Category Archives: ஈமான் (நம்பிக்கை)

மறுமை நாள் (அத்தியாயம்-9)

விசாரணை மஹ்ஷர் வெளியில் மிக முக்கிய அம்சம் அங்கு நடக்கும் விசாரணையாகும். மனிதர்கள் அனைவரும் தமது இறுதியான உலகுக்குப் போகும் முன்னால் அவர்கள் அங்கு செல்வதற்கான நியாயத்தை முன்வைப்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும். இந்த விசாரணை குறித்து அல்குர்ஆன் பல இடங்களில் மிகத் தெளிவாக விளக்குகிறது : “நிச்சயமாக அவர்கள் எம்மிடமே மீண்டு வர வேண்டும். … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-9)

மறுமை நாள் (அத்தியாயம்-8)

மஹ்ஷர் வெளியும், அதன் நிகழ்வுகளும் பிரபஞ்ச அழிவின் பிறகு மனிதன் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான். மனிதர்கள் அனைவரும் ஒரு வெட்டவெளியில் திரட்டப்பட்டு அந்த விசாரணை நடைபெறும். அவ்வாறு மனிதர்கள் ஒன்று திரட்டப்படும் வெட்டவெளியை ‘மஹ்ஷர்’ என அல்குர்ஆனும் சுன்னாவும் அழைக்கின்றன. இவ்வாறு மனிதர்கள் மீண்டும் எழுப்பப்பட ஒரு ஸூர் ஊதப்படும் என அல்குர்ஆன் கூறுகிறது. … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-8)

மறுமை நாள் (அத்தியாயம்-7)

உலக அழிவும், மறுமை நாளின் தோற்றமும். மறுமை நாளின் தோற்றம் இவ்வுலகின் அழிவோடு ஆரம்பமாகும் என அல்குர்ஆனும், ஸுன்னாவும் விளக்குகின்றன. அதாவது அது இன்னொரு உலகின் தோற்றம். மனிதனின் இன்னொரு வாழ்வின் ஆரம்பம். அது பிரபஞ்சத்தின் வித்தியாசமான இன்னொரு தோற்றப்பாடு. மனிதனுக்கு அது வித்தியாசமான இன்னொரு வாழ்வு! இரு கட்டங்களின் பிறகு மனிதனின் அந்த இரண்டாவது … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-7)

மறுமை நாள் (அத்தியாயம்-6)

மறுமை நாள் எப்போது தோன்றும்? மறுமை நாள் எப்போது தோன்றும்? இந்தக் கேள்விக்கான பதிலை ஒரு முஸ்லிம் எப்படி விளங்கிக் கொள்வது என்பது மறுமை நாள் பற்றிய அறிவில் அடுத்த முக்கிய அம்சமாகும். மறுமை எப்போது தோன்றும் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்த உண்மையாகும். அல்லாஹ் அதுபற்றி தன் தூதர்களுக்குக் கூட அறிவிக்கவில்லை. “மக்கள் உம்மிடம் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-6)

மறுமை நாள் (அத்தியாயம்-5)

மரணமும், அதனைத் தொடரும் (B)பர்ஜக் வாழ்வும் மரணம் யாராலும் தவிர்ந்து கொள்ள முடியாததொரு நிகழ்வு. மனிதனின் இயலாமையைத் தெளிவாகக் காட்டும் உண்மை. அவனால் என்றுமே அம்மரணத்தை வெற்றிக் கொள்ள முடியாது. அது ஓர் பயங்கர அனுபவம். எனவே, எல்லா மனிதர்களையும் அந்த மரண பயம் பீடித்தவாறே உள்ளது. அனைவரும் இதனை இயன்றளவு பிற்போட முயற்சிக்கின்றனர். இத்தகைய … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | 2 Comments

துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்

இறைவன் படைத்த நாட்கள் யாவும் சிறப்புக்குரியவையாகும்.அவற்றுள் அடியார்கள் வணக்கஙகள் புரிந்து அதன்மூலம் மாண்பைப்பெற சில நாட்களை இறைவன் சிறப்பித்துள்ளான். ஏனைய சமுதாய மக்களின் வாழ்நட்களை ஒப்பிடும்போது நமது ஆயுள் மிகவும் குறைவானதாகும். லைத்துல் கத்ரு இரவு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :- “எனது சமுதாய மக்களின் ஆயுட்காலம் அறுபது முதல் எழுபது வயது வரையாகும்”. … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்

மறுமை நாள் (அத்தியாயம்-4)

மறுமை நாள் என்ற நம்பிக்கை பகுத்தறிவு ரீதியானது. அது மனித இயற்கை வேண்டுகின்ற ஒரு அம்சம். அத்தோடு இறை நம்பிக்கை கொண்டவன் தவிர்க்க முடியாமல் மறுமை நம்பிக்கையையும் ஏற்க வேண்டியவனாகிறான். மறுமை நாள் நம்பிக்கையை ஏற்காதவன் இறைவனை மிகச் சரியான முறையில் நம்பிக்கைக் கொள்ள முடியாது. அந்நிலையில் அவன் இணைவைத்தலோடு அல்லது நிறைய பிழையான கருத்துக்களோடு … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-4)

மறுமை நாள் (அத்தியாயம்-3)

மறுமை நம்பிக்கையும், உலக வாழ்வும் அல்லாஹ் அறிவும், ஞானமும் உள்ளவன். நீதியாளன். எனவே இந்த உலகோடு வாழ்வை முடித்து விடாது, இன்னுமொரு உலகையும் அமைத்திருக்கிறான். இது தெளிவு. எனினும் முரண்பாடுகளும், குழப்பங்களும், ஏற்றத்தாழ்வுகளும் நிரைந்த இந்த உலக வாழ்வுக்குஎன்ன பொருள்? அதனை எவ்வாறு நோக்க வேண்டும்? இவ்விஷயத்தை மிக அழகான முறையில் அல்குர்ஆன் விளக்குகிறது. மனித … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-3)

மறுமை நாள் (அத்தியாயம்-2)

மறுமை வாழ்வென்பது பகுத்தறிவு ரீதியான உண்மை என வாதிக்கும் அல்குர்ஆன் அந்த நம்பிக்கையை இரு சிந்தனைகள் ஊடாக முன்வைக்கிறது. ஒன்று இறை நம்பிக்கையோடு தொடர்பு படுகிறது. இங்கு அவ்விரு சிந்தனைகளும் விளக்கப்படுகிறன: (1) இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும்: அல்குர்ஆன் மறுமை நாள் நம்பிக்கை என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என விளக்குகிறது. அதாவது … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-2)

மறுமை நாள் (அத்தியாயம்-1)

மறுமை நாள் அவசியமா? பூமி என்ற இச்சிறிய கோளில் மனித ஆயுள் வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய காலம் மட்டுமே! ஆனால் வாழ வேண்டும் என்ற ஆசையோ அவனை விட்டு பிரிவதே இல்லை. நிரந்தரமாக அழியாது வாழ வேண்டும் என்ற எண்ணம் அவனது உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்ட இயற்கை உணர்வு. அவன் உள்ளத்தில் உள்ள ஆசைகளோ எல்லையற்றவை. … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-1)