Author Archives: Jafar

ஷஃபான் மாத இறுதியில் நோன்பு நோற்க தடை.

722. இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க வேறொருவரிடமோ நபி (ஸல்) அவர்கள் ‘இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?’ என்று கேட்டார்கள். அம்மனிதர் ‘இல்லை! இறைத்தூதர் அவர்களே!” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘நீர் நோன்பை விட்டுவிட்டால் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். ”நபி (ஸல்) அவர்கள் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஷஃபான் மாத இறுதியில் நோன்பு நோற்க தடை.

தொடர்ந்து நோன்பு நோற்க தடை.

714. ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உயிருடனிருக்கும் வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவேன்’ என்று நான் கூறிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்தது. (இது பற்றி) அவர்கள் என்னிடம் கேட்டபோது) ‘என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” நான் அவ்வாறு கூறியது உண்மையே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘இது … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தொடர்ந்து நோன்பு நோற்க தடை.

அல்லாஹ்வின் விரோதிகளுக்காக நாம் பிரார்த்திக்கலாமா?

‘இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் தம் ஜனங்களை நோக்கி, ‘நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவற்றிலிருந்தும் விலகி விட்டோம். நிச்சயமாக நாங்கள் உங்களையும் நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரையில் எங்களுக்கும், உங்களுக்குமிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள். … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வின் விரோதிகளுக்காக நாம் பிரார்த்திக்கலாமா?

ரமலான் அல்லாத பிற நாட்களில் நோன்பு.

711. ”(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை. ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ரமலான் அல்லாத பிற நாட்களில் நோன்பு.

நோன்பில் மறதியாக….

710. ”ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1933 அபூஹுரைரா (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நோன்பில் மறதியாக….

அறப்போருக்கு செல்பவரின் நோன்பு.

709. இறைவழியில் (அறப் போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2840 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on அறப்போருக்கு செல்பவரின் நோன்பு.

நோன்பின் சிறப்புகள்.

707. ”நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!” என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நோன்பின் சிறப்புகள்.

நோன்பின் போது நாவைப் பேணுதல்.

706. ”நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நோன்பின் போது நாவைப் பேணுதல்.

இறந்தவருக்காக நோன்பு நோற்றல்.

704. ”களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1952 ஆயிஷா (ரலி) 705. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இறந்தவருக்காக நோன்பு நோற்றல்.

மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றல்

“அல்லாஹ் அருளிய (வேதத்)தின் பாலும் (அவனுடைய) ரஸூலின் பாலும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், ‘எங்களுடைய மூதாதைகள் எதன் மீதிருக்கக் கண்டோமோ, அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்குப் போதும்’ எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் யாதொன்றையும் அறிந்து கொள்ளாமலும் நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்)?” (5:104) நபி (ஸல்) அவர்கள் … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றல்