Category Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்
தொடர்ந்து நோன்பு நோற்க தடை.
714. ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உயிருடனிருக்கும் வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவேன்’ என்று நான் கூறிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்தது. (இது பற்றி) அவர்கள் என்னிடம் கேட்டபோது) ‘என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” நான் அவ்வாறு கூறியது உண்மையே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘இது … Continue reading
ரமலான் அல்லாத பிற நாட்களில் நோன்பு.
711. ”(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை. ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த … Continue reading
நோன்பில் மறதியாக….
710. ”ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1933 அபூஹுரைரா (ரலி)
அறப்போருக்கு செல்பவரின் நோன்பு.
709. இறைவழியில் (அறப் போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2840 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி).
நோன்பின் சிறப்புகள்.
707. ”நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!” என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை … Continue reading
நோன்பின் போது நாவைப் பேணுதல்.
706. ”நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் … Continue reading
இறந்தவருக்காக நோன்பு நோற்றல்.
704. ”களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1952 ஆயிஷா (ரலி) 705. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை … Continue reading
ரமலான் மாதத்தில் விடுபட்ட நோன்புகள் பற்றி…
703. எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது. புஹாரி :1950 ஆயிஷா (ரலி).
வெள்ளிக் கிழமை நோன்பிருக்க கூடாது.
700. நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமை நோன்பு வைப்பதைத் தடை செய்தார்களா என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். ‘ஆம்’ என்றார். புஹாரி :1984 முஹம்மது பின் அப்பாத் (ரலி). 701. ”உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்கவேண்டாம்!”என நபி … Continue reading
இருபெருநாள் தினங்களில் நோன்பிருக்க கூடாது.
697. இவ்விரு நாள்களிலும் நோன்பு நோற்க நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தனர். அவை நோன்பை முடித்துப் பெருநாள் கொண்டாடும் தினமும் குர்பானி இறைச்சியை நீங்கள் சாப்பிடும் நாளுமாகும். புஹாரி : 1990 அபூஉபைத் (ரலி). 698. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களும் நோன்பு நோற்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் … Continue reading