட்டோம். இதுபற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

“(நபியே!) அல்லாஹ்வையன்றி எவற்றை அவர்கள் (ஆண்டவனென) அழைக்கிறார்களோ அவற்றால், யாதொன்றையும் படைக்க முடியாது. அவைகளும் (அவனால் படைக்கப் பட்டவைகளாகும். (அன்றி அவை) உயிருள்ளவைகளுமல்ல; உயிரற்றவர்கள் (மரித்தோர்) எப்பொழுது (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவை அறியா. (ஆகவே அவை, அவர்களிடà®%

This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.