Category Archives: வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா

இறைவனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு

பகுத்தறிவு படைத்தவன் தன்னைப் படைத்த இறைவனுக்கும், படைக்கப்பட்ட படைப்புகளுக்கும் இடையிலுள்ள பல வித்தியாசங்களை விளங்கிக் கொள்வான். ஒன்று: அல்லாஹ் பிறரின் வணக்க வழிபாடுகளில் இருந்தெல்லாம் தேவையற்றவன். அவன் ஒருபோதும் தன் அடியார்களை வேண்டி நிற்க மாட்டான். பிறரை வேண்டி நிற்பது மனிதப் பண்பல்லவா! எத்தனைப் பெரிய மாமன்னரானாலும் பிறரின் உதவி ஒத்தாசைகளை விட்டு விலகி நின்று … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Comments Off on இறைவனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (3)

மனிதன் தன் பிரார்த்தனையில் இன்னாரின் பொருட்டால், அவரின் உரிமையால் என்று கூறிக் கேட்கும் போது மனிதனுக்கு ஏதோ சில உரிமைகள் அல்லாஹ்விடம் இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இப்படி நினைத்தல் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் போக்கல்ல என விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக இது முஃதஸிலாக்களின் கொள்கையாகும். இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிரிவினராவர். ‘மனிதனுக்குச் செய்ய … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (3)

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (2)

அதிய்யத்துல் ஊபி (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் வருகிறது: தொழுகைக்கு புறப்படும் ஒரு மனிதனுக்கு நபியவர்கள் கீழ்வரும் பிரார்த்தனையை சொல்ல வேண்டுமென்று கற்றுக் கொடுத்தார்கள். ‘இறைவா! உன்னிடம் பிரார்த்திப்பவர்களுக்காக உன் மீதுள்ள பாத்யதையை (ஹக்கைப்) பொருட்டாக வைத்துக் கேட்கிறேன். இதோ நான் நடந்து செல்லும் பாதையின் … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (2)

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (1)

இதுபோன்று தான் சிருஷ்டிகளைக்* கொண்டு ஆணையிட்டுத் தம் தேவையை வேண்டுவது. இதுவும் விலக்கப்பட்ட செய்கையாகும். படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்வதை எல்லா மத்ஹபுடைய இமாம்களும் வெறுத்திருக்கிறார்கள். சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்து இன்னொரு சிருஷ்டியிடம் கேட்பது கூடாதெனின், அதே சிருஷ்டியைக் கொண்டு படைத்தவனிடம் ஆணையிட்டுக் கேட்க முடியுமா? அது எப்படி அனுமதிக்கப்படும்? அல்லாஹ்வுக்கு வேண்டுமானால் தம் … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (1)

‘நபியைக் கொண்டு வஸீலா தேடுவது’ ஸஹாபாக்களின் கருத்து

நபித்தோழர்களான ஸஹாபிகளின் சொற்களில் காணப்படுகின்ற, மேலும் அவர்களின் பேச்சுகளில் பரிமாறப்பட்ட வஸீலா என்ற வார்த்தையின் தாத்பரியத்திற்கு வருவோம். ஸஹாபிகள் பற்பல சம்பவங்களைக் கூறும்போது நாயகத்தைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கியதாகவும், அவர்களைக் கொண்டு அவனிடம் வஸீலா தேடியதாகவும் (உதவி கோரியதாகவும்) அல்லாஹ்வின்பால் முன்னோக்கியதாகவும் கூறுவார்கள். பற்பல இடங்களில் இப்படிக் காணப்படுகின்றன.

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on ‘நபியைக் கொண்டு வஸீலா தேடுவது’ ஸஹாபாக்களின் கருத்து

தவஸ்ஸுல் வஸீலாவில் ஏற்பட்ட பிசகுதல்கள்

மேற்கூறிய விளக்கங்களெல்லாம் சரிவர நாம் புரிந்து கொண்டோம். அவ்விளக்கங்களிலிருந்து ‘தவஸ்ஸுல் வஸீலா’ என்ற வார்த்தைகளைப் பற்றி ஓரளவுக்கு விளங்க முடிந்தது. இவ்விரு வார்த்தைகளும் அடக்கியிருக்கும் சரியான கருத்துகள் யாவை என்பதுப் பற்றி மேலும் நாம் தெரிய வேண்டியிருக்கிறது. ஏனெனில் பற்பல மாறுபட்ட பிசகுதலான கருத்துகளை மக்கள் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்கின்றனர். ‘வஸீலா, தவஸ்ஸுல்’ என்பதின் உண்மையான … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , | Comments Off on தவஸ்ஸுல் வஸீலாவில் ஏற்பட்ட பிசகுதல்கள்

சன்மார்க்கம்!

மனிதர்கள் எவற்றைச் செய்ய வேண்டுமென்று நபியவர்கள் பணித்திருக்கிறார்களோ அவற்றைப் புரிவதால் சன்மார்க்கத்தை அடைய முடிகிறது நபியவர்கள் செய்ய வேண்டாமென்று எவற்றைத் தடுத்தார்களோ அவற்றைத் தவிர்ந்து நடக்க வேண்டும். அவர்கள் கூறிய சொற்களுக்கொப்ப செயல்பட்டு அச்சொற்களை நம்வாழ்வில் மெய்பித்துக் காட்ட வேண்டும். அப்படியானால் நிச்சயமாக நாம் சன்மார்க்கத்தை அடையலாம். அல்லாஹ்வின்பால் சென்றடைய இதைக் காட்டிலும் நேர்மையான ஒருவழியே … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on சன்மார்க்கம்!

பாங்கின் பிரார்த்தனை!

நபிகள் (ஸல்) அவர்கள் தமது உம்மத்துகளிடம் ஸலவாத்துச் சொல்லக் கூறியிருப்பதுபோல தமக்காக வஸீலாவையும், பளீலாவையும், புகழுக்குரிய இடத்தையும் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் படியும் ஏவியிருக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்டால் முஅத்தின் சொல்வதைப் போன்று நீங்களும் சொல்லுங்கள். பிறகு … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on பாங்கின் பிரார்த்தனை!

சிருஷ்டிகளிடம் கேட்பதால் விளையும் தீமைகள்

எதையும் சிருஷ்டிகளிடம் கேட்பதற்கு மூமின் முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறிப்பாக நபிமார்கள் யாரிடமும் கேட்க கூடாது. அவர்களிலும் குறிப்பாக பெருமானார் (ஸல்) அவர்கள் யாரிடமும் எதையும் கேட்கக் கூடாது. நபிமார்கள் மதிப்பாலும், கண்ணியத்தாலும் பொதுவாக மேலானவர்கள். எதையும் அல்லாஹ்விடம் கேட்பார்கள். அவர்களின் எல்லாத் தேவைகளுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on சிருஷ்டிகளிடம் கேட்பதால் விளையும் தீமைகள்

இஸ்லாத்தின் இரு அடிப்படைகள்

இஸ்லாத்தில் அடைப்படைச் சித்தாந்தங்கள் இரண்டு. ஒன்று: இணைவைக்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிப்படுவது. இரண்டு: வழிபாடுகளின் முறைகளை அல்லாஹ்வின் சட்டங்களிலிருந்தும், அவன் தூதர் காட்டித்தந்த வாஜிப், முஸ்தஹப் என்ற விதிகளிலிருந்தும் எடுத்து வழிபடுவது. தூதுவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் தோன்றியிருக்கிறார்கள். அவ்வப்போதுள்ள நபிமார்களின் ஏவல்களுக்கொப்ப அல்லாஹ்வுக்கு வணக்கங்கள் செலுத்தப்பட்டன. யூதர்களின் தௌராத் வேதம் உறுதி குலையாமல் … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , | Comments Off on இஸ்லாத்தின் இரு அடிப்படைகள்